|
|
|
இதுவரை: Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாள ராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன். தொழில் பங்கு வர்த்தகமானாலும், சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவிடுகிறான். ஷாலினி ஸ்டான்போர்டு மருத்துவ மனையில் மருத்துவராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பல பிரச்சனைகளைத் தீர்த்துள்ளனர்.
ஷாலினியின் தந்தையின் நண்பர் ஒருவர் தன் சுத்த சக்தி தொழில்நுட்ப நிறுவனமான வெர்டியானின் தலைமை விஞ்ஞானி தாக்கப்பட்டு, நிறுவனமே பெரும் ஆபத்தி லிருப்பதாகக் கூறவே சூர்யாவின் திறமையை நன்கு அறிந்திருந்த ஷாலினியின் தந்தை அவரிடம் சூர்யாவை அறிமுகம் செய்ய அழைத்து வந்தார். மார்க் சூர்ய சக்திதான் சுத்த சக்தித் தொழில்நுட்பங்களிலேயே சிறந்தது என்பதால் அதை மேம்படுத்தப் பாடுபடுவதாகக் கூறி, நான்கு வகை சுத்த சக்தி நுட்பங்களைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தார். முதலில் மாசு விடாத நுட்பங்களைப் பற்றி விவரித்து விட்டு, அடுத்து எத்தனால், பயோடீஸல், இயற்கை வாயு, கரித்திரவம் போன்ற சில மாசு குறைவான, எரிபொருள் நுட்பங்களைப் பற்றி விளக்கினார். அப்போது திடீரென...
மார்க் கார்பன் அடைப்பு (sequestration) நுட்பத்தைப் பற்றி விவரிக்க ஆரம்பிக் கையில், ஆராய்ச்சிக் கூடத்தின் நடுவி லிருந்து ஒரு வெடிச்சத்தம்! அனைவரும் திடுக்கிட்டு அங்கு நோக்கினர். அங்கிருந்து ஒரு சிறிய புகை மண்டலம் கிளம்பியிருந்தது.
முரளி பதறிப் போய்விட்டார். 'மார்க், என்ன இது? பெரிய வெடி, புகை! எதாவது நெருப்புப் பிடிச்சிடுச்சா? இங்கிருந்து வெளியே போயிடலாமா? தீயணைப்பு ஆளுங்க சீக்கிரம் வந்துடுவாங்களா?'
ஒரு நொடி திடுக்கிட்டிருந்த மார்க் வெகு சீக்கிரமே சுதாரித்துக்கொண்டு, ஒரு சோகப் புன்னகையுடன் முரளியை அமைதிப் படுத்தினார். 'கவலைப் படாதீங்க முர்லி. பயப்படறா மாதிரி ஒண்ணுமில்லை. ஒரு புதுவிதமான பேட்டரி நுட்பம் சோதனை செஞ்சுக்கிட்டிருக்கோம். அதுல ஒண்ணு வெடிச்சிடுச்சு அவ்வளவுதான். சமீபத்தில சில வாரங்களா இது அப்பப்போ நடந்துக் கிட்டுத்தான் இருக்கு. இந்த மாதிரி ஆகுதுங்கறதுனாலதான் நாங்க உங்ககிட்டச் சொல்லி சூர்யாவை வரவழைச்சிருக்கேன். இதே நுட்பம் அதுக்கு முன்னால பல மாதங்கள் ஒழுங்காத்தான் இருந்தது. இப்ப தான் திடீர்னு...'
சூர்யா தீர்க்க யோசனையோடு ஓர் அதிர் வேட்டை வீசினார், 'ஹ¥ம்... ஒரு மாசமா, சரியா ரெண்டு மூணு நாளுக்கு ஒரு தடவை நடக்குது போலிருக்கு! பேட்டரி இயல்பியல் பிரகாரம் அது முழுசா சார்ஜ் ஆனதும் கரெண்ட் ஓடாம சும்மா நிறுத்திடணும்... ஆனா ஷார்ட் ஆகி பொறி வந்து பேட்டரில இருக்கற ரசாயனப் பொருட்கள் வெடிக்கறா மாதிரி ஆகுதுன்னு நினைக்கறீங்க போலிருக்கு. பேட்டரில ஹைட்ரொஜன் திடமாகிறது பத்தின உங்க கணக்குத் தப்பாயிருக்கலாம்னு உங்க குழுவில சிலர் சொல்றாங்க. ஆனா உங்க கருத்து அப்படி யில்லை. ஆனா ஏன் இப்படி ஆகுதுன்னும் தெரியலை. அதைத்தான் நான் கண்டு பிடிக்கணும் இல்லையா?'
ஆச்சர்யத்தால் மார்க்கின் வாய் பிளந்த படியே சில நொடிகள் நின்றுவிட்டது. கிரணும் முரளியும் சூர்யாவின் திறனைப் பல ஆண்டுகளாக நன்கு அறிந்திருந்ததால் சிறிதும் ஆச்சர்யப்படவில்லை. ஆனாலும் அவர் அந்த பேட்டரிப் பிரச்சனையின் விவரங்களைப் பற்றி, யாரும் சொல்லாமல் எப்படித் தெரிந்து கொண்டார் என்று அறிய ஆவலாயினர். கொஞ்ச நேரத்துக்குப் பின் தன்னைக் குலுக்கிக்கொண்ட மார்க் வியப்பை அள்ளிக் கொட்டினார்.
'வாவ்! சூர்யா, நீங்க துப்பறியறதில திறமை வாய்ந்தவர்னு ஏற்கனவே அந்த ஷோ டிக்கட் பத்தி யூகிச்சு எனக்குக் காட்டிட்டீங்க. ஆனா இது... திறமைக்கு மேல! எதோ வூடூ மந்திர மாயம் மாதிரி இருக்கு. நான் நிச்சயமா இதை முரளிகிட்ட மூச்சுகூட விடலை. எதோ பிரச்சனைன்னுதான் சொன்னேன். ஆனா நீங்க பிட்டுப் பிட்டு வச்சிட்டீங்க. அதுவும் இந்தத் துறையோட ஆழ்ந்த சித்தாந்தங் களோட! எப்படி சூர்யா?'
சூர்யா புன்னகையோடு விளக்கினார். 'எனக்கு இன்னும் அவ்வளவா புரியலை. ஆனா, கவனிச்ச விஷயங்களை வச்சுச் செஞ்ச யூகந்தான்.'
மார்க் இன்னும் அடங்காத வியப்போடு, 'கவனிச்சதுல யூகிச்சீங்களா? என்ன கவனிச் சீங்க? அப்படி ஒண்ணும் வெளிப்படையா இருக்கறா மாதிரி தெரியலையே' என்றார்.
கிரணும், முரளியும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டு புன்னகைத்தனர். முரளி முறுவலுடன் 'மார்க், வெளிப்படையா இருந்துட்டா, நானும் நீங்களும் கண்டு பிடிச்சிடலாமே. வேற யாருக்கும் தெரியாத தடயங்களை, ரெண்டு நொடிக்குள்ள பார்த்து, புரிஞ்சுக்கிட்டு அதை அடிப்படையா வச்சு ஒரு நூறு மாடிக் கட்டிடம் கட்டினா மாதிரி யூகிச்சுடறதுதான் சூர்யா. சொல்லுங்க சூர்யா. என்ன கவனிச்சீங்க, எப்படி யூகிச்சீங்க?' என்றார்.
சூர்யாவும் புன்னகைத்தார். 'ரொம்பப் புகழாதீங்க முரளி. அப்படி ஒண்ணும் சிதம்பர ரகஸ்யமில்லை இது. ரொம்பப் பெரிய யூகமும் இல்லை. வெறும் கவனிப்புத் தான். இதோ பாருங்க இந்த கம்ப்யூட்டர் திரையை' என்று அருகிலிருந்த ஒரு கம்ப்யூட்டர் திரையைக் காட்டினார்.
அதைப் பார்த்த கிரண் கைதட்டி 'பிரமாதம் சூர்யா' என்று ஆர்ப்பரித்தான்.
மார்க்கும், முரளியும் இன்னும் புரியாமல் விழிப்பதைப் பார்த்து கிரணே மேலும் விளக்கினான். 'இங்க பாருங்க மார்க். இந்த மாதிரி ஒவ்வொரு முறையும் கடந்த சில வாரங்களில பேட்டரி வெடிச்சப்போ எல்லாம் ஒரு மைக்ரோஸா·ப்ட் எக்ஸெல் ஸ்ப்ரெட்ஷீட்ல குறிச்சு வச்சிருக்காங்க. அதோட ஏன் அப்படி நடக்குது, அதைப் பத்தி உங்க கணிப்பு என்னங்கறதெல்லாம் இருக்கு. ஆனா இது பேட்டரி வெடிப்புன்னு குறிப்பா சொல்லலை, எதோ பிர்ச்சனை யைப் பத்தின லாக் ·பைல்னு தெரியுது. அதுல இருக்கற விவரங்கள் ஆனா பேட்டரி நுட்பங்களைப் பத்தி இருக்கறதுனால இந்தப் பிரச்சனையாத்தான் இருக்கணும்னு யூகிச் சிருக்காரு சூர்யா. அப்படித்தானே சூர்யா?'
சூர்யா முறுவலுடன் ஆமோதித்தார். 'எக்ஸலென்ட் கிரண்!' |
|
மார்க் சிலாகித்தார். 'ஆஹா, ரெண்டு நொடிக்குள்ளன்னு முர்லி சொன்னது சரிதான். அட்டகாசம். அந்த கம்ப்யூட்டர் திரை இங்க இருக்கறதை நான் கவனிக்கவே இல்லை. நீங்க என்னடான்னா, அதைக் கவனிச்சு, புரிஞ்சுகிட்டு, உடனே அதுக்கும் இந்த அசம்பாவிதத்துக்கும் உள்ள பிணைப் பையும் யூகிச்சிட்டீங்களே!'
| தென்துருவத்தின் மேல் ஓஸோன் மட்டத் தில் ஏற்பட்டிருந்த ஓட்டை, இப்போ மாற்றுக் குளிர்பதனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தற துனால ஓரளவுக்கு மூட ஆரம்பிச் சிருக்கறா மாதிரி. உலக வெப்பத் துக்கும் அவசரமா நிவாரணம் செய்யணும். | |
கிரண் சிரித்துக் கொண்டு முரளியிடம் தமிழில் கூறினான். 'ஆமாமாம். அப்பா, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுன்னு அம்மா சொல்லுவாளே, அதுல சூர்யா பெரியா கில்லாடியாக்கும் இல்லை!' என்றான்.
மார்க் அவன் கூறுவது புரியாமல் விழிக் கவும், முரளி சிரித்துக்கொண்டு 'ஒண்ணு மில்லை மார்க், அது எங்க தாய் மொழியில ஒரு பழமொழி. ஸாரி, மொழி பெயர்த்தா அதோட சாரமே போயிடும் விட்டுத் தள்ளுங்க' என்றார்.
சூர்யா மீண்டும் விஷயத்துக்கு வந்தார். 'சரி, மார்க் இந்தப் பிரச்சனைக்குக் கொஞ்ச நேரம் கழிச்சுத் திரும்பி வரலாம். அதுக்கு முன்னாடி, கார்பன் அடைப்பு, அப்புறம் மாசு சுத்தம் அதைப்பத்தி எதோ சொல்லிக் கிட்டிருந்தீங்களே. மேல சொல்லுங்க.'
மார்க் பெருமூச்சு விட்டுவிட்டுத் தொடர்ந் தார், 'மாசு சுத்தத்துக்கு முதல் உதாரணம், வண்டிகளில் இப்போது பயன்படுத்தப் படும் கேட்டலிடிக் கன்வெர்ட்டர்கள். முன்னாடி, ஆரம்பகால வண்டிங்க தங்க அழுக்குப் புகையை நேரடியாக கக்கிக்கிட்டிருந்துச்சு. வண்டிங்க ரொம்பக் கம்மியா இருந்த போது அது அவ்வளவா பிரச்சனை கிளப்பலை. ஆனா இப்போ...'
அவர் தொடரும் முன் கிரண் இடை மறித்தான். 'இப்பதான் மில்லியன் கணக்கில வண்டிங்க ஓடிக்கிட்டிருக்கே. காத்தே பழுப்பானதும்தான் அதை நிவர்த்திக்க முயற்சி செய்யற நிர்ப்பந்தம் வந்தது.'
மார்க் தலையாட்டிவிட்டுத் தொடர்ந்தார். 'அதனால், புகையை வெளிவிடும் முன் அதில் உள்ள மாசை ரொம்பக் குறைக்கும் காடலிடிக் கன்வர்ட்டர்களை புகைக் குழாயில் பொருத்துமாறு அரசாங்கம் உத்தரவு போட்டிச்சு. மேலும், வண்டிகளை அவ்வப்போது சோதனை செஞ்சு ஸ்மாக் எனப்படும் மாசுக் காற்றை ஓரளவுக்கு மேல் வெளியிடாதவாறு பார்த்துக் கொள்ளும் படியும் உத்தரவிட்டிச்சு. இப்போ, மாசு வாயுக்கள் மட்டும் இல்லாம, மற்றும் பல விதமான மாசு ஏற்படுத்தும் ரசாயனக் கழிவுப் பொருட்களைச் சுத்தமாக்கும் நுட்பங்களும் வந்திருக்கு. தொழிற்சாலைகளின் புகைச் சிம்னிகளிலிருந்தும், திரவக் கழிவுக் கால்வாய்களிலிருந்தும் தீய பொருட்கள் வெளியிடப் படாமல் சுத்தம் செய்யும் தொழில்நுட்பங்கள் பல உருவாக்கப் பட்டிருக்கு. இன்னும் தீவிரமா ஆராய்ச்சியும் செஞ்சுக்கிட்டிருக்காங்க இப்போ புதுசா கரியடைப்பு (carbon sequestration) எனப்படும் துறையில் பலப்பல நுட்பங்கள் ஆராயப்பட்டு வருது...'
கிரண் மீண்டும் இடை புகுந்தான். 'அது என்ன? நான் இப்போ எங்கத் துறையில கார்பன் பரிமாற்றம் (carbon exchange) அப்ப்டின்னு ஒண்ணு ரொம்ப அடிபடுது. அதேதானா? ஆனா அதுல ஒண்ணும் நுட்பம் இருக்கறா மாதிரி தெரியலை. வெறுமே அதிகம் மாசு விடறவங்க அதிகமா விடாதவங்ககிட்ட இருந்து மாசு விடாததுக் கான கணக்கை வாங்கி அதை வச்சு தங்க மேல விழக்கூடிய தண்டனைக் கட்டணத் தைத் தவிர்க்கறதுன்னுதுதான் தெரியும்...'
மார்க் முகம் சுளித்தார். 'அது வெறும் நிதித் துறை தகிடுதத்தம். உலகத்துல வெளிவிடப் படற மாசைக் குறைக்கறதில்லை. பிரச்சனை யைத் தள்ளித்தான் போடும், நிவாரணம் கொடுக்காது. ஆனா கரியடைப்புங்கறது, வெளிவிடப் படற கரி மாசைக் கடல் அல்லது சுரங்கம் போன்ற இடங்களில அடைச்சு வெளிவிடாமத் தடுக்கறது. அதுல நிறையத் தொழில்நுட்பமும் இருக்கு, உலகச் சூழலுக் கும் நல்லது. இந்த மாதிரி நுட்பங்களால மாசையும் குறைத்து, பூமி வெப்ப அதிகரிப் பையும் கட்டுப்படுத்த முடியும் எனும் நம்பிக்கை துளிர்விட ஆரம்பிச்சிருக்கு.'
முரளி ஆவலுடன் கேட்டார், 'அப்படி நடக்கும்னு நிச்சயமா நம்பறீங்களா?'
மார்க் நம்பிக்கையுடன் 'நடக்கணும் முர்லி, நடந்தே தீரணும்' என்று கூறிவிட்டுத் தொடர்ந்தார். 'ஒரு முன்னுதாரணம் இருக்கு. கொஞ்ச வருஷத்துக்கு முன்னால, க்ளோரோ ·ப்ளூரோ கார்பன்களால (Chloro Fluro Carbon - CFC)
தென்துருவத்தின் மேல் ஓஸோன் மட்டத் தில் ஏற்பட்டிருந்த ஓட்டை, இப்போ மாற்றுக் குளிர்பதனத் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தறதுனால ஓரளவுக்கு மூட ஆரம்பிச் சிருக்கறா மாதிரி. உலக வெப்பத்துக்கும் அவசரமா நிவாரணம் செய்யணும். முடியும்னு நம்பறேன். அதுக்குத்தான் தீவிரமா முயற்சிக்கறேன்' என்று கூறியவர் ஆக்ரோஷத்துடன் சூர்யாவிடம் கோரிக்கை விடுத்தார். 'அந்த முயற்சியை எந்தக் கிராத கர்களோ தடுக்கப் பார்க்கறாங்க. நீங்கதான் அது யார், ஏன் செய்யறாங்கன்னு கண்டு பிடிச்சு அவங்க சதியைத் தகர்க்கணும்.'
'நிச்சயமா செய்வோம் மார்க். இது உலகுக்கே முக்கியமான முயற்சி' என்று உறுதி அளித்தார் சூர்யா.
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|
|