சர்க்கரைவள்ளி தயாரிப்புகள் சர்க்கரைவள்ளி இனிப்புப் பொரியல் சர்க்கரைவள்ளி பொடிமாஸ் சர்க்கரைவள்ளி வறுவல் சர்க்கரைவள்ளிப் பாயசம் சர்க்கரைவள்ளி ஜாமூன்
|
|
|
தேவையான பொருட்கள்
சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 1/2 கிலோ வெல்லம் - 1/2 கிலோ தேங்காய் - 1 கிண்ணம் மைதா மாவு - 1/2 கிலோ ஏலக்காய் - 6 மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி நெய் எண்ணெய் இரண்டும் கலந்து - 1 கரண்டி உப்பு - 1 சிட்டிகை |
|
செய்முறை
மைதாவை சிட்டிகை உப்புப் போட்டு எண்ணெய் விட்டுப் போளிக்குப் பிசைவது போல் பிசைந்து ஊற வைக்கவும்.
கிழங்கைப் பொடியாய் நறுக்கி வாணலியில் சிறிது எண்ணெயும் நெய்யும் விட்டு, அதில் போட்டு மூடி வேகவிடவும். வெல்லம், தேங்காய் சேர்த்து நன்றாகக் கிளறி ஏலக்காய்ப் பொடி போட்டுக் கெட்டியாகப் பூரணம் செய்து கொள்ளவும்.
மைதா மாவை மேல் மாவாக வைத்து உள்ளே பூரணம் வைத்து மூடிப் போளி தட்டித் தோசைக் கல்லில் போட்டு சுற்றிலும் சிறிது நெய் விட்டு எடுக்கவும்.
இந்தப் போளி பிரமாதமாக இருக்கும். ரொம்பக் கட்டியில்லாமல் பிசைந்து கொள்ள வேண்டும்.
தங்கம் ராமசாமி |
|
|
More
சர்க்கரைவள்ளி தயாரிப்புகள் சர்க்கரைவள்ளி இனிப்புப் பொரியல் சர்க்கரைவள்ளி பொடிமாஸ் சர்க்கரைவள்ளி வறுவல் சர்க்கரைவள்ளிப் பாயசம் சர்க்கரைவள்ளி ஜாமூன்
|
|
|
|
|
|
|