முன்செல்பவர் ராசிபலன்
|
|
|
தேவன் ஒரு பாதி தேவி மறுபாதி
ரவிக்கு கோபமோ கோபம் வெடிக்கப்போகும் எரிமலை போல பொங்கி வந்தது. இன்று எப்படியாவது சாருவை கேட்டு விடவேண்டும் என நினைத்துக் கொண்டான். 'சரியான பத்தாம் பசலி' என முணுமுணுத்துக்கொண்டே காரை வலம் வந்துகொண்டிருந்தான்! ஆறு வயது மகன் பால்கி 'அப்பா ஏதோ கோபமாக இருக்காங்க' என உணர்ந்து வாலைச்சுருட்டிக்கொண்டு காரின் பின் ஸீட்டில் உட்கார்ந்திருந்தான். சாரு தழையத்தழைய பட்டுப்புடவை கட்டிக்கொண்டு 'வாங்க போகலாம்' எனச்சொல்லிக்கொண்டே காரின் டிரைவர் பக்கத்து ஸீட்டில் உட்காரப்போனாள்.
''சாரு, கொஞ்சம் நில்லு'' என ரவி கர்ஜித்தான். 'இவருக்கு என்ன ஆகிவிட்டது' என சாரு வியந்து வாயைத்திறக்குமுன் ரவி, ''எப்பவும் ராணி மாதிரி காரில் ஏறி ஜம்முனு உட்கார்ந்துடரே... எப்பதாவது நான் கார் ஓட்டுகிறேன்னு நீயாக சொல்லி யிருக்கியா? இப்ப ஸன்னிவேலுக்கு போக வர 100 மைல் நான்தான் ஓட்டணும் இல்லையா?" என ஏளனமாகக் கேட்டான்!
சாருவோ புன்னகைத்துக் கொண்டே சில விநாடிகள் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். ''நீங்க கேள்விகளை அம்பு போல் என் மீது எய்துவிட்டீர்கள். நான் பதில் சொல்லித் தானே ஆகணும்'' என மெதுவாகச் சொன்னாள்.
''நீங்க ஆபிசுக்கு கூட்டுவாகனத்தில் போயிட றிங்க... ஆக வேலை செய்யும் நாட்களில் நீங்க கார் ஓட்டவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் எனக்கோ பாதி நாள் மட்டும் வேலை செய்வதால் காரை எடுத்துக்கொண்டு தான் ஆபிசுக்கு போக ணும்... மேலும் பால்கியை அவன் பள்ளியிலிருந்து கூட்டிக்கொண்டு வரணும்... எப்பவும் பள்ளிக்கூடம் பக்கத்திலே காரை நிறுத்த இடம் இருக்காது. பள்ளியை சுத்தி சுத்தி வரணும் இடம் கிடைக்க; பசங்க சில சமயம் கார் வருவது தெரியாமல் குறுக்கே ஓடுவாங்க... பால்கி சொன்ன இடத்திலே நிற்க மாட்டான்... அவனை தேடறத்துக்குள்ளே உயிர் போயிடும். சில சமயம் வருகிற வழியில் சாமான் வாங்கிக்கிட்டு வந்திடுவேன். கடைப் பக்கத்திலே கார் நிறுத்த இடம் இருக்குமா... அதுவும் கிடையாது!'' |
|
''இந்த ·பிரிவேயில் கார் ஓட்டறது ஒண்ணும் பிரமாதம் இல்லைங்க! என் மாதிரி கத்துக் குட்டிகளுக்கு கடைத்தெரு பக்கம் கார் ஓட்டறது வேறு விஷயம்; ஆனால் என்னால் இன்னிவரைக்கும் காருக்கு ஒரு சிராய்ப்புகூட உண்டானது கிடையாது. நீங்க பதினைந்து வருடமா கார் ஓட்டறிங்க. ஆனா இதோ, காரிலே பல நசுங்கல்கள் இருக்கு பாருங்க, அதெல்லாம் நீங்க காரை ரிவர்ஸ் செய்யும் போது... சரி... சரி அதை விடுங்க...''
''இன்னும் ஒரு காரணம் என்ன தெரியுமா? நான் கார் ஓட்டும் போது நீங்க பக்கத்தில் சும்மா உட்கார்ந்து இருப்பிங்களா? ''மெல்லப்போ, பிரேக்கை அழுத்திப்பிடிக்காதே'' அது இது என்று சொல்லி என்ன தடுமாற வெச்சுடுவிங்க... எனக்கு 'ஏன் கார் ஓட்டறோம்' எனத்தோணும்! அதனாலே தான் நான் நீங்ககூட வரும்போது கார் ஓட்ட மாட்டேங்கறேன்!''
''நீங்க இந்த அமெரிக்காவுக்கு எனக்கு முன்னா லேயே வந்தவங்க. நான் சொன்னதை தப்பா நினைச் சுக்க வேண்டாம். ஆங்கிலத்தில் சொல்வாங்க 'Let us keep the records straight'ன்னு; அதுதான் சொல்லிவிட்டேன். தயவு செய்து இனிமேல் இந்த மாதிரி சாதாரண விஷயத்துக்கு எல்லாம் பதட்டப் படாதீங்க... எம்.எஸ். விஸ்வநாதன் ஏதோ ஒரு படத்திலே அவரே பாடின பாட்டிலே வருமே? 'தேவன் ஒரு பாதி, தேவி மறு பாதி' மாதிரி தானேங்க நம்ப இரண்டு பேரும்?!''.
ஹெர்குலிஸ் சுந்தரம் |
|
|
More
முன்செல்பவர் ராசிபலன்
|
|
|
|
|
|
|