BATM: சங்க இலக்கியப் பயிலரங்கம் டாலஸ்: குருபரம்பராவின் 'சங்கமம்'
|
|
சாஸ்தா தமிழ் அறக்கட்டளை: திருக்குறள் போட்டி |
|
- சின்னமணி|பிப்ரவரி 2015| |
|
|
|
|
|
டாலஸ் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் சார்பில் பின்வரும் போட்டிகள் நடைபெற உள்ளன: திருக்குறள் மற்றும் கட்டுரைப் போட்டிகள் ஃபிப்ரவரி 7ம் தேதியும், அவ்வை அமுதம் (ஆத்திச்சூடி, நல்வழி, மூதுரை, கொன்றை வேந்தன்) மற்றும் பேச்சுப்போட்டிகள் ஃபிப்ரவரி 21ம் தேதியும் நடைபெறும். இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்கலாம். பெரியவர்களுக்கும் போட்டிகள் உண்டு அனைத்துப் போட்டிகளுக்கும் பரிசளிப்பு விழா பிப்ரவரி 21ம் தேதி மாலை ஃப்ரிஸ்கோ ஹெரிடேஜ் உயர்நிலைப்பள்ளி அரங்கத்தில் நடைபெறும்.
விழாவில் 'சொல்லின் செல்வி' திருமதி. உமையாள் முத்து அவர்கள் கவுரவிக்கப்படுவார். 16 வயதில் தொடங்கி, உலகெங்கிலும் 6000க்கும் அதிகமான மேடைகளில் பங்கேற்றவர் இவர். உலகத் தமிழ் மாநாடு உள்ளிட்ட சிறப்பு மேடைகளிலும் உரையாற்றி இருக்கிறார்.
கடந்த ஏழாண்டுகளைப் போல், இவ்வாண்டும் குழந்தைகளுக்கான போட்டியில் ஒரு குறளுக்கு ஒரு டாலர் வீதம் பரிசு உண்டு. கூடுதலாக இந்த ஆண்டின் வெற்றியாளர்கள், வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழாவில் இடம்பெறும் தமிழ்த்தேனீ போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். விண்ணப்பங்கள் stem.iclevents.com என்ற இணையத்தில் மட்டுமே ஏற்கப்படும். மேலதிக விவரங்களுக்குப் பார்க்க: www.sasthatamilfoundation.org |
|
சின்னமணி, டாலஸ், டெக்சஸ் |
|
|
More
BATM: சங்க இலக்கியப் பயிலரங்கம் டாலஸ்: குருபரம்பராவின் 'சங்கமம்'
|
|
|
|
|
|
|