|
ஏப்ரல் 2011: வாசகர் கடிதம் |
|
- |ஏப்ரல் 2011||(1 Comment) |
|
|
|
|
அபர்ணா, பெண்களுக்கும் நகைசுவை உணர்வு அதிகம்னு உங்க கதைகள் உணர்த்துது. உங்கள் கதைச் சேவை தொடர என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
அமுதா வேலாயுதம் (ஆன்லைனில்)
*****
குடும்பத்துடன் லாஸ் ஏஞ்சலஸுக்குப் போயிருந்த போது தென்றல் இதழைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சாதனை மனிதர்களுடன் நேர்காணல், விசா பெறுவதற்குப் போனவரின் சிரிக்க வைக்கும் அனுபவம் என்று பலவகைக் கட்டுரைகளைத் தாங்கி வரும் தென்றல் அற்புதம். எல்லாவற்றுக்கும் மேலாக, எனது நெடுநாள் நண்பரும், மனிதநேயம் கொண்டவருமான டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் அவர்களுக்குக் கிடைத்த கௌரவம் பற்றிய செய்தி என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. மிக நல்ல, கருத்துச் செறிவுள்ளவற்றை இங்குள்ளோருக்குத் தரும் தென்றலுக்கு எனது பாராட்டுகள்.
பேரா. ஆர். சுவாமிநாதன், சுகர்லேண்ட், ஹூஸ்டன், டெக்ஸாஸ்.
*****
'ஒரு பிடி சிரிப்பு' சிறப்பான கவிதை, மழலையின் சிரிப்பை மனதில் நிறுத்தியது. அருமை.
ராஜசேகரன் (ஆன்லைனில்)
***** |
|
'ஞானக்கூத்தன்' கதையை ஒலிவடிவத்தில் தருவதற்கு எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. காரணம், இதைப் படிக்கும்போது பொங்கி வந்த சிரிப்பை என்னால் அடக்க இயலவில்லை. மிகவும் யதார்த்தமான அருமையான நடையுடன் கூடிய கதை. அபர்ணா பாஸ்கருக்கு வாழ்த்துக்கள்.
சரஸ்வதி தியாகராஜன்
*****
நானும் எனது மனைவியும் எது தவறினாலும் தென்றல் பத்திரிகையை மாதா மாதம் படிக்கத் தவறுவதில்லை. எல்லா கட்டுரைகள், அரசியல், ஆன்மிகம், சமையல், சினிமா சம்பந்தப்பட்ட செய்திகள் சுவையோ சுவை. மார்ச் இதழில் இந்திரா சௌந்தரராஜன் மற்றும் டாக்டர் பத்மினி சர்மாவின் நேர்காணல்களைப் படித்த பின் நடுத்தர வர்கத்தைச் சேர்ந்த அவர்கள் எப்படி வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி உள்ளார்கள் என்பது நன்கு புலப்படுகிறது. வை.மு. கோதைநாயகியைப் பற்றிய கட்டுரை நெஞ்சை உருக்கியது. இவ்வளவு திறமைமிக்க ஓர் எழுத்தாளர், பாடகி, பாடலாசிரியர், சமூக சேவகியை நம் நாடு சரியாக கவுரவிக்கவில்லை என்று தோன்றுகிறது.
சரோஜா, ராமபத்ரன், கூப்பர்டினோ
*****
தென்றல் பத்திரிகையை விடாமல் நாங்கள் பைத்து வருகிறோம். அமெரிக்க அனுபவங்கள் அருமை. ழிஸிமி விசிடர் பெற்றோர்களின் எண்ணங்களை அப்படியே பிரதிபலித்தது. பாராட்டுகள்.
ஸ்ரீனிவாசன் கோபாலகிருஷ்ணன் (மின்னஞ்சலில்) |
|
|
|
|
|
|
|