|
கரடியும் இரண்டு பயணிகளும் |
|
- |ஆகஸ்டு 2004| |
|
|
|
Two men were traveling together, when a Bear suddenly came them on their path.
இரண்டு பேர் ஒன்றாகப் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது வழியில் திடீரென்று ஒரு கரடி வந்தது.
One of them climbed up quickly into a tree and hid himself in the branches. The other, seeing that he may be attacked, fell flat on the ground. The Bear came near and felt him with his snout, and smelt him all over. He held his breath and pretended to be dead as much as he could.
ஒருவன் வேகமாக ஒரு மரத்தில் ஏறிக் கிளைகளில் மறைந்து கொண்டான். தன்னைக் கரடி தாக்கலாம் என்பதைப் பார்த்த மற்றொருவன் தரையில் படுத்துக்கொண்டான். கரடி அவனருகில் வந்து தனது மூக்கால் அவனை முழுதாக முகர்ந்து பார்த்தது. அவன் மூச்சுவிடாமல், முடிந்த அளவு தான் இறந்துவிட்டது போல நடித்தான்.
The Bear soon left him, for it is said he will not touch a dead body. When he was quite gone, the other Traveler descended from the tree, and jocularly inquired "What did the Bear whisper in your ear?"
செத்த உடலைக் கரடி தொடாது என்பதனாலே அது அவனைவிட்டுப் போய்விட்டது. கொஞ்ச நேரம் கழித்து மரத்தின் மேல் இருந்தவன் கீழே இறங்கி, "உன் காதில் கரடி என்ன கிசுகிசுத்தது?" என்று வேடிக்கையாகக் கேட்டான். |
|
"He gave me this advice," his companion replied. "Never travel with a friend who deserts you at the approach of danger."
"ஆபத்து வந்ததும் உன்னை விட்டு ஓடிப்போகும் நண்பனோடு பயணம் செய்யாதே என்று புத்திமதி கூறியது" என்று சொன்னான் மற்றொருவன்.
Misfortune tests the sincerity of friends.
துன்பக் காலத்தில் நட்பின் ஆழம் தெரியும். |
|
|
|
|
|
|
|