Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சாதனையாளர்
குறுக்கெழுத்துப்புதிர் | புழக்கடைப்பக்கம் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | ஜோக்ஸ்
சித்திரம்
Tamil Unicode / English Search
இளந்தென்றல்
தீயவருடன் நட்பு தீமை தரும்
- அம்பா ராமநாதன்|பிப்ரவரி 2004|
Share:
Friendship with bad people will harm you

ஒரு ஆமையும் தேளும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. ஒருநாள் காட்டுத்தீ பிடிக்கவே இரண்டும் வேறு இடத்திற்குப் போகப் புறப்பட்டன. வழியில் ஓர் ஆழமான ஆறு குறுக்கிட்டது.

A tortoise and a scorpion were good friends. One day, a forest-fire broke out. So, they both decided to move to another place. They came across a deep river on the way.


அதைக் கண்ட தேள் ஆமையிடம் "ஆமையாரே, நீர் சுலபமாக ஆற்றைக் கடந்துவிடுவீர். என் பாடுதான் திண்டாட்டம்" என்றது. ஆமை உடனே "பயப்படாதே நண்பா, என் முதுகில் ஏறிக்கொள். நான் அழைத்துப் போகிறேன்" என்றது.

The scorpion said "Tortoise, you will easily cross the river. What about me?" To this the tortoise replied "Fear not my friend. Sit on my back. I will carry you".


இப்படி இரண்டும் ஆற்றில் போய்க்கொண்டிருந்தன. தேள் சும்மா இருக்குமா? ஆமையின் முதுகில் கொட்டியது. "தேளாரே, என்ன செய்கிறீர்?" என்று கேட்டது ஆமை. "உமது ஓடு கனமாக இருக்கிறதே, அதில் ஓட்டை போட முடியுமா என்று பார்க்கிறேன்" என்று விஷமத்துடன் சொன்னது.

While they were going, the scorpion could not sit quiet. It stung on the back of the tortoise. "Hey scorpion, what are you doing?" asked the tortoise. "You have a thick shell. I am trying to find if I can drill a hole in it" replied the mischievous scorpion.
இதைக் கேட்டதும் ஆமைக்குக் கோபம் வந்துவிட்டது. "அப்படியா சேதி? தண்ணீரில் ஓட்டைபோட்டுத் தப்பிக்கமுடியுமா என்று பார்" என்று சொல்லியபடி ஆமை தண்ணீருக்குள் அமிழ்ந்தது. தேளும் தண்ணீருக்குள் முழுகி இறந்துபோனது.

"Oh, Is that the matter?" said the angry tortoise, "Now, try escaping the river by drilling a hole through water". Saying thus, he went down deep into the water. The scorpion drowned and died.

அம்பா ராமநாதன்
Share: 




© Copyright 2020 Tamilonline