Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | பொது
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | அஞ்சலி | சாதனையாளர் | எங்கள் வீட்டில் | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது
தெரியுமா?: திருக்குறள் - அரிய தகவல்கள்
தெரியுமா?: பெர்க்கலி தமிழ் விரிவுரையாளர்: பாரதி சங்கரராஜுலு
தெரியுமா?: இப்படி இருந்த நான் எப்படி ஆய்ட்டேன்!
NRI செய்திகள்
FeTNA: தமிழ் விழா
- |ஆகஸ்டு 2014|
Share:
அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பான வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27வது தமிழ் விழா ஜூலை 4, 5 நாட்களில் மிசௌரி மாகாணத்தின் செயின்ட் லூயிஸ் மாநகரத்தில், ராபர்ட் கால்டுவெல் இருநூற்றாண்டு விழாவாகவும், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழாவாகவும் 'தமிழர் அடையாளம் காப்போம்; ஒன்றிணைந்து உயர்வோம்' என்ற மையக்கருத்தில் நடைபெற்றது.

தமிழகத்திலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் பதினைந்துக்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்களும் சாதனையாளர்களும் இந்த விழாவில் சிறப்பிக்கப் பட்டனர். அவர்கள்: எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன், கவிஞர் குட்டி ரேவதி, மருத்துவர் எழிலன், வைதேகி ஹெர்பெர்ட், முருகானந்தம், முனைவர். சொர்ணவேல் ஈசுவரன், சுவாமிகந்தன், முனைவர்.சோயி செரினியன், ஓக்லஹாமா பல்கலை, முனைவர். ஆரன் பேஜ், வெஸ்லியன் பல்கலை, முனைவர். செல்வ சண்முகம், முனைவர். இராமகி, மணி. மணிவண்ணன், அம்மாபேட்டை கணேசன், மு. ஹரிகிருஷ்ணன், ஞானமணி இராஜப்பிரியர், கவிஞர். கோபாலகிருஷ்ணன், நாகை. பாலகுமார், மருத்துவர். சொக்கலிங்கம், முனைவர். வேலு சரவணன், முனைவர். இராம. இராமமூர்த்தி.

இரண்டு நாட்கள் பல்வேறு அரங்குகளில் இணையாக நடைபெற்ற பல நிகழ்ச்சிகளை வட அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த 1500க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். நிகழ்ச்சிகள் திருக்குறள் ஓதுதலுடன் தொடங்கின. முதல்முறையாக நடத்தப்பட்ட குறும்படப் போட்டிகளின் பரிசுகள் இவ்விழாவில் வழங்கப்பட்டன. ஹாலிவுட் இயக்குநர் சுவாமிகந்தன், மிச்சிகன் பல்கலைப் பேராசிரியர் முனைவர். சொர்ணவேல் ஈஸ்வரன் ஆகியோர் சிறந்த படங்களைத் தேர்ந்தெடுத்துப் பரிசளித்தனர்.

குட்டி ரேவதி 'பண்டிதர் அயோத்திதாசர்', தியடோர் பாஸ்கரன் 'திரைப்படங்களில் தமிழிலக்கியம்' ஆகிய தலைப்புகளில் உரையாற்றினர். நூற்றாண்டு நாயகர்களான குடந்தை சுந்தரேசனார் பற்றி ராமமூர்த்தியும், ராபர்ட் கால்டுவெல் பற்றி ஆல்பர்ட் செல்லதுரையும் பேசினர்.

Click Here Enlargeகுட்டி ரேவதி தலைமையில் 'கிளம்பிற்று காண் தமிழர் படை' என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. நிறைவாகப் பேசிய அவர், இன்றைய இளம் கவிஞர்களுக்கு முன் மாதிரியானவர் கவிஞர் பிரமீள் என்று கூறினார். மருத்துவர் எழிலன் தலைமையில் 'தமிழரின் வளர்ச்சிக்கு அடிப்படை உணர்வா? அறிவா?' என்ற தலைப்பில் கருத்துக்களம் நடைபெற்றது. முனைவர் இராமகி தமிழர்களின் எண்ணிக்கை குறைவதைப் பற்றியும் தமிழின் தொன்மை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.

வைதேகி ஹெர்பர்ட் 20 ஆண்டுகளாக உழைத்துச் சங்க நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். அவர் தமது உரையில் தமிழர் அனைவரும் சங்கத்தமிழ் படித்து இன்புற வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். முத்தாய்ப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று நாஞ்சில் அவர்களின் இலக்கிய வினாடிவினா. பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், திருக்குறள், இலக்கணம் இவற்றிலிருந்து கேள்விகள் கேட்க்கப்பட்டன. சிறுவர்களுக்கான தமிழ்த்தேனீ போட்டி, திருக்குறள், பேச்சுப் போட்டி, பாடல்களிலிருந்து கேள்வி, ஒரு வார்த்தை (தனி நடிப்பு மூலம் வார்த்தை கண்டுபிடிப்பு) போன்ற பல வகைகளில் நடைபெற்றது.

உலகத் தமிழ் மன்றம் சார்பில் தமிழக இளைஞர்களுக்கு நாம் செய்ய வேண்டியன, ஈழமக்களுக்குச் செய்யவேண்டியன பற்றிய விவாதம் நடைபெற்றது. மருத்துவர் எழிலன் எவ்வாறு அறிவியல், பரிணாமம், வானியல், பகுத்தறிவுக் கருத்துகளை கிராமப்புறங்களுக்கு எடுத்துச் செல்வது என்பது பற்றிப் பேசினார். எக்ஸ்னோரா நிர்மல் ஈழத்தமிழர் படுகொலையைச் சர்வதேச அரங்கில் எவ்வாறு எடுத்துச் செல்வது என விளக்கினார்.

தமிழ்க் கல்வியின் அவசியத்தையும் கோவில்களில் தமிழ் வழி வழிபாட்டு முறை கொண்டுவருவதன் அவசியம் பற்றியும் அனைவரும் கர்ப்பக்கிரகம் செல்லவிடுவது பற்றியும் பேரூர் மருதாசல அடிகளார் உரையாற்றினார்.

அமெரிக்கத் தமிழர் அரசியல் செயல்பாட்டுக் குழுவின் (USTPAC – US Tamil Political Action committee) தலைவர் காருண்யன் அருளானந்தன் ஈழப் படுகொலைக்குப் பிறகு அமெரிக்க அரசு மற்றும் அரசியல்வாதிகளை நெருங்க முடியாத நிலையில், அமைப்பைத் தொடங்கிய விதம், இன்று ஏற்பட்டு வரும் முன்னேற்றம் பற்றிக் கூறினார். சர்வதேச மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கத் தீர்மானம் கொண்டுவருவதில் இந்த அமைப்பு முக்கியப் பங்காற்றியுள்ளது. சர்வதேசப் போர்க் குற்றங்களை ஆயும் அமெரிக்கப் பேராசிரியர் ஏகர்சன் பேசும்போது இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை கொண்டுவர வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று எடுத்துரைத்தார்.
உலகத் தமிழ் அமைப்பின் முன்னாள் தலைவர் செல்வன் பச்சமுத்து, அமைப்பின் நோக்கம் குறித்துப் பேசினார். இதன் உள்ளரங்கக் கூட்டத்தில் முனைவர் சேரன் தமிழகத்தில் செயல்படும் பல தமிழ் அமைப்புகளுடன் இணைந்து தமிழினத்திற்குப் பெரும்பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டார். குட்டி ரேவதி, மருத்துவர் எழிலன், நிர்மல் ஆகியோரும் பேசினர்.

பாரம்பரியக் கலைகளான தோல்பாவைக் கூத்தினை அம்மாபேட்டை கணேசன், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் அனுமன் தூதுப் படலம் கதை கொண்டு நடத்தினர். ஹரிகிருஷ்ணன் தருமபுரி அருகே குழந்தைகளுக்கு பள்ளிப் படிப்போடு இந்தப் பாரம்பரியக் கலையைக் கற்பிக்க ஒரு பள்ளி கட்டி வருகிறார்.

'தீரன் சின்னமலை' நாட்டிய நாடகத்தை செயிண்ட் லூயிஸ் நகரத் தமிழர் அரங்கேற்றினர். குரு நாகை பாலகுமார், திருபுவனம் ஆத்மநாதன் இசையில், கவிமுகில் கோபாலகிருஷ்ணன் பாடல்களோடு இந்த நாட்டிய நாடகம் சிறப்பாக இருந்தது. மின்னசோட்டா தமிழ்ச்சங்கம் 'சிலம்பின் கதை' என்ற தெருக்கூத்தை வழங்கியது. மக்கள் கலைகளான சிலம்பம், பறை, சுருள்கத்தி வீச்சு, வர்மம் போன்றவற்றையும் அரங்கில் செய்துகாட்டினர். ராஜமணி ராஜப்பிரியர் அவர்களின் தமிழிசை நிகழ்வு அனைவரையும் ஈர்த்தது. இளஞ்சிறாரின் தமிழிசைப் போட்டியில் புறநானூற்றுப்பாடல் துவங்கி, இக்காலப் பாடல்வரை இசைத்தனர். முனைவர் வேலு சரவணன் குழந்தைகளுக்கான எலிப்பதி தெரு நாடகம் ஒன்றை வழங்கினார்.

விழாவில் பல மாநிலங்களிருந்து வந்திருந்தோர் பரதநாட்டியம் மற்றும் இசை நிகழ்ச்சிகளையும் வழங்கினர். முதல் நாளன்று குரு நாகை பாலகுமார் ஆடிய பரதநாட்டியம் ரசிக்க வைத்தது.

அமெரிக்காவில் சாதனை படைத்த தமிழர்களுக்கு விருது வழங்கும் "Tamil American Pioneer Gala" கோலாகலமாக நடந்தது. இவ்விருது பேரவை சார்பில் ஏழு தமிழர்களுக்கு வழங்கப்பட்டது. விருது பெற்றோர்: டாக்டர் ஆரோக்கியசாமி பால்ராஜ் (Professor Emeritus, Stanford University); Dr. ராஜ் செட்டி (William Henry Bloomberg Professor of Economics, Harvard University); Dr. சித்ரா தொரை, (IBM Distinguished Engineer and Master Inventor, IBM Corp.); Dr. அருண் மோஹன், Chief Medical Officer, Apollo MD Hospital Medicine; Dr. K. சுஜாதா (President & CEO, Chicago Foundation for Women); திரு. அருண் சுப்ரமணியன், (Partner, Susman Godfrey, LLP); திரு. ஜே விஜயன் (Chief Information Officer, Tesla Motors Inc.).

அடுத்த ஆண்டு சான்ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் 28வது பேரவை நடைபெறும் என்று அதன் ஒருங்கிணைப்பாளர் திரு. தில்லைக்குமரன் உறுதியளித்தார். சமூக முன்னேற்றத்துக்காகத் தனது கண்டுபிடிப்பை வழங்கியுள்ள திரு.முருகானந்தம் அவர்கள் இவ்விழாவுக்கு வந்திருந்து சிறப்பித்தார். உலக சித்த மருத்துவத்தின் சிறப்புகள் பற்றி முனைவர். செல்வ சண்முகம் பேசினார். தமிழ்த் திரைத்துறையின் நடிகர் நெப்போலியன் மற்றும் நடிகை திரிஷா தமது திரை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். சோனியா மற்றும் பிரபு நடத்திய கணேஷ் கிருபா குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஓக்லஹாமா பல்கலைக்கழகப் பேராசிரியர் சோவி பறையிசைப் பயிற்சி பட்டறை நடத்தினார். அமெரிக்காவின் நாற்பதுக்கும் மேலான தமிழ்ச் சங்கங்கள் பரதநாட்டியம், சிலம்பம், பறை, கரகம், பொய்க்கால் குதிரை, தெருக்கூத்து , காவடியாட்டம் என மிகுந்த ஆரவாரத்துடன் அணிவகுப்பு ஒன்றை நடத்தினர். அணிவகுப்பின் முடிவில் அரங்கின் அனைத்துப் பகுதியிலிருந்தும் பறையிசைக் கலைஞர்கள் மேடைக்கு வந்து பறையிசையுடன் ஆடிய நடனம், மக்களை எழுந்து நின்று கைதட்ட வைத்தது.
More

தெரியுமா?: திருக்குறள் - அரிய தகவல்கள்
தெரியுமா?: பெர்க்கலி தமிழ் விரிவுரையாளர்: பாரதி சங்கரராஜுலு
தெரியுமா?: இப்படி இருந்த நான் எப்படி ஆய்ட்டேன்!
NRI செய்திகள்
Share: 


© Copyright 2020 Tamilonline