Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
CCC மாணவர்கள் குவித்த பரிசுகள்
சிகாகோ முத்தமிழ் விழா
அக்சஸ் பிரெய்லி: காயத்ரி சத்யா கச்சேரி
ப்ரியா ஷங்கர் நடனம்
சிகாகோவில் யோக சங்கீதம்
ஹன்ட்ஸ்வில்லில் தமிழ்ப் புத்தாண்டு விழா
சுனாமி நிதிக்காக அமிர்தானந்தமயி மைய இசை நிகழ்ச்சி
ஹூஸ்டனில் 'சென்னை தாண்டி வருவாயா'
நிவேதா சந்திரசேகர் சங்கீத அரங்கேற்றம்
மலிபு கோவில் தியாகராஜ ஆராதனை இசை விழா
சாண்டியேகோ இசை, நாட்டிய விழா 2011
BATM சித்திரைக் கொண்டாட்டம் 2011
செயிண்ட் லூயி நகரில் சூர்யா நடன விழா
- அனிதா நாக், சுபா பாஸ்கர்|மே 2011|
Share:
2011 ஏப்ரல் 15 முதல் 17 வரை 3 நாட்கள் கிளேட்டன் உயர்நிலைப் பள்ளி அரங்கில் 3வது செயிண்ட் லூயி இந்திய நடன விழா நடைபெற்றது. 134 கலைஞர்களைக் கொண்ட 23 வெவ்வேறு நடனக் குழுவினர் அமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் வந்திருந்து நடன வகைகளை விழி விருந்தாக்கினர்.

பாலே, ஜாஸ் பயின்றவரும், பரதநாட்டிய மாணவருமான கிறிஸ் வீஸர் டால்டன் வழங்கிய புஷ்பாஞ்சலி, தில்லானாவுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அடுத்து, பாலிவுட்/நாட்டுப்புறக் கலைஞர் பல்லவி சந்தக்கின் மாணவியர் நாட்டுப்புற நடனம் வழங்கினர். நியூயார்க்கின் மோஹினி ஆட்டக் கலைஞர் லக்ஷ்மி குருப்பு 'நாட்டிய மஞ்சரி'யை வழங்கினார். கஜன், சுயாஷ், அஞ்ஜனா தம் நண்பர்களோடு வழங்கிய விறுவிறுப்பான பாங்க்ரா அவையைக் கலக்கியது. (கென்டகி) லக்ஷ்மி ஸ்ரீராமுடன், (நார்த் கரோலினா) அஷ்வினி கோகடே இணைந்து வழங்கிய பரதநாட்டியம்-கதக் ஜுகல்பந்தி கண்ணுக்கு விருந்து. அதிதி பந்தோபாத் யாயாவின் ஒடிஸி புராண சம்பவங்களைச் சுவையாகக் கண்முன் நிறுத்தியது.

இரண்டாம் நாளன்று ஒஹையோவின் கேஸ் வெஸ்டர்ன் பல்கலை மற்றும் 'கேஸ் நிருத்யா'வின் மாணவர் சினேஹா பகவன் தாஸ் காவ்யாஞ்சலி மற்றும் திருக்குறளுக்கு ஆடினார். அக்ஷதா ஸ்ரீதரின் மந்தகதி நடனம் கம்பீரமானதாக இருந்தது. சூர்யா குழுவின ரின் ராமாயணத்தை ஆதாரமாகக் கொண்ட 'பாவயாமி'யை வழங்கியது. அதன் ஷாலினி, சுமி, அனுஜா, அமுதா ஆகியோ ரின் அபிநயம் வெகு அழகு என்றால் பின்னணி பாடிய சீமா கஸ்தூரியின் குரல் தேனமுதம். குரு பிரசன்னா கஸ்தூரி அதை நேர்த்தியாக வடிவமைத்திருந்தார். ஷ்ரேயஸி நடனக் குழுவின் வசீகரமான ஒடிஸியும் அன்றைய முக்கிய உருப்படிகளில் ஒன்று. குழுவின் இரட்டையரான இஷிகாவும் கிருத்திகாவும் மற்றொரு திறமையான நடனக்காரரான அனன்யா காருடன் ஒத்தி சைந்து ஆடினார்கள். குரு ஷ்ரேயஸி டேயின் ('மானினி') நடன வடிவமைப்பு பாராட்டுக் குரியது. சான் ஹோஸேயின் அபிநயா நடனக்குழுமம் செம்மையான நடன அசைவுகளின் மூலம் வந்திருந்தோரின் இதயத்தைக் கவர்ந்தனர். குரு மைதிலி குமாரின் வியப்பூட்டும் நடன அமைப்பும் ஆடிய ரசிகா குமாரின் நம்பற்கரிய நடனமும் அற்புதம். சிகாகோவின் நாட்யா டான்ஸ் தியேடர் வழங்கிய 'சிவம்' ஏன் நாட்யா அமெரிக்காவின் சிறந்த அமைப்புகளில் ஒன்று என்பதற்குச் சான்றாக அமைந் திருந்தது. டெட்ராயிட்டின் குரு ரூபா ஷியாம்சுந்தர் 'தேஷ்' நிகழ்ச்சியை வழங் கினார். சான் பிரான்சிஸ்கோவின் ஷார்லட் மொராகா வழங்கிய கதக் நடனம் அவருக்கு 'Gem of Dances' விருதைப் பெற்றுத் தந்து, அவரது குரு சித்ரேஷ் தாஸைப் பெருமைப் பட வைத்தது.
மூன்றாம் நாளன்று கிளீவ்லாந்தின் குரு சுஜாதா ஸ்ரீனிவாசன் அன்னமாசார்யா கிருதிகளால் அமைந்த நடன நிகழ்ச்சியை வழங்கினார். தமது மாணாக்கர்களுடன் நடனமாடிய குரு ஹேமா ஷர்மாவுக்கு கன்சாஸ் நகரில் நிகழ்கலைகளுக்குச் செய்த சேவைக்காக விருது வழங்கப்பட்டது. செயின்ட் லூயியின் வாஷிங்டன் பல்கலை மாணவர்கள் ஆடிய உற்சாகமான பாங்க்ரா பார்வையாளர்களையும் குதிபோட வைத் தது. நவீன மற்றும் ஜாஸ் நடனங்களை இணைத்து நார்த் டெக்சாஸ் பல்கலை மாணவர் பிரதிபா நடேசன் வெகு அழகாக ஒரு நிகழ்ச்சியைக் கொடுத்தார். ஹிசிலிகி முன்னாள் மாணவர் அஞ்சலி டாடா, கன்சாஸ் பல்கலை நடனத்துறைத் தலைவர் பேரா. பேட்ரிக் சுஸூவுடன் இணைந்து இந்திய நவீன நடனம் ஒன்றைச் சிறப்புறத் தந்தார். சுனந்தா நாயரின் அழகான மோஹினியாட்டம் அவருக்கு 'அபிநய சிகாமணி' பட்டத்தைப் பெற்றுத் தந்தது. பல்லவி படவடி கண்ணுக்கினிய குச்சிபுடி நடனம் வழங்கினார். இந்த நடனத் திருவிழாவின் பின்னேயுள்ள முக்கிய நபரான குரு பிரசன்னா கஸ்தூரி 'Reflections' என்ற செவ்வியல் நடன நிகழ்ச்சியை வழங்கினார். அது உபநிடதங்கள், பாகவதம் போன்றவற் றிலிருந்து அம்சங்களைக் கொண்டதாக இருந்தது.

விழாவை நடத்திய 'சூர்யா பர்ஃபார்மிங் ஆர்ட்ஸ்' அமைப்பு ஹேமா ராஜகோபாலன் (சிகாகோ), மைதிலி குமார் (சான் ஹோசே, கலி.) ஆகியோருக்கு வாழ்நாள் சாதனை யாளர் விருது கொடுத்து கௌரவித்தது. பிரபல சிதார் கலைஞர் உஸ்தாத் இம்ரத் கான் விருதுகளைக் கையளித்தார்.

ஆங்கிலத்தில்: அனிதா நாக், சுபா பாஸ்கர் எழுதியதின் சுருக்கிய தமிழ் வடிவம்
மேலும் படங்களுக்கு
More

CCC மாணவர்கள் குவித்த பரிசுகள்
சிகாகோ முத்தமிழ் விழா
அக்சஸ் பிரெய்லி: காயத்ரி சத்யா கச்சேரி
ப்ரியா ஷங்கர் நடனம்
சிகாகோவில் யோக சங்கீதம்
ஹன்ட்ஸ்வில்லில் தமிழ்ப் புத்தாண்டு விழா
சுனாமி நிதிக்காக அமிர்தானந்தமயி மைய இசை நிகழ்ச்சி
ஹூஸ்டனில் 'சென்னை தாண்டி வருவாயா'
நிவேதா சந்திரசேகர் சங்கீத அரங்கேற்றம்
மலிபு கோவில் தியாகராஜ ஆராதனை இசை விழா
சாண்டியேகோ இசை, நாட்டிய விழா 2011
BATM சித்திரைக் கொண்டாட்டம் 2011
Share: 




© Copyright 2020 Tamilonline