சில்லி வகைகள் பேரீச்சம்பழ பெகான் கேக் வாசகர் கைவண்ணம் - கொத்தமல்லி சாதம்
|
|
|
தேவையான பொருட்கள்
காரட், குடைமிளகாய் (பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், ஊதா எல்லாம் உபயோகிக்கலாம்), ஸ்குவாஷ், சுகினி, ஸெலரி (Celery), ப்ரோகோலி (Broccoli), காலிப்ளவர் இவற்றைச் சுத்தம் செய்து ரொம்பப் பொடியாக இல்லாமலும் அதே சமயம் மிக பெரிதாக இல்லாமலும் நறுக்கி வைத்துக் கொள்ளவும் - 1 கிண்ணம். பதப்படுத்திய தயார்நிலை பீன்ஸ் (legume) - 1 டப்பா வெங்காயம் (நறுக்கியது) - 1/2 கிண்ணம் பூண்டு (நறுக்கியது) - 1 தேக்கரண்டி இஞ்சி (நறுக்கியது) - 1/4 தேக்கரண்டி பொடியாக நறுக்கிய ஜெலோப்பினோ மிளகாய் (jalapeno chile pepper) - தேவையான காரத்திற்கேப்ப மிளகுப் பொடி - 1/4 தேக்கரண்டி கொத்துமல்லித் தூள் - 1/4 தேக்கரண்டி சீரகத் தூள் - 1/4 தேக்கரண்டி ஜாதிக்காய் (nutmeg) பொடி - 1/4 தேக்கரண்டி இலவங்கப்பட்டை (cinnamon) பொடி - 1/4 தேக்கரண்டி மசாலா கலவைப் பொடி (all spice powder) - 1/4 தேக்கரண்டி கரம் மசாலா பொடி - 1/4 தேக்கரண்டி நறுக்கிப் பதப்படுத்திய தக்காளி - 1 டப்பா தக்காளி சாஸ் சிறியது - 1 டப்பா ரெட் ஒயின் வினிகர் - 1/4 தேக்கரண்டி சோயா சாஸ் - 1/4 தேக்கரண்டி மொலாஸஸ் - 1 மேசைக்கரண்டி அல்லது பேகிங் கோகோ பொடி - 1 மேசைக்கரண்டி அல்லது திடீர் காபி அல்லது டீ பொடி சூடான நீரில் கரைத்து (coffee or tea decoction) - 1 மேசைக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப ஆலிவ் எண்ணெய் (extra virgin) - 1 மேசைக்கரண்டி கெட்டியான பால் அல்லது கொழுப்புடன் அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட Half & Half - 1 மேசைக்கரண்டி காரப்பொடி - 1/4 தேக்கரண்டி பார்ஸ்லி (parsley) இலைகள் - சிறிதளவு பசுமையான பே(bay) இலைகள் - சிறிதளவு கொத்துமல்லி இலைகள் - சிறிதளவு சீஸ் துறுவல் - 1 மேசைக்கரண்டி |
|
செய்முறை
பதப்படுத்திய பீன்ஸ¤டன் மொலாஸஸ் அல்லது பேகிங் கோகோ பொடி அல்லது திடீர் காபி அல்லது தேயிலையைச் சூடான நீரில் கரைத்துச் சேர்க்கவும். தேவையான உப்புப் போட்டு அடுப்பை நிதானமான தீயில் வைத்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். சோயாவை நன்றாக மசித்த (veggie ground original) கலவையைப் போட்டு 30 நிமிடங்கள் மிதமான தீயில் ஒன்றுசேரக் கொதிக்க விடவும். பின்னர் சோயா சாஸ், வினிகர் கலந்து ஒரு கொதிவிடவும்.
ஹா·ப் & ஹா·ப் விட்டு ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி பார்ஸ்லி, கொத்துமல்லித் தழை, பசுமையான பிரிஞ்சி இலைகள் (bay leaves), மற்றும் துருவிய சீஸ் மேலாகத் தூவி விடவும். இதில் புரதச்சத்து அதிகமாக உள்ளது.
இந்தச் சில்லி வகைகளைப் பொதுவாகப் பாஸ்டாவுடன் சாப்பிடுவது வழக்கம். ஒரு தட்டில் வேண்டிய அளவு சில்லி, அதன் மீது வெந்த பாஸ்டா, பொடியாக நறுக்கிய வெங்காயம், நிறையச் செட்டர் பாலாடைக் கட்டி (cheddar cheese) ஆகியவற்றை ஒன்றன்மேல் ஒன்றாகப் பரப்பிச் சாப்பிட அருமையாக இருக்கும்.
சப்பாத்தி அல்லது நான் (naan), பராத்தா, பிரெட் அல்லது கடின அல்லது மெதுவான டாகோவில் (hard or soft taco) கொஞ்சம் நறுக்கிய லெட்டுஸ், வெங்காயம், தக்காளி யுடன் இந்த சில்லியையும், கொஞ்சம் துறுவிய செட்டர் சீஸ¤ம் வைத்துச் சுருட்டிச் சாப்பிடலாம். இதை அடுப்பில் அடி கனமான பாத்திரத்தில் (pan) இரண்டு பக்கமும் போட்டு நன்கு சூடான பின்னரும் எடுத்து சாப்பிடலாம்.
எதாவது ஒரு சால்ஸாவையும் சேர்த்து உண்ணலாம். இதை நுண்ணலை அல்லது சாதாரண ஓவனிலோ கூடச் செய்யலாம்.
இந்த சில்லியை கொஞ்சம் எடுத்து மிக்ஸியில் நன்றாக அரைத்துத் தொட்டுக் கொள்ள டிப் (DIP) ஆகப் பயன்படுத்தி டார்ட்டியா சிப்போடு (tortilla chip) சாப்பிடலாம்.
சாதத்துடனும் சாப்பிடலாம். பாஸ்மதி சாதத்துடன் சுவையாக இருக்கும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
சில்லி வகைகள் பேரீச்சம்பழ பெகான் கேக் வாசகர் கைவண்ணம் - கொத்தமல்லி சாதம்
|
|
|
|
|
|
|