தெரியுமா?: சென்னையில் முதியோருக்கு 'ஹார்மனி விக்டோரியா' தெரியுமா?: 'சொல்லின்செல்வி' உமையாள் முத்துவுக்குப் பாராட்டு தெரியுமா?: ஸ்ரீ ரமண சரிதம்: ஒலிநூல் வெளியீடு தெரியுமா?: விபாவின் 'கலாகார்-2015' புகைப்படப் போட்டி தெரியுமா?: மேரிலாண்ட் மாகாண போக்குவரத்து ஆணையர் டாக்டர் ராஜன் தெரியுமா?: இணையத்தில் வீடு, மனை வாங்க CREDAI FAIRPRO 2015
|
|
தெரியுமா?: FeTNA: வட அமெரிக்கக் குறள் தேனீ போட்டி |
|
- சிவகாமி இராமையா|மார்ச் 2015| |
|
|
|
|
|
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்கள் பேரவை விழாவின் திருக்குறள் போட்டி வட்டார அளவிலும், தேசிய அளவிலும் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் "வட அமெரிக்கக் குறள் தேனீ" என்ற பெயரில் நடக்கவுள்ளது.
வட்டார அளவிலான போட்டியில் திருக்குறளை முழுமையாகச் சொல்லவேண்டும். அதன் பொருளைத் தமிழிலோ, ஆங்கிலத்திலோ சொல்லவேண்டும். குறளுக்கு 1/2 மதிப்பெண்ணும், பொருளுக்கு 1/2 மதிப்பெண்ணும் வழங்கப்படும். நாடெங்கிலுமுள்ள பல தமிழ்ப்பள்ளிக் குழந்தைகள் இதில் பங்கேற்கின்றனர்.
பேரவை விழாவின் இடைநிலை மற்றும் இறுதிப் போட்டிகளில்: குறளின் முதல் அல்லது இறுதிச் சொல்லைக் கொடுத்து குறளைக் கண்டுபிடிப்பது; அதிகாரத்தைக் கூறினால் குறள் சொல்வது அல்லது குறளைக் கூறினால் அதிகாரத்தின் பெயரைக் கூறுவது; பொருளுக்கேற்ற குறளைக் கூறுவது போன்றவை இடம் பெறும்.
தேசிய அளவிலான இறுதிப்போட்டி சான் ஹோசே, கலிஃபோர்னியாவில் பேரவை விழாவின் (www.fetna2015.org) பொதுமேடையில் பல்லாயிரக்கணக்கான தமிழன்பர்கள் முன்னிலையில் அரங்கேறும். முதல் வெற்றியாளருக்கு US$1000 பணப்பரிசு மற்றும் வட அமெரிக்கக் குறள் தேனீ விருது காத்துக் கொண்டிருக்கிறது. போட்டியில் பங்கேற்க வயது வரம்பு: 5 முதல் 18 வயது. பெற்றோர்கள் பேரவை விழாவிற்குப் பதிவு செய்திருந்தால் 9 வயதுக்குட்பட்டோருக்கு விழாப் பதிவுக்கட்டணம் கிடையாது. |
|
போட்டிக்குப் பதியவும், போட்டிக்கான அதிகாரங்களைத் தெரிந்து கொள்ளவும் அறிய: www.fetna2015.org/competitions/#kural
மேலும் விவரங்களுக்கு உங்கள் பகுதியிலுள்ள தமிழ்மன்றம் அல்லது தமிழ்ப்பள்ளியைத் தொடர்பு கொள்ளுங்கள்.
வட அமெரிக்கக் குறள் தேனீ 2015 ஒருங்கிணைப்பாளர்: sivagamiramiah@yahoo.com / 408-480-7594
சிவகாமி இராமையா |
|
|
More
தெரியுமா?: சென்னையில் முதியோருக்கு 'ஹார்மனி விக்டோரியா' தெரியுமா?: 'சொல்லின்செல்வி' உமையாள் முத்துவுக்குப் பாராட்டு தெரியுமா?: ஸ்ரீ ரமண சரிதம்: ஒலிநூல் வெளியீடு தெரியுமா?: விபாவின் 'கலாகார்-2015' புகைப்படப் போட்டி தெரியுமா?: மேரிலாண்ட் மாகாண போக்குவரத்து ஆணையர் டாக்டர் ராஜன் தெரியுமா?: இணையத்தில் வீடு, மனை வாங்க CREDAI FAIRPRO 2015
|
|
|
|
|
|
|