Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ | பயணம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | புதுமைத்தொடர் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அமெரிக்க அனுபவம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
தமிழக அரசியல்
இன்னுமொரு இந்திரா காங்கிரஸ்
'என் வழி தனி வழி'
கட்சிகளில் நட்சத்திரக் கூட்டம்
கூட்டணியில் தொடருகிறது ம.தி.மு.க.
- கேடிஸ்ரீ|மார்ச் 2006|
Share:
Click Here Enlargeதொடர்ந்து மூன்று சட்டப்பேரவை தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு தேர்தலைச் சந்தித்த ம.தி.மு.க. இம்முறை எப்படியாவது சட்டப்பேரவைக்குள் கணிசமான எண்ணிக்கையுடன் கால்பதித்துவிட நினைத்திருக்கிறது. அதற்குக் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதே சிறந்தது என்பதில் கவனமாக உள்ளது. அதற்கேற்பக் கூட்டணியில் தங்களுக்கு அதிகத் தொகுதிகள் வேண்டும் என்று நினைத்தது. ம.தி.மு.க. மட்டுமல்லாமல் தி.மு.க. கூட்டணி கட்சிகள் அனைத்துமே இம்முறை கெளரவமான இடம் வேண்டும் என்று தி.மு.க தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளன. கூட்டணி கட்சிகளின் 'கெளரவமான இடம்' என்கிற கோரிக்கை - நிர்ப்பந்தம் - தி.மு.க. தலைமைக்குப் பெரிய சவாலாகவே இருக்கிறது.

கருணாநிதி ''அ.தி.மு.க.வை வீழ்த்த வேண்டுமென்றால் கூட்டணியில் உள்ள கட்சிகள் கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார். இதற்கிடையில் சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் பேசிய அதன் பொதுச்செயலர் ஜெயலலிதா, ''அ.தி.மு.க.வில் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன'' என்று பேசியது தி.மு.க. கூட்டணியைக் கலகலக்க வைத்தது. இந்நிலையில் அவைத்தலைவர் காளிமுத்து அ.தி.மு.க. அணியில் சேருவதற்கு வைகோவிற்கு அழைப்புவிடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே ம.தி.மு.க.வின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் தி.மு.க.வின் 'பெரியண்ணன் போக்கை' கண்டித்தும் அ.தி.மு.க.வின் அழைப்பை ஏற்று அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வதில் தவறில்லை என்றும் பேசிவந்தது குறிப்பிடத்தக்கது.
பத்திரிகையாளர்களிடையே பேசிய கருணாநிதி ம.தி.மு.க. பாதை விலகிச் செல்கிறது என்று பகிரங்கமாகப் பேட்டி அளித்ததையடுத்து, ம.தி.மு.க. பெரும் குழப்பத்தில் தள்ளப்பட்டது.

வைகோ கருணாநிதியைச் சந்தித்ததுடன், தி.மு.க.வுடனான கூட்டணி நீடிக்கும் என்று தெளிவுபடுத்தியதை அடுத்து வேறுவகை ஊகங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி விழுந்தது.

கேடிஸ்ரீ
More

இன்னுமொரு இந்திரா காங்கிரஸ்
'என் வழி தனி வழி'
கட்சிகளில் நட்சத்திரக் கூட்டம்
Share: 




© Copyright 2020 Tamilonline