சன்ஹிதி: 'Perceptions-2012' கனெக்டிகட் தமிழ்ச் சங்கம்: 'க்ரேஸி' நாடகம் BATM: சித்திரை விழா BATM: க்ரேஸி மோகனின் 'சாக்லெட் கிருஷ்ணா'
|
|
சத்குருவின் வட அமெரிக்க விஜயம் |
|
- |மார்ச் 2012| |
|
|
|
|
|
மே 4-6, 2012 தேதிகளில் ஹூஸ்டன், டெக்ஸசில் 3 நாள் உள்நிலைப் பொறியியல் (Inner engineering) யோகப் பயிற்சி ஒன்றை சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் நடத்த இருக்கிறார். உள்நிலைப் பொறியியல், ஒருவருடைய தனிப்பட்ட வளர்ச்சிக்காக அளிக்கப்படும் தீவிர நிகழ்ச்சியாகும், இது யோக விஞ்ஞானத்திலிருந்து மிகவும் எளிதான ஆனால் சக்தி வாய்ந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி நம்மைத் தூய்மைப்படுத்தி, ஆரோக்கியம், மனத்தெளிவு, உள்நலன் ஆகியவற்றை அதிகரிக்கிறது. நிகழச்சியில் வழிகாட்டுதலுடன் கூடிய தியானமும் மிகவும் தூய்மையான ஷாம்பவி மஹாமுத்ராவும் அளிக்கப்படும்.
மேலும் விபரங்கள் அறிய வலையகம்: InnerEngineering.com தொலைபேசி: 832.408.0663.
வலைதளத்தில் உள்நிலைப் பொறியியல் (Inner engineering) முன்னரே கற்றுக் கொண்டவர்களுக்கு வரும் மார்ச் 17-18 தேதிகளில் மில்பிடாஸ் ICC சென்டரில் ஈஷா யோகா ஆசிரியர் நடத்தும் ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சி நடக்க இருக்கிறது.
விபரம் அறிய: வலையகங்கள்: www.ishausa.org; InnerEngineering.com தொலைபேசி: 1-866-424-4742; 832.408.0663 |
|
நம் காலத்தின் ஆழ்ந்த மெய்யறிவாளரான சத்குரு அவர்கள் தொலைநோக்குடைய மனிதநேயரும் முதன்மையான ஆன்மீகத் தலைவரும் ஆவார். இந்தியாவிலேயே முக்கியமான 50 நபர்களில் அவர் ஒருவர். உலகப் பொருளாதார மாநாடு. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் TED போன்ற மன்றங்களில் பங்குபெற்று பொருளாதார முன்னேற்றம் முதல் கல்வி, சுய மாற்றம், சுற்றுச்சூழல் வரை பல பிரச்சனைகள் குறித்து உரையாற்றி இருக்கிறார். "வெளிச் சூழ்நிலையில் நலத்தை உருவாக்குவதற்கு, எப்படி நமக்கு பருப்பொருள் விஞ்ஞானம் இருக்கிறதோ, அதேபோல நமது உள்நலனை உருவாக்குவதற்கும் ஒரு முழுமையான உள்பரிமாணத்துடன் கூடிய விஞ்ஞானம் இருக்கிறது. நான் அதை உள்நிலைப் பொறியியல் என்று அழைப்பேன்" என்கிறார் சத்குரு.
2012 மே 11, 12, 13 தேதிகளில் டொரண்டோவில் சத்குருவுடன் ஈஷா யோகா நடைபெறவுள்ளது. இதற்கு முன்னோடியாக ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் ஆங்காங்கே ஈஷா க்ரியா வகுப்புகள் நடத்தி வருகிறார்கள். ஈஷா க்ரியா வீட்டிலிருந்தபடியே செய்யக்கூடிய எளிய, சக்திவாய்ந்த பயிற்சி முறையாகும். இதை நாள்தோறும் செய்து வருபவர்கள் நீண்டநாள் நோய்களிலிருந்து விடுதலை அடைந்துள்ளனர். மனச்சோர்வு, களைப்பு இன்றி உற்சாகத்துடனும், மனமகிழ்வுடனும் வாழ்கின்றனர். தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி: 416.300.3010; 647.857.4742. |
|
|
More
சன்ஹிதி: 'Perceptions-2012' கனெக்டிகட் தமிழ்ச் சங்கம்: 'க்ரேஸி' நாடகம் BATM: சித்திரை விழா BATM: க்ரேஸி மோகனின் 'சாக்லெட் கிருஷ்ணா'
|
|
|
|
|
|
|