ஜனனி சாயி ஸ்ரீதரன் நாட்டிய அரங்கேற்றம் புதுக் கலிஃபோனிய ஊடகங்கள் ஆண்டு விழாவில் 'தென்றல்' சிகாகோ தமிழ் சங்கம் பொங்கல் விழா ரஞ்சனி சுகுமாரன் பரதநாட்டிய அரங்கேற்றம்
|
|
|
பிப்ரவரி 4, 2006 அன்று சான் ஓசே சி இ டி மையத்தில் தென்னிந்திய நுண்கலைகள் (SIFA) அமைப்பின் ஆதரவில் தியாக பிரம்ம ஆராதனை நடந்தேறியது.
காலை 8:30 மணிக்குக் கிட்டத்தட்ட 30 கலைஞர்களுடன் ஆஷா ரமேஷ் அவர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடியது கண்ணுக்கு மெய்சிலிர்க்கும் காட்சி.
10:30 மணியிலிருந்து இரவுவரை இசைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தனிப்பட்ட முறையில் கற்று கொண்டவர்கள் என்று மொத்தம் 120 பேர் வரிசையாகக் கலந்து கொண்டு பாடிச் சிறப்பித்தனர். வளைகுடாப் பகுதி வருங்காலத்தில் இசை மழை பொழியும் 'மினி சென்னை'யாக மாறும் என்பதில் ஐயமில்லை. வீணை, வயலின், புல்லாங்குழல் முதலிய வாத்தியங்கள் பயிலும் மாணவர்களும் கலந்துகொண்டு வாசித்தனர்.
மாணவ மாணவிகள், இசை ஆர்வலர்கள் அனைவருக்கும் சந்தர்ப்பம் கொடுத்து மேடையில் பாடவைத்து நிகழ்ச்சியைச் சிறப்புற நடத்தினது SIFA. குழந்தைகளைப் பக்கவாத்தியத்துடன் பாடவைத்திருந்தால் இன்னும் எடுப்பாக இருந்திருக்கும். |
|
சீதா துரைராஜ் |
|
|
More
ஜனனி சாயி ஸ்ரீதரன் நாட்டிய அரங்கேற்றம் புதுக் கலிஃபோனிய ஊடகங்கள் ஆண்டு விழாவில் 'தென்றல்' சிகாகோ தமிழ் சங்கம் பொங்கல் விழா ரஞ்சனி சுகுமாரன் பரதநாட்டிய அரங்கேற்றம்
|
|
|
|
|
|
|