அரோரா: 'சிவோஹம்' SCTS: பொங்கல் விழா லெமான்ட் கோவில்: தைப்பூசம் NETS: பொங்கல் விழா: நியூ ஜெர்ஸி: பொங்கல் விழா யுவ நாட்டிய சக்தி அபிநயா பரத நாட்டிய அரங்கேற்றம் சென்னையில் 'அப்யாஸ்' மார்கழி இசை
|
|
|
|
|
பிப்ரவரி 12, 2012 அன்று சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் 'திருமண வாழ்வில் அதிகம் விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போகிறவர்கள் ஆண்களே! பெண்களே!' என்ற தலைப்பில் பட்டிமன்றம் ஒன்றை நடத்தியது. நிகழ்ச்சிக்கு நகைச்சுவைப் பேச்சாளர் 'பட்டிமன்றம்' ராஜா நடுவராக இருந்தார்.
ராஜா தமக்கே உரித்தான நடையில் அமெரிக்கத் தமிழர்களின் வாழ்க்கையின் சிறப்புகளையும், சந்திக்கும் சவால்களையும் பலரும் சிந்திக்கும் வண்ணம் பட்டியலிட்டுப் பட்டிமன்றத்தைத் தொடங்கி வைத்தார். ஆண்களே என்ற தரப்பில் பத்மநாபன், கிருஷ்ணா, அபு, சங்கர், கோபால் ஆகியோரும், பெண்களே என்ற தரப்பில் நித்யவதி, டெய்சி, சாந்தி, நாச்சா, ஸ்ரீகாந்த் ஆகியோரும் திறம்பட வாதங்களை வழங்கினர். நடுவர் தமது தீர்ப்புரையில் ஆண்கள் எவ்வளவு விட்டுக்கொடுத்துப் போகிறார்கள் என்று பல அரிய தகவல்களைத் தொகுத்துக் கூறினார். இருப்பினும் திருமண வாழ்வில் அதிகம் விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போகிறவர்கள் பெண்களே என்ற தீர்ப்பை அறிவிக்குமுன் திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண் பிறந்தவீட்டைப் பிரியும்போது ஏற்படும் மன உளைச்சலை விளக்கிய போது அவையோரின் உள்ளம் உணர்ச்சி வெள்ளமாய்ப் போனதை அரங்கத்தின் நிசப்தத்தால் அறிய முடிந்தது.
கருத்துக்கூறவும், தொடர்பு கொள்ளவும்: மின்னஞ்சல் - batm.president@gmail.com முகநூல் - www.facebook.com/bayareatamilmanram |
|
இந்திரா தங்கசாமி |
|
|
More
அரோரா: 'சிவோஹம்' SCTS: பொங்கல் விழா லெமான்ட் கோவில்: தைப்பூசம் NETS: பொங்கல் விழா: நியூ ஜெர்ஸி: பொங்கல் விழா யுவ நாட்டிய சக்தி அபிநயா பரத நாட்டிய அரங்கேற்றம் சென்னையில் 'அப்யாஸ்' மார்கழி இசை
|
|
|
|
|
|
|