அரோரா: வறியோர்க்கு உணவு நியூ ஜெர்சி நாட்டிய சங்கமம் ஆஸ்டின்: காதலர்தின சிறப்புப் பேச்சரங்கம் டெக்சஸ்: காதலர்தினப் பேச்சரங்கம் தைப்பூச பாதயாத்திரை டாலஸ்: திருக்குறள் போட்டி BATM: பொங்கல்விழா அறிவியல் மேதை பாஸ்கரர் 900 வருடவிழா டாலஸ்: பொங்கல் விழா
|
|
|
|
|
ஜனவரி 31, 2015 அன்று ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் லேனியர் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடியது. தமிழ்ப் பள்ளி மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது. சங்கச் செயலாளர் திருமதி. சுகந்தி கோவிந்த் வரவேற்புரையாற்றினார்.
ரக்ஷிதா நிருத்தியாலயா நடனப் பள்ளி நிறுவனர் திருமதி. பவித்ரா ராமதாஸ் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற 'காவடிச் சிந்து' அழகாக இருந்தது.
அக்னி நடனப் பள்ளியின் 'Flash Mob' மற்றும் சான் அன்டோனியோ தமிழ்ச் சங்கம் வழங்கிய கரகாட்டம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், புலியாட்டம், கும்மி, ஒயிலாட்டம் போன்றவை பார்வையாளரைக் கவர்ந்தது. சூப்பர் சிங்கர் ஜுனியர்-1 நிகழ்ச்சியின் வெற்றிநாயகன் திரு. கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பாடி கேட்டோரைத் தன்வயப்படுத்தினார்.
தமிழ்ச் சங்கத் தலைவர் அன்பு கிருஷ்ணசுவாமி, துணைத்தலைவர் சங்கர் சிதம்பரம், பொருளாளர் பாலா பெத்தண்ணன், செயலாளர் சுகந்தி கோவிந்த், மகேந்திரன் நாகராஜன் ஆகியோர் விழா மேடையில், தன்னார்வலர்களையும், உதவிய நிறுவனங்களையும் கெளரவித்தனர். துணைத்தலைவர் நன்றியுரையுடன் விழா நிறைவெய்தியது. |
|
சுகுணா கவர்னர், ஆஸ்டின், டெக்சஸ் |
|
|
More