Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நலம்வாழ | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
சுத்த சக்தியின் சங்கடம் (பாகம்- 9)
- கதிரவன் எழில்மன்னன்|ஏப்ரல் 2008|
Share:
Click Here Enlargeஇதுவரை:Silicon Valley-இல் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா தமது துப்பறியும் திறமையால் முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் துப்பறிவதில் ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன். தொழில் பங்கு வர்த்தகம். ஆனால், சூர்யாவுடனேயே அதிக நேரம் செலவிடுகிறான். ஷாலினி ஸ்டான் போர்ட் மருத்துவ மனையில் மருத்துவர், பயோமெடிகல் ஆராய்ச்சி நிபுணர்.

ஷாலினியின் தந்தையின் நண்பர் ஒருவர் தன் சுத்த சக்தி தொழில்நுட்ப நிறுவனமான வெர்டியானின் தலைமை விஞ்ஞானி தாக்கப்பட்டு, நிறுவனமே பெரும் ஆபத்திலி ருப்பதாக கூறவே சூர்யாவின் திறமையைப் பற்றி நன்கு அறிந்திருந்த ஷாலினியின் தந்தை அவருக்கு சூர்யாவை அறிமுகம் செய்ய அழைத்து வந்தார். மார்க் சூர்ய சக்தி தான் சுத்த சக்தித் தொழில்நுட்பங்களிலேயே சிறந்தது என்பதால் அதை மேம்படுத்தப் பாடுபடுவதாகக் கூறி அது ஏன் என்று விளக்க நான்குவகை சுத்த சக்தி நுட்பங்களைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தார். முதலில் மாசு விடாத நுட்பங்களைப் பற்றி விவரித்து விட்டு, அடுத்து எத்தனால், பயோடீஸல், இயற்கை வாயு, கரித்திரவம் போன்ற சில மாசு குறைவான எரிபொருள் நுட்பங்களைப் பற்றி விளக்கினார். அப்போது ஆராய்ச்சிக் கூடத்தில் ஒரு பேட்டரி வெடித்தது. சமீப காலமாகத்தான் அந்தப் பிரச்சனை எழுந்துள்ளதாக மார்க் கூறினார். பிறகு...

பல விதமான சுத்த சக்திகளைப் பற்றிய விரிவுரையைக் கேட்டுக் கொண்ட சூர்யா யோசனையுடன் கூறினார். 'ஹூம்... இத்தனை விதமான நுட்பங்களைப் பற்றிக் கேட்டு, எது ரொம்ப நல்லதுன்னு எனக்கு இன்னும் குழப்பமாத்தான் இருக்கு.'

மார்க் கொந்தளிப்புடன் பதிலளித்தார் 'சூர்யா, பெரும்பாலானவர்களுக்குக் குழப்ப மாத்தான் இருக்கும். எனக்கு இல்லை. இருக்கற சுத்த சக்தி நுட்பங்களிலேயே, வருங்காலத்துல மிக முக்கியமானது, மிகவும் பயனளிக்கக் கூடியது சூர்ய சக்திதான். இதுல அணுவளவுகூட சந்தேகமில்லை.'

கிரண் ஆர்வத்துடன் 'எப்படி அவ்வளவு பலமா சொல்றீங்க? வண்டிகள் ஓடறத்துக் கான எரிபொருள் சக்தியெல்லாத்தையும் விட சூர்யசக்தி மேல்ங்கறீங்களா?'

மார்க் ஆமோதித்தார். 'நிச்சயமா, கிரண். இந்த எரிக்கற விஷயம் எல்லாம், இப் போதைக்குத் தேவைதான். நான் ஒத்துக் கறேன். ஆனா எந்த வித எரிபொருளும் நூறு சதவிகிதம் சுத்தம் கிடையாது. இப்போ இருக்கறதை விட சுத்தமானாலும், ஓரளவுக்கு மாசு வெளிவிடத்தான் செய்யும். மக்கள் தொகை வளர வளர, இந்தியா, சைனா, ஆப்பிரிக்கா போன்ற பிரதேசங்கள் முன்னேற முன்னேற, அந்த மாசு அதிகரிக் கும். பயோடீஸல், எத்தனால் எல்லாம் ஸெல்லுலோஸிக் எரிபொருட்களைக் குப்பைப் பொருட்களிலிருந்து செஞ்சாப் பரவாயில்லை. இல்லாட்டா, அதுக்கும் பயிர், மரம் வளர்க்க இடம், நிறையத் தண்ணீர் எல்லாம் வேணும். இந்த மாதிரி பல பங்கங்கள் இருக்கு. சூர்ய சக்திக்கு அப்படி ஒண்ணும் கிடையாது. பலப்பல பில்லியன் வருடங்களா இந்த உலகம் முழுக்க சக்தி கொடுக்கறது சூர்யன். செடிகளுக்கும் உணவாக்க சக்தி கொடுக்கறது சூர்யன். உலகத்துல இருக்கற எந்தப் பரப்பிலிருந்தும் சக்தி உற்பத்தி செய்யக் கூடியது சூர்யன். களங்கமே இல்லாத சக்தி சூர்ய சக்தி.'

கிரண் கைகொட்டி 'உங்களுக்கு சூர்ய சக்தி, எங்களுக்கு சூர்யா சக்தி. சரியாப் போச்சு!' என்றான்.

மார்க் சிரித்துவிட்டு 'சரி, சூர்யா சக்தி, எங்க சூர்ய சக்திக்கு உதவட்டும், நல்லது தான்!' என்றார்.

முரளி 'ஆனா, சூர்யனிலிருந்து ஒரு நாளைக்குப் பத்து பன்னிரெண்டு மணி நேரந்தானே சக்தி உற்பத்தி பண்ண முடியும்? அது எப்படிப் போதும்?' என்று கேட்டார்.

மார்க் 'ரொம்ப நல்ல கேள்வி. உற்பத்தி செய்யற சக்தியை சேமிச்சு வச்சு அப்புறமாப் பயன்படுத்தக் கூடிய நுட்பங்கள் நிச்சயமா இல்லாம சூர்ய சக்தி நுட்பம் மட்டும் நிறைவு கிடையாது.'

முரளி புன்னகையுடன் 'இது சிவனோட பார்வதி சேர்ந்து அர்த்த நாரீஸ்வரனா இருக்கறா மாதிரி போலிருக்கு. ரெண்டும் சேர்ந்தாத்தானே நிறைவு!' என்றார்.

மார்க் சிரித்தபடி 'அப்படியும் சொல்லலாம். புத்த மதத்துல யிங், யாங்குன்னு சொல்லு வாங்க. ஓரே பொருளின் ரெண்டு அம்சங்கள். நான் அப்படித்தான் நினைக் கிறேன். அதுனாலதான் வெர்டியான் சூர்ய சக்தி மட்டுமில்லாம பேட்டரி நுட்பத்துலயும் தீவிர முயற்சி எடுத்துக்கிட்டிருக்கு. சக்தி சேமிப்புலயும் பல நுட்பங்கள் இருக்கு. சிலர் உப்பை உருக்கி (molten salt), அது மீண்டும் உறையும் போது சக்தியை மீட்கலாம்னு ஆராய்ச்சி செஞ்சுக்கிட்டிருக்காங்க. அப்படி நிறையச் சொல்லலாம். எனக்கு என்னவோ, பேட்டரி நுட்பந்தான் உன்னதம்னு தோணுது. ஏன்னா, அதை எளிதாப் பலதுக்கும் பயன்படுத்தலாம். சின்னது, பெரிசு எல்லாத்துக்கும் பயனாகும், கையோட கூட எடுத்துக்கிட்டுப் போகலாம். ஹைப்ரிட் கார்கள், முழு எலக்ட்ரிக் கார்கள், கம்ப்யூட்டர்கள், ·போன்கள் எல்லாத்துக்கும் பயன்படும் இல்லையா? அதுமட்டுமில்லை. பேட்டரி நுட்பம் ரொம்ப முன்னேறினா, எந்த சுத்த சக்தி நுட்பத்திலிருந்தும் உற்பத்தி யாக்கும் மின்சாரத்தை சேமிச்சுப் பயன் படுத்தலாம்.'

'ஆமாமாம். நீங்க சொல்றது ரொம்பச் சரி. நான் இப்பவே எங்க ஆட்களைக் கூப்பிட்டு, பேட்டரி நிறுவனப் பங்குகளோட மதிப்புப் பத்தி நோண்ட சொல்றேன். அதுல பணம் போட்டா வருங்காலத்துல பல மடங்காயிடும் போலிருக்கு!' என்றான் கிரண்.

முரளி கிரணைக் கடிந்துகொண்டார். 'சே என்ன கிரண். உலகை எப்படிக் காப்பாத் தறதுன்னு உன்னதமான விஷயத்தைப் பத்திப் பேசிக்கிட்டிருக்கறப்போ, எப்படி உனக்குப் பணத்து மேல குறியா எண்ணம் போகுது?'

கிரண் 'ஹூம்!' என்று தோளைக் குலுக்கி விட்டு, நக்கலாக 'அப்பா, என் தொழில் என்கிட்ட பணம் குடுத்த மூலதனக்காரங் களுக்கு அதை சரியான வாய்ப்புக்களில போட்டு லாபம் சம்பாதிச்சுக் குடுக்கறது. நீங்களும், ஷாலினியும், சூர்யாவும் கூட போட்டிருக்கீங்க, மறந்துட்டீங்களா? லாபம் வேண்டாமா?' என்றான்.

மார்க்கும் கூட கிரணுக்கு ஜால்ரா போட்டார். 'கிரண் சொன்னது சரிதான் முர்லி. சுத்த சக்தி நுட்பங்கள் தழைச்சு வளரணும்னா நிறைய மூலதனம் வரணும். அப்படி வரணும்னா, அதிலிருந்து லாபம் பெற முடியணும். வெறும் சமூக முன்னேற்றம், உலகைக் காப்பாத்தறத்துக்குன்னு செஞ்சா அது வெற்றி காண முடியாது. அந்த மாதிரி பல வருஷக் கணக்கா முயற்சி செஞ்சு பாத்திருக்காங்க, ஒண்ணும் முடியலை. அரசாங்க முயற்சிகூட பலிக்கலை. இப்ப சமீப காலமாத்தான் பெட்ரோலிய விலை மிக அதிகரிச்சிருக்கதுனால லாப நோக்கால மிகப்பெரிய அளவில மூலதனம் கிடைச் சிருக்கு. அதுனால பல சுத்த சக்தி நுட்பங்கள் வளர்ந்துகிட்டிருக்கு. நீ சொன்ன படியே செய் கிரண். எங்க நிறுவனத்துலயும் கொஞ்சம் போடச் சொல். வாங்கிக்கறேன்' என்றார்.
கிரண் சிரித்து விட்டு, 'அ...அ...அ... கொஞ்சம் ஏமாந்தா பஸ்மாசுரன் மாதிரி என் தலையிலயே கை வக்கறீங்களே. என் நிறுவனம், பொதுப் பங்குச் சந்தையில விக்கப்படற நிறுவனப் பங்குகளிலதான் பணம் மூலதனமிடுது. ஆரம்ப நிலை நிறுவனங்களில இல்லை' என்றான்.

மார்க் 'பஸ்மாசுரன்!' என்று கேள்விக்குறி யுடன் பார்க்கவும், முரளி சிரித்து 'அது எங்க புராணம்...' என்று ஆரம்பிக்கவும் சூர்யா குறுக்கிட்டார். 'முரளி, ஸாரி, குறுக்கிடறத் துக்கு மன்னிக்கணும். அதை அப்புறம் நிதானமா சொல்லலாமே, இப்ப வெர்டியான் நுட்பமும் பிரச்சனையும் என்னன்னு இன்னும் ஆழமாத் தெரிஞ்சுக்கலாமா?' என்றார்.

மார்க் வெர்டியானின் குறிப்பிட்ட நுட்பங் களைப் பற்றி விவரிக்கலானார். 'வெர்டியான் சூரிய சக்தி நுட்பத்துல வேலை செய்யுதுன்னு ஏற்கனவே சொன்னேன். அதுல குறிப் பிட்டுச் சொல்லணும்னா ஒண்ணு மிக அதிக அளவுல மின்சாரம் குடுக்கக் கூடிய, ஆனா பல விதமான இடங்களிலயும் பொருத்தக் கூடிய மாதிரியான வடிவத்துல உற்பத்தி செய்யக்கூடிய மூலப் பொருட்களைத் தயாரிக் கறது. இன்னொண்ணு கிரண் சொன்னா மாதிரி உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை மிக அதிக அளவுல சேமிச்சு வைச்சு பல இடங்களில பயன்படுத்தக் கூடிய பேட்டரி நுட்பம்.'

கிரண் சற்றுக் குழப்பத்துடன் கேட்டான். 'சரி, ஆனா சூர்ய சக்திலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யற நுட்பத்துலதான் ஒரு பெரிய பட்டாளமே இறங்கியிருக்கு போலிருக்கே! உங்க நுட்பத்துல அப்படி என்ன பெரிய வித்தியாசம் நல்ல அம்சமா இருக்கு?'

மார்க் புன்சிரிப்புடன் சிலாகித்தார். 'நல்ல கேள்வி கிரண். சூர்ய சக்தியிலயே நிறைய நிறுவனங்கள் வேலை செஞ்சுக்கிட்டிருக் காங்க. அதுவும் சமீபத்துல ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கும் நிறைய மூலதனம் கிடைச்சிருக்கு. அதுல நாங்களும் ஒண்ணுன்னு வச்சுக்கயேன். ஆனா, பலவிதமான சூர்ய சக்தி நுட்பங்கள் இருக்கு. அவைகளில நாங்க பெரும் ஆராய்ச்சிக் கப்புறம் கண்டு பிடிச்சிருக்கற நுட்பம் மிகப் புரட்சிகரமானது. இப்ப தயாரிக்கப்படற சூர்ய சக்தி விற்பொருட்களை விட மிக அதிக அளவில, மிகக் குறைவான செலவில, இன்னும் பலப் பல இடங்களில சக்தி உற்பத்தி செய்யக் கூடிய நுட்பம். அதுனால, எங்க நிறுவனத்துக்கு இன்னும் பெருமளவில வெற்றி கிடைக்கும்னு நான் நினைக்கிறேன்.'

கிரண் ஆர்வத்துடன் 'அப்படி என்ன தனிப்பட்ட பிரமாதமான நுட்பம்? கொஞ்சம் விளக்குங்களேன்' என்று பரபரப்பாகக் கேட்டான்.

மார்க் விளக்கலானார். 'சூர்ய சக்தியில ரெண்டு முக்கியமான வகை நுட்பங்கள் இருக்கு. ஒண்ணு சூர்ய வெப்ப சக்தி. அது சூர்ய வெப்பத்தைப் பயன்படுத்தித் தண்ணீரைக் கொதிக்க வச்சு நீராவி உற்பத்தி செஞ்சு அது மூலம் டர்பைன் ஜெனெரேட்டர்களை இயக்கி மின்சாரம் உற்பத்தி செய்யறது. இதுல நிறைய நிறுவனங்கள் வேலை செய்யறாங்க. உங்களுக்கு நல்லாத் தெரிஞ்சிருக்கணுமே? வினோத் கோஸ்லா கூட இந்தத் துறையில நிறைய மூலதனம் போட்டிருக்கார். அந்தத் துறை நல்லதுதான். நூறு சதவிகிதம் மேல்மேலும் உற்பத்தி செய்யக் கூடிய சுத்த சக்திதான். தற்சமயத்துலயே நிறைய சக்தி உற்பத்தி செய்யக் கூடியதுதான். ஆனா, பெருமளவில சக்தி உற்பத்தி செய்யணும்னா மிகப் பெரிய நிலப் பரப்பு வேணும்.

ஆனா நாங்க அந்தத் துறையில இல்லை. நாங்க சூர்ய ஒளியிலிருந்து நேரடியா மின்சாரம் தயாரிக்கற ·போட்டோ வோல்டேயிக் நுட்பத்துல வேலை செய்ய றோம். ஏன்னா, இருக்கக் கூடிய நிலப் பரப்புல எவ்வளவு சக்தி உற்பத்தி செய்யலாம்னு பாத்தா இந்தத் துறை வருங்காலத்துல இன்னும் அதிக அளவுல மின்சக்தி தர வாய்ப்பிருக்கு. அதுவும் மிகச்சிறிய இடங்களில கூட பயன் படுத்திக்கலாம்.'

கிரண் இன்னும் நம்பிக்கையில்லாமல் இழுத்தான். "ஹூம்... அப்படீன்னு சொல் றீங்க. ஆனா எங்க நிதித்துறை ஆராய்ச்சிப் பிரகாரம், சூரிய மின்சக்திக்கு ரொம்ப அதிக விலையாகுது, நிறைய சக்தி உற்பத்தி செய்ய பெரிய பெரிய ஸோலார் பேனல்கள் கூரைகள் மேல போடணும், வேற எங்கயும் போட முடியாதுங்கறாங்க? அதுவும் மன் ஹாட்டன் போன்ற இடங்களில பெரிய பல அடுக்கு மாடி கட்டிடங்களின் மொத்த சக்தித் தேவையைப் பாத்தா கூரை இடம் ரொம்ப கம்மியா வேற இருக்கே?'

மார்க் மெல்லத் தலையாட்டி ஆமோதித் தார். 'அதெல்லாம் உண்மையான குறைபாடு கள்தான். ஆனா எங்க புரட்சிகரமான நுட்பம் அதெல்லாத்தையும் தகர்த்தெறியக் கூடியது, சூர்ய சக்தி உற்பத்திக்கு ஒரு பெரும் முன்னேற்றத்தை அளிக்கக் கூடியது' என்று கூறிவிட்டுப் பெருமிதத்துடன் வெர்டியான் நுட்பத்தை விளக்கலானார்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline