கேரளத்து விஷு சமையல் காளன் பீன்ஸ் துவரன் (தோரன்) ஔலன் பாலடைப் பிரதமன்
|
|
|
தேவையான பொருட்கள்
வாழைக்காய் அல்லது உருளைக்கிழங்கு (தோல்சீவி நறுக்கிய துண்டங்கள்) - 2 கிண்ணம் மிளகாய் வற்றல் - 5 மிளகு - 1 தேக்கரண்டி தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம் சீரகம் - 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப கறிவேப்பிலை - தேவைக்கேற்ப தேங்காய் எண்ணெய் - தாளிப்பதற்கு |
|
செய்முறை
காய்கறி வேகவைக்கத் தேவையான அளவு தண்ணீரை அடிகனத்த பாத்திரத்தில் வைக்கவும். மிளகாய்வற்றல், மிளகு இரண்டையும் நன்கு அரைத்து இந்தத் தண்ணீரில் விட்டுக் கலந்து இதில் காய்கறியுடன் தேவையான உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேகவிடவும். பின்னர் பாதி தேங்காய்த் துருவலை சீரகத்துடன் நன்கு அரைத்து வெந்த காய்களுடன் சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு சேர்ந்து வந்ததும் இறக்கவும். மீதி உள்ள தேங்காய்த் துருவலை தேங்காய் எண்ணெய் விட்டுப் பொன்னிறமாக வறுத்து, இதில் சேர்க்கவும். பின்னர் கடுகு, கறிவேப்பிலை தாளித்து நன்றாகக் கலந்து விடவும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
கேரளத்து விஷு சமையல் காளன் பீன்ஸ் துவரன் (தோரன்) ஔலன் பாலடைப் பிரதமன்
|
|
|
|
|
|
|