சிகாகோ: வறியோர்க்கு உணவு டாலஸ்: 'ஜீவா'- நவீன நாட்டியம் அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள்: ஆறாவது ஆண்டு விழா SOCAL: 'வாங்க பழகலாம்' சத்குருவின் 'உள் பொறியியல்' நியூ ஜெர்சி: அன்னையர் தினம் NETS: சித்திரை விழா சிகாகோவில் பொன்னியின் செல்வன் சான் டியகோ: தமிழ்ப் புத்தாண்டு விழா ஹன்ட்ஸ்வில்: தமிழ்ப் புத்தாண்டு கலைமகள் தமிழ்ப் பள்ளி ஆண்டுவிழா டாலஸ்: முத்தமிழ் விழா ஹூஸ்டன்: 'ரசானுபவா' மெம்ஃபிஸ்: ஒய்.ஜி.மகேந்திரனுக்குப் பாராட்டு
|
|
டாலஸ்: கலை.செழியன் கவனகம் |
|
- சின்னமணி|ஜூன் 2013| |
|
|
|
|
|
மே 19, 2013 அன்று டாலஸின் ப்ளேனோவிலுள்ள ஆல்ஃபா மாண்டிசோரி பள்ளியின் வளாகத்தில் நடைபெறும் ப்ளேனோ தமிழ்ப்பள்ளியில் கவனகக் கலை வித்தகரான கலை. செழியன் அவர்களின் கவனக நிகழ்ச்சி எல்லோரையும் வியக்க வைத்தது. (இவரது சுவையான நேர்காணல் வாசிக்க). சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் சுமார் ஒன்றரை மணி நேரத்தில் 11 கவனகங்களை நிகழ்த்திக் காட்டினார் செழியன். தொடந்து, குழந்தைகள் கவனகக் கலையை எவ்வாறு கற்கலாம் என்ற பயிற்சி வகுப்பை இரண்டு மணி நேரம் நடத்தினார். பின்னர் நான்கு நாட்கள் மாலைதோறும் இரண்டு மணி நேரம் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்தன.
திருக்குறள் எண்ணைச் சொன்னால் அந்தக் குறள் (அதிகாரம் உட்பட) கூறல்; ஒருவர் தன் பிறந்த தேதியை குறிப்பிட்டால் அதன் கிழமை கூறல்; செஸ் போர்டில் வேறொருவருடன் ஆட்டத்திற்கேற்ப நகர்த்தல்; சோப்புக் கட்டியில் திருவள்ளுவர் சிற்பம் வடித்தல்; அவ்வப்போது ஒரு சிறுவர் அவரது முதுகின்மீது வெவ்வேறு இடங்களில் தொட்டுச் செல்ல, இறுதியில் எங்கே எத்தனை முறை தொட்டார் என்பதைக் கூறல்; 17 கட்டங்களில் வெவ்வேறு எழுத்துக்களை ஒருவர் சொல்லச் சொல்ல அதை ஒன்று முதல் 17 வரை வரிசைப்படுத்திக் கூறல்; 12 இலக்க எண்ணை வரிசைப்படுத்திக் கூறல்; ஏழு வண்ணங்களை இடையிடையே ஒருவர் சொல்ல, அதை வரிசையில் கூறல்; இரண்டு 9 இலக்க எண்களை ஒருவர் கூற, ஒன்றிலிருந்து மற்றதைக் கழித்து விடை கூறல்; 371 என்ற எண்ணை ஒரு குழந்தை சொல்ல, எந்த வரிசையிலும் 371 என்ற கூட்டுத்தொகை வருமாறு நான்கு வரிசை மாயக்கட்டம் அமைத்தல்; 'கர்ணனும் நட்பும்' என்று ஒருவர் ஈற்றடி கொடுத்துப் பஃறொடை வெண்பா கேட்க, அவ்வப்போது ஒரு வரியா எட்டு வரி வெண்பாவும் இயற்றல் என அடுக்கடுக்காக இவர் செய்த கவனகங்கள் வந்திருந்தோரை மூக்கின்மேல் விரல் வைக்கச் செய்தன.
முனைவர் பட்டம் பெற்ற இளைஞர் கலை. செழியன் போன்றோர் அமெரிக்காவில் நிரந்தரமாகத் தங்கியிருந்து பங்காற்றினால் அமெரிக்கத் தமிழ்க் குழந்தைகளும் தமிழ் மொழியில் வல்லுனர்களாக வரமுடியும் என, அவருக்கு அமெரிக்கா வருமாறு தமிழ் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. சாஸ்தா தமிழ் அறக்கட்டளை வேலு கூறுகையில், அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் தமிழ்துறையில் பணியாற்ற வாய்ப்புகள் இருப்பதாகவும், கலை செழியன் போன்றோர் அப்பணிக்கு வந்தால் அமெரிக்காவில் தமிழ்க் கல்வி மேலும் செழித்து வளரும் எனவும் குறிப்பிட்டார். |
|
சின்னமணி, டாலஸ், டெக்சாஸ் |
|
|
More
சிகாகோ: வறியோர்க்கு உணவு டாலஸ்: 'ஜீவா'- நவீன நாட்டியம் அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள்: ஆறாவது ஆண்டு விழா SOCAL: 'வாங்க பழகலாம்' சத்குருவின் 'உள் பொறியியல்' நியூ ஜெர்சி: அன்னையர் தினம் NETS: சித்திரை விழா சிகாகோவில் பொன்னியின் செல்வன் சான் டியகோ: தமிழ்ப் புத்தாண்டு விழா ஹன்ட்ஸ்வில்: தமிழ்ப் புத்தாண்டு கலைமகள் தமிழ்ப் பள்ளி ஆண்டுவிழா டாலஸ்: முத்தமிழ் விழா ஹூஸ்டன்: 'ரசானுபவா' மெம்ஃபிஸ்: ஒய்.ஜி.மகேந்திரனுக்குப் பாராட்டு
|
|
|
|
|
|
|