கோவைக்காய் புலுசு கோவைக்காய் துவையல்
|
|
|
|
தேவையான பொருட்கள் வாழைக்காய் - 1 கோதுமை மாவு - 1 கிண்ணம் பச்சைப் பட்டாணி (குழைய வெந்து மசித்தது) - 1/2 கிண்ணம் பச்சை மிளகாய் - 4 கரம் மசாலா - 1 தேயிலைக் கரண்டி கொத்துமல்லி (பொடியாய் நறுக்கியது) - சிறிதளவு எண்ணெய் - 1/4 கிண்ணம் நெய் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை வாழைக்காயை வேகவிட்டு உப்பு, பச்சை மிளகாய், கரம் மசாலா, மசித்த பட்டாணி, கொத்துமல்லி, நெய் எல்லாம் போட்டு நன்றாகப் பிசைந்து வைக்கவும். கோதுமை மாவுடன் 1 சிட்டிகை உப்பு, நெய், எண்ணெய் விட்டுச் சப்பாத்தி மாவு பிசைந்து, சப்பாத்தி இட்டு, நடுவில் பிசைந்த வாழைக்காயைப் பூரணம் வைத்து இட்லி, தோசைக்கல்லில் போட்டு இரண்டு புறமும் வேகவிட்டு எடுத்து மேலாக, நெய், எண்ணெய் தடவிச் சாப்பிடவும். வெங்காயச் சட்னி, தேங்காய்ச் சட்னியுடன் சூப்பராக இருக்கும். பட்டாணிக்குப் பதில் கொண்டைக்கடலையும் குழைய வேகவிட்டுச் சேர்த்துச் செய்யலாம். சுவையாய் இருக்கும். |
|
தங்கம் ராமசாமி, ப்ரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்ஸி |
|
|
More
கோவைக்காய் புலுசு கோவைக்காய் துவையல்
|
|
|
|
|
|
|