|
செப்டம்பர் 2011: ஜோக்ஸ் |
|
- தமிழ்மேகம்|செப்டம்பர் 2011| |
|
|
|
நிருபர்: நீங்க சிறுகதை எழுத்தாளர். ஆனா டிவி சீரியலுக்கு ரெண்டு வருஷமா தொடர்கதை எழுதிக்கிட்டு வரீங்களே, எப்படி? எழுத்தாளர்: நான் எழுதின ரெண்டு பக்க சிறுகதையைத்தான் டைரக்டர் ரெண்டு வருஷமா இழுத்துக்கிட்டிருக்காரு!
*****
நீதிபதி: திருடறதையும் திருடிட்டு திருடலேன்னு சொல்றயாமே? குற்றவாளி: திருடாமலே திருடலேன்னு சொல்ல சங்கடமா இருக்குது ஐயா!
*****
நண்பர்: உங்க குழந்தைகளுக்குத் தமிழ் கத்துக்குடுக்கறேன்னு உங்கம்மா தொடங்கினாங்களே, என்ன ஆச்சு? மற்றவர்: அதுவா, எங்கம்மா இப்ப சூப்பரா இங்கிலீஷ் பேசறாங்க.
*****
இன்ஸ்பெக்டர்: இறந்துபோன உங்க மாமியாருக்கு நீச்சல் தெரியாதுன்னு உங்களுக்கு எப்போ தெரியும்? மருமகள்: தள்ளி விடுறதுக்கு முன்னாடிதான்! |
|
தமிழ்மேகம், மிச்சிகன் |
|
|
|
|
|
|
|