பெற்ற மனமும் பிள்ளை மனமும் மினி கதை: சந்'தோஷம்'
|
|
|
|
ராகுல் நண்பனோடு சேர்ந்து வாடகைக்கு வீடு பார்த்தான். அவன் வேலை செய்யும் ஐ.டி.பார்க் பக்கத்திலேயே வீடு இருந்ததால் ராகுலுக்குப் பிடித்துப் போயிற்று.
வாடகை 25,000 ரூபாய், முன்பணம் 1,75,000!
"அடுத்த வாரம் வீட்டுக்குக் குடி வந்துரலாம்" என்றார் வீட்டுக்காரர். ராகுல் போனபின் அவர் தன் மனைவியிடம், "இந்தச் சின்ன வயசிலயே பணம், காசு புரளுது. இதுக்குத்தான் படிப்பு அறிவு வேணுங்கிறது. எவ்வளவு வாடகைனாலும் கொடுக்கத் தயாரா இருக்காங்க."
வெளியே வந்தபின், ராகுல் நண்பனிடம்: "நல்ல இடத்துல வீட்டைக்க் கட்டிவிட்டு வாடகை வாங்கியே பொழைக்கறாங்க. நாம என்னன்னா சம்பாதிக்கற பணத்தையெல்லாம் வாடகைக்கே கொட்டி அழ வேண்டியிருக்கு." |
|
நித்யா நாச்சி, மேரிலாந்து |
|
|
More
பெற்ற மனமும் பிள்ளை மனமும் மினி கதை: சந்'தோஷம்'
|
|
|
|
|
|
|