அமெரிக்காவில் இயற்கை வேளாண்மை FeTNA: தமிழ்த் திருவிழா ஜெயமோகனுக்கு 'இயல் விருது' சிக்கில் குருசரண் UC (டேவிஸ்) பல்கலையில்
|
|
பத்ம விருதுகள் |
|
- |பிப்ரவரி 2015| |
|
|
|
|
இந்திய அரசின் உயரிய பத்ம விருதுகள் விவரம் கீழே.
பத்மஸ்ரீ: மங்கள்யான் திட்ட இயக்குநர் அருணன், பி.வி. ராஜாராமன், அமரர் ஆர். வாசுதேவன் கன்யாகுமரி அவசரளா, நடிகர் கோட்டா சீனிவாச ராவ், டாக்டர் என். பிரபாகர், டாக்டர் பிரகலாதா உட்பட 75 பேர் பெறுகின்றனர். சீனாவைச் சேர்ந்த Huang Baosheng, பிரான்ஸின் Professor Jacques Blamont, Jean-Claude Carriere, அமெரிக்காவின் பேரா. ஜார்ஜ் ஹார்ட், Dr. நந்தராஜன் ராஜ் செட்டி, த்ரிப்தி முகர்ஜி, Dr. ரகுராம பிலாரிசெட்டி, Dr. தத்தாத்ரேயடு நோரி மற்றும் போர்ச்சுகலின் ஜகத்குரு அம்ருத சூர்யானந்த மஹாராஜா என வெளிநாடுகளில் வசிப்பவர்களும் இதில் அடக்கம்.
பத்மபூஷண்: சுவாமி சத்யமித்ரானந்த் கிரி, என். கோபாலசாமி, சுதா ரகுநாதன், Dr. சுபாஷ் காஷ்யப், அமெரிக்கப் பேரா. மஞ்சுள் பார்கவா, அமெரிக்காவின் டேவிட் ஃப்ராலி, மெலிண்டா & பில் கேட்ஸ், ஜப்பானின் சய்ச்சிரோ மிசுமி, Dr. அசோக் செத், ரஜத் சர்மா, சத்பல் உள்ளிட்ட 20 பேர் பெறுகின்றனர். |
|
பத்மவிபூஷண்: எல்.கே. அத்வானி, நடிகர் அமிதாப் பச்சன், பிரகாஷ்சிங் பாதல், நடிகர் திலீப்குமார், மாலூர் ராமசாமி சீனிவாசன், ஃப்ரான்ஸின் கரீம் அல் ஹுஸைனி ஆகா கான் உள்ளிட்ட 9 பேர் பெறுகின்றனர்.
விருது பெற்ற 104 பேரில் 17 பேர் பெண்கள். 17 பேர் வெளிநாட்டவர். நான்கு பேருக்கு மட்டும் மறைவுக்குப் பிந்தையதாக விருது அளிக்கப்படுகிறது. விருதும் கேடயமும் கொண்ட இப்பரிசு வரும் மார்ச்/ஏப்ரல் மாதங்களில் ஜனாதிபதி மாளிகையில் வழங்கப்பட இருக்கிறது. |
|
|
More
அமெரிக்காவில் இயற்கை வேளாண்மை FeTNA: தமிழ்த் திருவிழா ஜெயமோகனுக்கு 'இயல் விருது' சிக்கில் குருசரண் UC (டேவிஸ்) பல்கலையில்
|
|
|
|
|
|
|