பருப்புத் துவையல்
|
|
|
|
|
தேவையான பொருட்கள் மிளகு - 2 மேசைக்கரண்டி மிளகாய் வற்றல் - 2 துவரம் பருப்பு - 2 மேசைக்கரண்டி புளி - 2 தேக்கரண்டி கறிவேப்பிலை - எலுமிச்சை அளவு மஞ்சள்தூள் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - 1 மேசைக்கரண்டி கடுகு - 1 மேசைக்கரண்டி பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை மிளகு, மிளகாய் வற்றல், துவரம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை இவற்றைத் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். புளியையும் சூடு ஏறும்வரை வாணலியில் போட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும். புளி தவிர மற்றவற்றைத் தண்ணீர் சேர்க்காமல் பொடித்துக்கொண்டு, பின் புளியுடன் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை வேண்டிய அளவு தண்ணீர் சேர்த்து (குழம்பு பதத்திற்கு) மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இறக்கி வைத்து, எண்ணெயில் கடுகு வெடிக்கும்பொழுது பெருங்காயம் சேர்த்துத் தாளிக்கவும். |
|
கோமதி ஜானகிராமன், சான் ஹோசே, கலிஃபோர்னியா |
|
|
More
பருப்புத் துவையல்
|
|
|
|
|
|
|