பெற்ற மனமும் பிள்ளை மனமும் மினி கதை: வாடகை
|
|
|
|
|
இளைய மகள் ரேவதியிடம் இருந்து போன் கால். "ஹலோ, அம்மா உனக்கு ஒரு நல்ல செய்தி!"
"என்ன விஷயம் ரேவதி?"
"நீ பாட்டி ஆகப் போறம்மா" என்றாள் சந்தோஷ மிதப்பில்.
"சரி, உடம்பை பத்திரமா பாத்துக்கோ" என்று போனை வைத்தாள்.
அம்மாவின் முகத்தில் சந்தோஷத்தின் அறிகுறி தெரியவில்லை.
அருகில் இருந்த உறவுக்காரப் பெண் ருக்மணி கேட்டாள், உன் பொண்ணு தான் கர்ப்பமா இருக்கறதச் சொல்லி சந்தோசப்படுறா, ஆனா, நீயோ அந்த பூரிப்பே இல்லாம இருக்க?"
"ஆமா, கல்யாணம் ஆகி எட்டு வருஷம் ஆகியும் தாயாகாத என் முதல் பொண்ணு ரஞ்சனியைப் பத்தி கவலைப்படுறதா, இல்லை கல்யாணம் ஆன ஒரே வருஷத்துல என்னைப் பாட்டி ஆக்கப்போற ரேவதியை நினச்சு சந்தோஷப் படுறதான்னு தெரியலை." |
|
நித்யா நாச்சி, மேரிலாந்து |
|
|
More
பெற்ற மனமும் பிள்ளை மனமும் மினி கதை: வாடகை
|
|
|
|
|
|
|