|
|
|
|
திருவிருத்தம் என்பது பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் எழுதிய விருத்தப் பாடல்களின் தொகுப்பு. நூறு பாசுரங்கள் கொண்ட இந்த பக்தி நூலை பேரா. அர்ச்சனா வெங்கடேசன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உள்ளார்.
திருமாலாகிய நாயகன்மீது நாயகி கொண்ட உள்ளார்ந்த காதலை எடுத்துச் சொல்லும் இந்தப் பாடல்களில், நம்மாழ்வார் தம்மை ஒரு பெண்ணாக உருவகித்து எழுதியுள்ளார். இப்பாசுரங்கள் நாயக-நாயகியின் காதல், பிரிவுத் துயரம், மகிழ்ச்சி முதலியவற்றையும், இந்த உயர்நிலைக் காதலின் மூலம் பிறவிச் சுழலைத் தாண்டி இறைவனடி சேரும் பக்தியையும் விவரிக்கின்றன.
நம்மாழ்வார் குறுகச் சொல்லி ஆழ்ந்த உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறவர். அவரது பாசுரங்கள் எளிய நடை, அழகிய உவமைகள், சிறந்த உருவகங்கள் படிப்போரைக் கட்டி இழுத்து மெய்மறக்கச் செய்யும் தன்மை கொண்டவை. திருவிருத்தப் பாடல்கள் அந்தாதியாக எழுதப்பட்டுள்ளன. பாசுரங்களின் பொருளும், அவற்றில் ததும்பும் உணர்ச்சிகளும் மொழியாளுமையும் நம்மை ஒரு மாயவுலகுக்குக் கொண்டு சென்று மெய்மறக்கச் செய்பவை.
இவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கையில் ஆங்கிலக் கவிதை இலக்கண விதிகளைப் பின்பற்றாவிடினும், ஆற்றொழுக்கான நடையழகைக் கொண்டு வர முயன்றிருக்கிறேன். ஆங்கில வசன கவிதைகளாக இருப்பினும் முதல்நூலின் இயல்பும், ஆழ்ந்த அதன் உட்பொருளும் குலையா வண்ணம் மொழி பெயர்திருக்கிறேன். நான்கு வரிகளைக் கொண்ட ஒவ்வொரு செய்யுளும் முதல் இரண்டு வரிகளில் செய்தியும் அடுத்த இரு வரிகளின் முடிவினையும் சொல்வதாக அழகான சந்ததுடன் அமைந்துள்ளது. |
|
|
மொழிபெயர்ப்பாளர் இதனை மொழிபெயர்த்த அர்ச்சனா வெங்கடேசன் டேவிஸில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு இலக்கியம் மற்றும் மத ஆய்வுகள் பிரிவில் இணைப்பேராசிரியர். தன் ஆராய்ச்சிகளுக்கெனக் கலை, இலக்கிய தேசிய அறக்கட்டளை, மானுடவியல் தேசிய அறக்கட்டளை, ஃபுல்பிரைட் நிதி போன்றவற்றிலிருந்து பல நிதிநல்கைகள் பெற்றிருக்கிறார். சங்கம் மற்றும் இடைக்காலத் தமிழ்ப் பாடல்களைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். The Secret Garland: Āṇṭāḷ’s Tiruppāvai and Nācciyār Tirumoḻi (2010) என்கிற நூலை எழுதியுள்ளார். ஹார்வர்ட் பலகலைக்கழகத்தை சேர்த்த ஜார்ஜ் க்ளூனி அவர்களுடன் இணைந்து நம்மாழ்வார் திருவாய்மொழியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார்.
தமிழில்: நித்யவதி சுந்தரேஷ், ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா |
|
|
|
|
|
|
|