ரவா ரொட்டிகள் இதெல்லாம் நல்லதுங்க....
|
|
|
|
|
தேவையான பொருட்கள் ரவை - 1 கிண்ணம் தேங்காய்த்துருவல் - 1/2 கிண்ணம் பச்சை மிளகாய் - 3 இஞ்சி - சிறிதளவு பெருங்காயம் - சிறிதளவு வெண்ணெய் - 2 தேக்கரண்டி சீஸ் துருவல் - 1 கிண்ணம் கொத்துமல்லி - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு நெய், எண்ணெய் (கலந்தது) - 1/2 கிண்ணம் உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை வாணலியில் ரவையை வறுக்கவும். இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய், பெருங்காயம் இவற்றை மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் இரண்டு கிண்ணம் தண்ணீர் விட்டு, உப்புப் போட்டுக் கொதி வரும்போது ரவையைப் போட்டு அத்துடன் அரைத்து வைத்துள்ள விழுது, கறிவேப்பிலை, கொத்துமல்லி, வெண்ணெய் ஆகியவற்றைப் போட்டுக் கிளறி எடுத்துக் கொள்ளவும். வாழையிலை அல்லது அலுமினியப் பேப்பரில் எண்ணெய் தடவி, ரவையை எலுமிச்சை அளவு எடுத்து எண்ணெய், நெய் தொட்டுக் கொண்டு மெல்லியதாகத் தட்டவும். அடுப்பில் தோசைக் கல்லைப் போட்டு, நெய் தடவிச் செய்து வைத்துள்ள ரொட்டியைப் போட்டு இருபுறமும் எண்ணெய், நெய் கலவையை ஊற்றிச் சிவக்க எடுக்கவும். மேலாகச் சீஸ் துருவலைத் தூவி ரோல் மாதிரிச் சுருட்டிச் சாப்பிடவும். வெங்காயச் சட்னியுடன் சாப்பிட்டால் பலே ஜோர். |
|
தங்கம் ராமசாமி, ப்ரிட்ஜ் வாட்டர், நியூஜெர்சி |
|
|
More
ரவா ரொட்டிகள் இதெல்லாம் நல்லதுங்க....
|
|
|
|
|
|
|