சர்க்கரைவள்ளி தயாரிப்புகள் சர்க்கரைவள்ளி பொடிமாஸ் சர்க்கரைவள்ளி வறுவல் சர்க்கரைவள்ளி போளி சர்க்கரைவள்ளிப் பாயசம் சர்க்கரைவள்ளி ஜாமூன்
|
|
|
தேவையான பொருட்கள்
சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 1/2 கிலோ வெல்லம் - 1 கிண்ணம் தேங்காய்த் துருவல் - 1 சிறு கிண்ணம் கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - தாளிப்பதற்கு |
|
செய்முறை
சர்க்கரைவள்ளிக் கிழங்கைக் கழுவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, கிழங்குத் துண்டங்களைப் போட்டு, உப்புச் சிறிது சேர்த்து, 1கரண்டி தண்ணீர்விட்டு மூடி வேகவைக்கவும்.
காய் நன்றாக வெந்தவுடன் வெல்லமும் தேங்காயும் போட்டு, நன்றாகக் கிளறி, ஒன்று சேர்ந்து வரும்போது இறக்கவும். சில சமயம் சர்க்கரையும் போட்டுக் கொள்ளலாம்.
சிவராத்திரிக்கு: கிழங்குத் துண்டுகளை நெய்விட்டுத் தாளித்து வெல்லம், தேங்காய் சிறிது உப்பு போட்டு குழைய வேகவிட்டும் சாப்பிடலாம். சிவராத்திரிக்கு இதைத்தான் செய்து சாப்பிடுவார்கள்.
தங்கம் ராமசாமி |
|
|
More
சர்க்கரைவள்ளி தயாரிப்புகள் சர்க்கரைவள்ளி பொடிமாஸ் சர்க்கரைவள்ளி வறுவல் சர்க்கரைவள்ளி போளி சர்க்கரைவள்ளிப் பாயசம் சர்க்கரைவள்ளி ஜாமூன்
|
|
|
|
|
|
|