கேரளத்து விஷு சமையல் காளன் ஔலன் எரிசேரி பாலடைப் பிரதமன்
|
|
|
இந்த தோரனை கேரளத்தின் சில பாகத்தில் பொடிதூவல் என்றும் சொல்லுவர்.
தேவையான பொருட்கள்
பீன்ஸ் (சிறிய துண்டங்களாக நறுக்கியது) - 2 கிண்ணம் தேங்காய் - அரை மூடி பச்சை மிளகாய் - 3 சீரகம் - 1 தேக்கரண்டி மிளகாய் வற்றல் - 3 மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப கறிவேப்பிலை - சிறிதளவு தேங்காய் எண்ணெய் - சிறிதளவு |
|
செய்முறை
தேங்காயைத் துருவி எடுத்துக் கொண்டு, பச்சை மிளகாய், மிளகாய் வற்றல், சீரகம் இவற்றுடன் சேர்த்து கரகரப்பாகத் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.
அடி கனமான ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் நறுக்கிய பீன்ஸ் துண்டுகள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவிடவும்.
காய் நன்றாக வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய், மிளகாய் கலவையைப் போட்டு நன்றாகக் கிளறவும்.
ஒரு பெரிய கரண்டியில் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்துப் போடவும்.
கறிவேப்பிலையைக் கிள்ளிப் போட்டுக் கிளறி உடனே இறக்கவும் காயை நுண்ணலை அடுப்பிலோ அல்லது பிரஷர் குக்கரிலோ வேகவைத்துக்கொள்ளலாம்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
கேரளத்து விஷு சமையல் காளன் ஔலன் எரிசேரி பாலடைப் பிரதமன்
|
|
|
|
|
|
|