சங்கர நேத்ராலயாவுக்கு நிதி திரட்ட ஜுகல்பந்தி பாரதி தமிழ்ச் சங்கம்: பாட்டும் பரதமும். CIF: 'வடபோச்சே' - நகைச்சுவை நாடகம் தென்கலிஃபோர்னியா: ஏழிசை கீதம் தென்றல் சிறுகதை போட்டி 2014
  | 
											
											
	  | 
											
												| 
                                                    
                                                    
                                                    
												 | 
                                            
                                            
	  | 
											
	  | 
											
												விரிகுடாப் பகுதிவாழ் தமிழருக்கு ஒரு வித்தியாசமான போட்டி. ஒரு குறளும் அதற்குரிய பொருளும் சொன்னால் $1 பரிசாகப் பெறலாம். உச்ச வரம்பு இல்லை. இந்தப் போட்டியை Bay Area Fine Arts வழங்குகிறது. வாழ்க்கையின் பொருளை நாம் புரிந்துகொள்ளவும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும் திருக்குறளைப் பொருளோடு அறிவது அவசியம் என்பதற்காகவே இந்தப் போட்டி.
  கடந்த சில வருடங்களாகத் திருக்குறள் போட்டியை நடத்தி வரும் டெக்சஸ் மாநிலத்தின் டாலஸ் நகரைச் சேர்ந்த சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் வழிகாட்டுதலோடு 'வளைகுடா கலைக்கூடம்' கலிஃபோர்னியா மாநிலத்தில் இதனை நடத்துகிறது.
  விதிமுறைகள்: 1. ஒரு திருக்குறளை முழுதாகத் தமிழில் சொல்ல வேண்டும். அதன் பொருளைத் தமிழிலோ, ஆங்கிலத்திலோ கூற வேண்டும். அவ்வாறு சொல்லப்படும் குறள் ஒன்றுக்கு ஒரு டாலர் வீதம் அளிக்கப்படும்.   2. பொருள் சொல்ல முடியாமல், குறள் மட்டும் ஒப்பிக்கப்படும் குறள் ஒன்றுக்கு 50 சென்ட் வீதம் அளிக்கப்படும். 3. ஐந்து வயதுக்குக்கீழ் உள்ள பிரிவு தவிர பிற பிரிவுகள் ஒவ்வொன்றிலும் முதல் மூன்று வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர். இது அவர்கள் சொல்லும் குறள்களின் எண்ணிக்கையால் நிர்ணயிக்கப்படும். 4. இதில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசுத் தொகையுடன் சான்றிதழும் வழங்கப்படும்.        
  வயதுவாரிப் பிரிவுகள்: 5 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 6 வயது முதல் 9 வயது வரை 10 வயது முதல் 14 வயது வரை 15 வயது முதல் 20 வயது வரை.
  போட்டிச் சுற்றுகள்: ஏப்ரல் 5ம் தேதி 8 மணி முதல் மாலை 4 மணிவரை "திருக்குறள் ஒப்பித்தல் போட்டி" நடைபெறும். இடம் பின்னர் அறிவிக்கப்படும். போட்டி தனித்தனி அறைகளில் நடத்தப்படும். பெற்றோர்கள் பார்வையாளர்களாகக் கலந்து கொள்ளலாம். | 
											
											
												| 
 | 
											
											
											
												பரிசளிப்பு விழா: ஏப்ரல் 5 மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை மில்பிடாஸ் ஜெயின் கோவிலில் நடைபெறும் (722 S Main St, Milpitas, CA 95035). அவ்வமயம் திருக்குறள் விழா மலர் வெளியிடப்படும். சிறப்பு விருந்தினர்களின் பங்கேற்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.
  ஆதரிப்போர்: இந்த முயற்சியில் வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம், பாரதி தமிழ்ச் சங்கம் மற்றும் கலிஃபோர்னியா தமிழ் அகாடமி ஆதரிக்கின்றன. ஊடகச் செய்தி பங்களிப்பாளராக உதவுவோர், தென்றல் பத்திரிகை, ITS DIFF வானொலி மற்றும் INDTV தொலைக்காட்சி. 
  விபரங்களுக்கும் பதிவு செய்யவும்:  வலையகம் - www.bayareafinearts.org தொலைபேசி - கௌரி சேஷாத்ரி - 510-794-4435 மின்னஞ்சல் - thirukural_info@bayareafinearts.org
  திருமுடி துளசிராம்,  மில்பிடாஸ், கலிஃபோர்னியா | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  சங்கர நேத்ராலயாவுக்கு நிதி திரட்ட ஜுகல்பந்தி பாரதி தமிழ்ச் சங்கம்: பாட்டும் பரதமும். CIF: 'வடபோச்சே' - நகைச்சுவை நாடகம் தென்கலிஃபோர்னியா: ஏழிசை கீதம் தென்றல் சிறுகதை போட்டி 2014
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |