Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிரிக்க | கவிதைப் பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | அமெரிக்க அனுபவம் | அஞ்சலி
Tamil Unicode / English Search
நலம்வாழ
ரத்தப் புற்றுக்கு மஜ்ஜை மாற்று சிகிச்சை
- மரு. வரலட்சுமி நிரஞ்சன்|மார்ச் 2011|
Share:
Click Here Enlargeநெருப்பென்று சொன்னாலே வாய் வெந்துவிடும் என்று நினைப்பவர் உண்டு. நம்மில் பலர் 'லுகீமியா' (Leukemia) என்று சொல்லவே நடுங்குவார்கள். இதுவரை நாம் விவாதித்த பல நோய்களுக்கு நாம் செய்யும் நடைமுறைத் தவறுகளும் மரபணுக்களும் காரணமாய் இருக்கும். ஆனால் இவை இரண்டும் இல்லாமல், காரணமே இல்லாமல் மரபணுவில் திசுப் பிறழ்வு (Genetic Mutation) ஏற்பட்டு அதனால் இரத்த அணுக்கள் தாறுமாறாகப் பெருகுவதே
லுகீமியாவுக்கு காரணம். ரத்தப் புற்றுநோய் பற்றியும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மால் என்ன உதவி செய்ய முடியும் என்பது பற்றியும் இங்கே பார்க்கலாம்.

லுகீமியா வகைகளும் பிரிவுகளும்:
லுகீமியா நான்கு வகைப்படும். Acute Myelogenous Leukemia, Acute Lymphocytic Leukemia, Chronic Myelogenous Leukemia, Chronic Lymphocytic Leukemia.
இவற்றுள் துரிதமாகப் (acute) பரவும் வகை மிகக்குறுகிய காலத்தில் உயிரைப் போக்க வல்லது. மெல்லப் பரவும் வகையில் ஆயுட்காலம் குறையும் வாய்ப்பு அவ்வளவாக இல்லை. ரத்த அணுக்களின் வகைப்படியும் (myelogenous and lymphocytic) இவை பிரிக்கப்படுகின்றன.

அறிகுறிகள், பரிசோதனைகள்:
தீவிர வகை பெரும்பாலும் அதிரடியாகத் தாக்க வல்லது. சிகப்பணுக்கள் குறைவதால், சோர்வு, மயக்கம், பலமின்மை முதலிய அறிகுறிகள் இருக்கலாம். வெள்ளை அணுக்கள் குறைவதால் நுண்ணுயிர்க் கிருமிகள் தாக்கலாம். மேலும் platelets குறைவதால் இரத்தம் கட்டலாம் அல்லது வேகமாகக் கசியலாம். முதன்மை மருத்துவர் ரத்தப் பரிசோதனை செய்து லுகீமியா இருக்கலாம் என்று சந்தேகித்தால் உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கோ, ரத்த நிபுணரையோ அணுகச் சொல்லி அறிவுரை கூறுவர். மருத்துவமனையில் எலும்புகளின் மஜ்ஜையை (marrow) பரிசோதிப்பதின் மூலம் லுகீமியா இருப்பது உறுதிப்படும். இதற்கு இடுப்பு எலும்பு அல்லது மார் எலும்பில் ஊசி மூலம் ரத்த அணுக்களின் மூல அணுக்களை எடுத்துப் பரிசோதனை செய்வர்.

சிகிச்சைகள்
இதற்கு உடனடியாக முதல் சில வாரங்களுக்கு வேதிமருத்துவம் (chemotherapy) அளிக்கப்படும். முதல் கட்ட induction chemotherapy அடுத்து இரண்டாம் கட்ட consolidation chemotherapy சிகிச்சைகள் அளிக்கப்படும். இவை கடும் பின்விளைவுகளைக் கொண்டவை.

எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை (Bone marrow Transplantation)

லுகீமியா ரத்த அணுக்களின் உற்பத்தியில் ஏற்படும் கோளாறினால் தோன்றுகிறது. ஒரு சில வகை லுகீமியாவிற்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பூரணமாக குணப்படுத்த உதவும். இதில் மற்றொருவரிடம் இருந்து எடுக்கப்படும் இரத்தம் அல்லது எலும்பு மஜ்ஜை நோயாளிக்கு ரத்தக் குழாய் மூலம் அளிக்கப்படும். இதற்குப் பல பின்விளைவுகள் இருந்தாலும் நோய் முற்றினால் இதைத் தவிர உயிர் பிழைக்கவைக்க வேறு வழி பல நேரத்தில் இருப்பதில்லை.
நாம் எப்படி உதவலாம்?
தெரிந்தவர்களுக்கோ, உறவினருக்கோ இந்த நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆதரவும் உதவியும் செய்வது மிகவும் அவசியம். இந்த நோய்க்கான சிகிச்சைகள் கடும் பின்விளைவுகளை உடையன என்பதால் அவர்கள் பல நாட்கள் மருத்துவமனையில் இருக்க நேரிடலாம். இவர்களின் குடும்பத்துக்கு ஆதரவும் பரிவும் மிகவும் அவசியம். இந்த நோயுள்ள எவருக்கும் எலும்பு மஜ்ஜை தருவதன் மூலம் நாம் உதவலாம். மஜ்ஜை அளிக்க முன்வருவோர் பதிவு செய்ய வேண்டிய முறைகள், சிகிச்சை முறை பற்றிய விவரங்கள் ஆகியவற்றை www.marrow.org என்ற வலைதளத்தில் காணலாம். நாடுதழுவிய இந்தப் பதிவேட்டில் பதிந்து கொள்வதன் மூலம் நோயாளி எங்கிருந்தாலும் மருத்துவர்கள் பரிசோதனை மூலம் பொருத்தம் காண இயலும். சமூக இயக்கங்கள் தங்களது ஆண்டு விழாக் கூட்டங்களில் பதிவு செய்ய சிறப்புக் குழுக்களை ஏற்படுத்தி உதவலாம். இதில் பதிவு செய்வது இலவசம். இதனால் எந்த ஆபத்தும் இல்லை.

பதிவு செய்ய, உங்கள் வாயின் ஒரு மூலையிலிருந்து உமிழ்நீரை அட்டையில் எடுத்துக் கொள்வர். இதைப் பாதுகாத்து வைத்து, பின்னால் நோயாளியின் பொருத்தம் பார்த்து உங்களை அழைப்பர். பொருத்தம் அவ்வளவு எளிதில் கிடைக்காது. பதினெட்டு வயது முதல் அறுபது வயது வரை உள்ளவர்கள் பதியலாம்.இது முற்றிலும் தானே முன்வந்து செய்யும் பதிவு முறை.

ஒரு நோயாளியின் அணுக்களுடன் உங்கள் அணுக்கள் பெரும்பான்மை பொருத்தம் இருந்தால் அவர்கள் உங்களை நாடக் கூடும். அந்தச் சமயத்தில் நீங்கள் தரவிரும்பாவிட்டாலோ அல்லது நோய்வாய்ப் பட்டிருந்தாலோ மறுப்புச் சொல்லலாம். இதில் எந்த நிபந்தனையோ, கட்டாயமோ இல்லை. நோயாளியின் உடல்நிலையைப் பொறுத்து ரத்த மாற்றுச் சிகிச்சையா எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சையா என்பதை மருத்துவர் தீர்மானம் செய்வார். ரத்த மாற்று சிகிச்சை (Peripheral Blood transplant) செய்வதானால் முதல் ஐந்து நாட்களுக்கு ரத்த அணுக்களை அதிகம் உற்பத்தி செய்ய மருந்துகள் கொடுப்பார்கள். பின்னர் ரத்தம் எடுப்பது போலவே எடுக்கப்பட்டு, அதை ஒரு கருவியில் பாய்ச்சி ரத்த மூல அணுக்களை (stem cells) பிரித்து எடுப்பார். எஞ்சிய ரத்தத்தை மீண்டும் உங்களிடமே (donor) அனுப்பி விடுவார்கள். இதனால் பின்விளைவுகள் ஏதும் இல்லை. நாட்டில் எந்தப் பகுதியில் நோயாளி இருந்தாலும், இதற்கான பயண செலவும், மருத்துவ செலவும் National Marrow Donor Program (NMDP) என்ற அமைப்பு ஏற்றுக் கொள்ளும்.

எலும்பு மஜ்ஜை மாற்று முறை (Bone marrow transplant) என்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மயக்க மருந்து கொடுக்கப்படும். பின்பு இடுப்பு எலும்பின் மஜ்ஜை ஊசி மூலம் எடுக்கப்படும். இதனால் ஓரிரண்டு நாட்களுக்கு லேசாக இடுப்பு வலிக்கலாம். இதற்கான செலவையும் இந்த அமைப்பு ஏற்றுக் கொள்ளும்.

தெற்காசியர்களாகிய நாம் மிகவும் குறைவாகவே பதிவாகியுள்ளோம். நமது இந்திய சகோதர சகோதரிகளுக்கு லுகீமியா தாக்கினால் மாற்றுச் சிகிச்சை செய்யப் பொருத்தமானது கிடைப்பது கடினமாக உள்ளது. நீங்கள் பதிவது இந்த நோயாளிகளுக்கு ஒரு நம்பிக்கை விளக்கு. எந்தப் பின்விளைவும் இல்லாத, எந்த செலவோ வலியோ இல்லாத எலும்பு மஜ்ஜை தருவதற்கான பதிவை இப்போதே செய்ய முன்வாருங்கள். நீங்கள் அளிக்கும் மிகப் பெரிய கொடையாக, உயிர்க்கொடையாக, இது இருக்கலாம்.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்
Share: 




© Copyright 2020 Tamilonline