லாஸ் ஏஞ்சலஸ்: ஸ்வரமஞ்சரி பிட்ஸ்பர்க்: இலக்கிய உரை சுவாமி விவேகானந்தர் 150வது ஜெயந்தி விழா YSTCA: இளையோரின் சமூக உணர்வு சிகாகோ: தங்க முருகன் விழா புஷ்பாஞ்சலியின் 16வது ஆண்டு விழா மேரியட்டா தமிழ்ப் பள்ளி தீபாவளி அபிநயா: 'காந்தி' நாட்டிய நாடகம்
|
|
|
|
|
ஹூஸ்டன் மீனாட்சி தியேட்டர்ஸ் வழங்கிய 'கிரகப் பிரவேசம்' மனித உணர்வுகளை அலசும் ஓர் அறிவியல் புனைவு. இது, பூமி கிரகத்தின் ஜீவராசிகள் அனைத்தையும் அழித்து, வேற்று கிரகவாசிகள் குடியேற வரும் 'கிரகப் பிரவேசம்'. அப்படி வரும் 'அந்நியன்', ஒரு சராசரி சென்னைவாசி வீட்டில் தங்கினால் என்ன நடக்கும்? இதுதான் நாடகத்தின் கரு. அதில் நகைச்சுவை கலந்து மேடை நாடகமாக்கியுள்ளார் சந்திரமெளலி.
நடுத்தரக் குடும்பத் தலைவர் ஏகாம்பரமாக வரும் டாக்டர் சாரநாதன், குறிக்கோள் தவறாது வாழ முயலும், ஆனால் அதனால் வரும் இன்னல்களைச் சந்திக்க சிரமப்படும் பாத்திரத்தில் நவரசங்களையும் காட்டி அசத்தி விட்டார். அவர் மனைவி அலமேலுவாக வரும் லலிதா சுந்தரேசனின் உச்சரிப்பும், நடிப்பும் சிறப்பு. பொறுப்பில்லாத மகனாக வரும் சதீஷ், நல்ல நடிப்பு. அப்பாவுக்குத் தப்பாத பெண்ணாக அகிலா. எல்லோரும் ஆத்மாவிடம் பல கோரிக்கைகள் வைத்தபோது, 'எதுவும் வேண்டாம், தன்னால் முடிந்தவையே போதும்' என்று சொல்லும் அகிலா இளைய சமுதாயத்தின் முன்மாதிரி. சுரபி வீரராகவனின் நடிப்பு இதைச் சிறப்பாகப் பிரதிபலித்தது. தாத்தாவாக வந்து SMS நகைச்சுவை (மனுஷனுக்கு காலு இல்லேன்னா பேலன்ஸ் பண்ண முடியாது, செல் போன்ல பேலன்ஸ் இல்லேன்னா கால் பண்ண முடியாது) அள்ளித் தெளித்தார் முரளி சந்தானம்.
வீட்டு உரிமையாளராகத் தெலுங்கில் மாட்லாடினார் மணி வைதீஸ்வரன். இவருக்கு காமெடி வேடம் அருமையாகப் பொருந்துகிறது. அமெரிக்காவின் மூன்றாவது மொழி தெலுங்கு என்று இவரது பாணியில் சொன்னபோது அரங்கமே அதிர்ந்தது. கணேஷ் ரகுவுக்கு FBI ஏஜண்ட் பாத்திரம். அவரது தந்தையாகத் தூப்பில் நரசிம்மன், நாசா பணியாளராக பிரியா சந்துரு, பக்கத்து வீட்டுகாரராக சந்திரசேகரன், RAW ஆஃபிசர் வேடத்தில் மகேஷ், 'நாசா ஜான்ஸ்டன்' வேடத்தில் ஷான் ஸ்டோல் என்று அனைவரும் அவரவர் பாத்திரத்தை உணர்ந்து நடித்தனர். |
|
அபர்ணாவாக நடித்த ஹரிப்ரியா அமெரிக்காவில் வளரும் குழந்தை; சிறப்பாகத் தமிழில் பேசி நடித்தார். ஆத்மா பாத்திரப் படைப்பைச் சொல்லியாக வேண்டும். வெளியுலக வாசியாக வந்து, ஏகாம்பரம் வீட்டில் வந்து தங்கி, பின்பு மனித உணர்வு பெறும் ஒரு வேற்று கிரகவாசி ஆத்மா (பெயர் உபயம்: சுஜாதா). நாடகம் சொல்ல வந்ததையும், மனித உணர்வுகளைப் பற்றிய கேள்விகளையும் இந்தப் பாத்திரம் மூலமே அளித்திருந்தது அருமை. ஆத்மா பாத்திரத்தின் ஆழம் அறிந்து நடித்தார் விஸ்வநாதன்.
கையைக் குடு என்றால் கையைக் கழட்டிக் கொடுப்பது, சந்தடி சாக்கில் சப்பாத்தி மாவு செய்வது என்று மேஜிக் எல்லாம் மேடையிலேயே காட்டி குழந்தைகளையும் ரசிக்க வைத்தனர். ஒலி, ஒளி, மேடை அமைப்பு, ஒப்பனை என்று எல்லாத் துறையிலும் மிளிர்ந்தது நாடகம். ஹூஸ்டன் மீனாட்சி அம்மன் கோவில் பிள்ளையாருக்கு 'மறு கிரகப் பிரவேசம்' செய்ய நிதி திரட்ட, நடத்திய இந்த 'கிரகப் பிரவேசம்' குடும்பத்துடன் சேர்ந்து சிரிக்க, சிந்திக்க வைத்த நாடகம்.
நடராஜ கிருஷ்ணன், ஹூஸ்டன் |
|
|
More
லாஸ் ஏஞ்சலஸ்: ஸ்வரமஞ்சரி பிட்ஸ்பர்க்: இலக்கிய உரை சுவாமி விவேகானந்தர் 150வது ஜெயந்தி விழா YSTCA: இளையோரின் சமூக உணர்வு சிகாகோ: தங்க முருகன் விழா புஷ்பாஞ்சலியின் 16வது ஆண்டு விழா மேரியட்டா தமிழ்ப் பள்ளி தீபாவளி அபிநயா: 'காந்தி' நாட்டிய நாடகம்
|
|
|
|
|
|
|