நியூ ஜெர்சி நாட்டிய சங்கமம் ஆஸ்டின்: காதலர்தின சிறப்புப் பேச்சரங்கம் டெக்சஸ்: காதலர்தினப் பேச்சரங்கம் தைப்பூச பாதயாத்திரை டாலஸ்: திருக்குறள் போட்டி BATM: பொங்கல்விழா அறிவியல் மேதை பாஸ்கரர் 900 வருடவிழா டாலஸ்: பொங்கல் விழா ஆஸ்டின்: பொங்கல் விழா 2015
|
|
|
|
|
ஃபிப்ரவரி 15, 2015 அன்று அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள், உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, இடைமேற்கு மாநிலத் தமிழ்ச்சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து 2015ம் ஆண்டின் முதலாவது 'வறியோர்க்கு உணவு' நிகழ்வை ஹெசட் இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்தன. இப்பணியில் தமிழ்ச்சிறார் பெற்றோருடன் பங்கேற்றனர். திருக்குறளின் சொல்வன்மை, இடுக்கணழியாமை, ஊக்கமுடைமை, மடியின்மை ஆகிய அதிகாரங்களின் விளக்கமும், பொங்கல் நாட்களின் விவரமும், வெளிநாட்டறிஞர்கள் தமிழ்நாடு குறித்துக் கூறும் சிறப்புரைகள் அடங்கிய தொகுப்புநூலும் அளிக்கப்பட்டன. தமிழ் மாணக்கர்கள் அக்ஷயா, அபிநவ், அரிசு, அனன்யா, பரத்ராசு, முருகன், விசுவேசு மற்றும் அவர்தம் பெற்றோர் கார்த்திக், உமா, சம்பத்குமார், லாவண்யா, சித்ரா, மாலாதேவி, வெங்கடேசன் ஆகியோரை ஹெசட் இல்லத்தவர் பாராட்டினர். நிகழ்ச்சிக்கு உதவிய இல்லப் பொறுப்பாளர் திருமதி. சிண்டி அவர்கட்கு அமைப்பாளர் பாபு நன்றி கூற, நிகழ்வு நிறைவெய்தியது. |
|
வ.ச. பாபு, சிகாகோ, இல்லினாய்ஸ் |
|
|
More