ஓட்ஸ் பொங்கல்ஸ்!
|
|
|
|
|
தேவையான பொருட்கள்: ஓட்ஸ் - 1 1/2 கிண்ணம் பயத்தம்பருப்பு - 1/2 கிண்ணம் பால் - 1 கிண்ணம் மிளகு - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி பெருங்காயம் - சிறிதளவு இஞ்சி - 1 துண்டு முந்திரிப் பருப்பு - 10 கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - சிறிதளவு நெய் - 1 கிண்ணம்
செய்முறை: ஓட்சை வறுத்துப் பாலில் வேகவிடவும். பயத்தம்பருப்பை வாசனை வர வறுத்துக் குழைய வேகவிட்டு ஓட்ஸுடன் போட்டு, மிளகு, சீரகம் பொடி செய்து, இஞ்சியுடன் முந்திரி இவற்றை நெய்விட்டு வறுத்து அதில் போட்டு உப்பும், பெருங்காயமும் சேர்த்து அடுப்பில் கொதிக்க வைக்கவும். கறிவேப்பிலை போட்டு, மேலாக நெய் விடவும். ஒன்று சேர்ந்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கினால் சுடச்சுட ஓட்ஸ் மிளகுப் பொங்கல் ரெடி. |
|
தங்கம் ராமசாமி, பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்சி |
|
|
More
ஓட்ஸ் பொங்கல்ஸ்!
|
|
|
|
|
|
|