தெரியுமா?: கலிபோர்னியா பல்கலை தமிழ்த்துறை ஒன்பதாம் மாநாடு
|
|
|
|
|
பத்தே வயதான சிறுவன் இஷான் பல டென்னிஸ் போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளார். பொழுதுபோக்காக மேசைப்பந்து போட்டிகளிலும் விளையாடி பரிசுகளைத் தட்டிச் சென்றுள்ளார்.
ரோஜர் ஃபெடரர் என்றால் இவருக்கு உயிர். இஷான் தன் வீட்டின் அடித்தளத்தில் தன் பிறந்த நாளை முன்னிட்டு ஜனவரி 28, 2012 அன்று மேசைப்பந்து போட்டி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்து, அதில் பங்கேற்க 5 டாலர் பதிவுக் கட்டணம் என அறிவித்தார். இதன் வருவாயை the Association of India Development's (AID) EurekaSuperKidz Project-ன் பிரின்ஸ்டன் நியூ ஜெர்சி கிளைக்குத் தருவதாகக் கூறியதும் அவர்களும் மகிழ்ச்சியோடு தமது வலையகத்தில் இடம் கொடுத்தனர். அவ்வளவுதான், 2300 டாலர் தொகை வந்து குவிந்தது.
இஷான் எதிர்பார்த்தது 350 டாலர்௦ மட்டுமே! இந்த வலை தளத்தை (runforindia.org) இஷான் தானே மேற்பார்வை செய்து அமைத்தார். இஷானின் தங்கை ஆன்யா ரவிசந்தர் தனது சேமிப்பிலிருந்து போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசும் அளித்தார். 70 பேர் கலந்து கொள்ள, 65 போட்டிகள் மூன்று மேசைகளில் நடந்தன.
இதனைக் காண நூறு பேருக்குமேல் வந்திருந்தனர்.
இதில் வென்றவர்கள்: Adult open draw winner: நிர்மல் டேவிட் Adult open draw runner-up: பெர்னெட் ஃபெர்னாண்டெஸ் Junior open draw winner: இஷான் ரவிசந்தர் Junior open draw runner-up: விதித் காப்ரா
AID EurekaSuperKidz Project-ன் பிரின்ஸ்டன் (நியூ ஜெர்சி) பிரிவு தன்னார்வத் தொண்டர்களும் பிற தொண்டர்களும் நிகழ்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர். நியூ ஜெர்சி கவர்னர் க்ரிஸ்ட் க்ரிஸ்டி, இஷானின் தர்ம சிந்தனையைப் பாராட்டி அவருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். கோடை விடுமுறைக்கு இந்தியா செல்ல இருக்கும் இஷானும் தங்கை ஆன்யாவும் இந்தத் திட்டத்தினால் உதவி பெற இருக்கும் கிராமத்தைக் காண மிக ஆவலோடு உள்ளனர். AID EurekaSuperKidz திட்டம் இந்தியாவில் பின்தங்கிய கிராமப்புறக் குழந்தைகளின் கல்விப் பணிகளுக்கு உதவுகிறது. |
|
சரஸ்வதி தியாகராஜன், பாஸ்டன் |
|
|
More
தெரியுமா?: கலிபோர்னியா பல்கலை தமிழ்த்துறை ஒன்பதாம் மாநாடு
|
|
|
|
|
|
|