நாட்டியத்தில் நாச்சியார் திருமொழி ஷாந்தி - ஓர் அமைதிப் பயணம் வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்: சித்திரைக் கொண்டாட்டம்
|
|
ஸ்ருதி ஸ்வர லயாவின் ஆண்டு விழா |
|
- |மார்ச் 2006| |
|
|
|
ஸ்ருதி ஸ்வர லயா (பாரதி கலாலயா என முன்னர் அறியப்பட்டது) தனது இரண்டாம் ஆண்டு விழாவை மாரச் 25, 2006 அன்று கொண்டாடுகிறது. அன்று ஒரு முழுநாள் (marathon) இசை நிகழ்ச்சியை காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை ஏற்பாடு செய்துள்ளது. காலையில் தியாகராஜ ஆராதனையுடன் நாளின் நிகழ்ச்சிகள் துவங்குகின்றன. இதில் இசை மாணவர்களும் ஆசிரியர்களும் பஞ்சரத்தினக் கீர்த்தனைகளை வழங்குவார்கள். இதைத் தொடர்ந்து குழுக்களாகவும், தனி நபராகவும் தியாகராஜ கீர்த்தனைகள் பாடப்படும்.
இதன் மதியத் தொடரில் ஸ்ருதி ஸ்வர லயா மாணவ மாணவியர் குறுங்கச்சேரி ஒன்றை அளிக்கவிருக்கிறார்கள். இந் நிகழ்ச்சியில் இறுதியாக அனு சுரேஷ் அவர்கள் பாடுவார். அவருடன் இணைந்து மானஸா சுரேஷ் (குரலிசை), மைதிலி ராஜப்பன் (வயலின்), ரவி ஸ்ரீதரன் (மிருதங்கம்) உடன் இசைக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சி பள்ளிக்கு வளர்ச்சி நிதி திரட்டுவதற்காக நடத்தப்படுகிறது.
அனுமதி இலவசம். நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன. |
|
மேலும் விவரங்களுக்கு: தொலைபேசி: 510-490-4629 மின்னஞ்சல்: ggavimal@sbcglobal.net |
|
|
More
நாட்டியத்தில் நாச்சியார் திருமொழி ஷாந்தி - ஓர் அமைதிப் பயணம் வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்: சித்திரைக் கொண்டாட்டம்
|
|
|
|
|
|
|