Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நலம்வாழ | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நிதி அறிவோம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிரிக்க சிரிக்க | ஜோக்ஸ் | விளையாட்டு விசயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | சிரிக்க, சிந்திக்க | வார்த்தை சிறகினிலே
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
புற்றுநோய் நிதிக்காக க்ரியாவின் ‘Seeds and Flowers’
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் வழங்கும் சித்திரை கொண்டாட்டம்
கலி·போர்னியா தமிழ்க் கழகத்தின் ஆண்டு விழா
ஸ்ருதி ஸ்வர லயா வழங்கும் இசைவிழா மற்றும் பயிலரங்கம்
கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் வழங்கும் சித்திரைத் திருநாள் விழா
FETNA வழங்கும் தமிழ் விழா 2007
சின்சினாட்டியில் ‘பருவங்களின் நாதங்கள்’
- |ஏப்ரல் 2007|
Share:
Click Here Enlargeமே 6, 2007 அன்று சின்சினாட்டி சிறுவர் இசைக்குழு, சின்சினாட்டி சேம்பர் கருவிக்குழு ஆகியோருடன் தி கிரேட்டர் சின்சினாட்டி இந்தியச் சிறுவர் இசைக்குழு இணைந்து வழங்கும் ‘The Sound of Seasons - A Musical Celebration of Time’ என்ற மகத்தான அரங்கிசை நிகழ்ச்சி நடைபெறும். இதில் சாந்தி இசைக்குழுவிலிருந்தும் பாடகர்கள் பங்கேற்பர்.

பிரபல இசைகலைஞரும் இசையமைப் பாளரும் குருவுமான திரு கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரன் அவர்கள் இந்நிகழ்ச்சியை வடிவமைத்திருக்கிறார். கலசாரங்களை ஊடறுத்துச் செல்லும், புராதனமான இந்திய ராகங்களின் இசைக்குழு/தேவாலயப் பாடல் வெளிப்பாடு என்று இதனை வர்ணிக்கலாம். பருவமாற்றங்களின் தத்துவத்தை இசையோடு கதையாகச் சொல்லும் கற்பனை வடிவத்தை இந்த இசை நிகழ்ச்சி கையாளுகிறது.

‘பருவங்களுக்கு அப்பால்’ என்ற இந்தியச் சிறாருக்கான பயிலரங்கத்தின் உச்சமாக இந்நிகழ்ச்சி வருகிறது. பயிலரங்கத்தில் 65 சிறார்கள் 9 மாத காலத்தில் பருவ காலங்களுக்கான இந்திய ராகங்களை நுணுகி ஆய்ந்தனர். ‘இந்தியாவில் பிறந்த பெற்றோரின் அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளுக்குத் தமது பாரம்பரியத்தைப் பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இந்தப் பயிலரங்கம் அமைந்தது’ என்கிறார் கன்னிக்ஸ். ஓஹியோ ஆர்ட்ஸ் கவுன்ஸிலின் பகுதி நிதி உதவி இந்தப் பயிலரங்கத்தைச் சாத்தியமாக்கிற்று.

‘பருவங்களின் நாதங்கள்’ நிகழ்ச்சியின் கௌரவ இசை நடத்துனர் ரே வீலர் (faculty member at the Division of Music Education - College Conservatory of Music).

‘சாந்தி ஓர் அமைதிப் பயணம்’ என்ற பிரம்மாண்டமான, அரங்கு நிரம்பிய நிகழ்ச்சியை வழங்கிப் புகழ்பெற்ற கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரன் கலைக்கான விருதுகள் பலவற்றைப் பெற்றவர். பொறியியலாளரான இவர் இசையில் புதிய உச்சங்களைத் தொட்டுள்ளார்.
அதிக விவரங்களுக்கு:
Contact: Sherry Tippey
Email: tippeytours@hotmail.com
Website: www.templenet.com/seasons.htm
நிகழ்ச்சி: ‘The Sound of Seasons’ Concert
நாள், நேரம்: மே 6, 2007;
மாலை 4:00 மணி மற்றும் 6:30 மணி
இடம்: Sycamore High School, 7400 Cornell Rd, Cincinnati, 45242
தொலைபேசி: 513.686.1770
நுழைவுச்சீட்டுகள்: $10 (அரங்க நுழைவாயிலில் பெறலாம்)
More

புற்றுநோய் நிதிக்காக க்ரியாவின் ‘Seeds and Flowers’
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் வழங்கும் சித்திரை கொண்டாட்டம்
கலி·போர்னியா தமிழ்க் கழகத்தின் ஆண்டு விழா
ஸ்ருதி ஸ்வர லயா வழங்கும் இசைவிழா மற்றும் பயிலரங்கம்
கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் வழங்கும் சித்திரைத் திருநாள் விழா
FETNA வழங்கும் தமிழ் விழா 2007
Share: 




© Copyright 2020 Tamilonline