பலாப்பழ இனிப்பு பலப்பல! பலாப்பழ அப்பம் பலாப்பழ இலையடை (வத்சன்)
|
|
|
|
தேவையான பொருட்கள் பலாப்பழ அல்வா - 1 கிண்ணம் தேங்காய்ப் பூ - 1/4 கிண்ணம் நெய் - 1/2 கரண்டி மைதா மாவு - 1 கிண்ணம் சர்க்கரை - 2 தேக்கரண்டி இலைத் துண்டுகள் - 20 நல்லெண்ணெய் - 1/2 கரண்டி
செய்முறை 3/4 கிண்ணம் மைதா மாவைப் போட்டுத் தண்ணீர் ஊற்றி நன்றாகப் பிசையவும். 1/4 கிண்ணம் தண்ணீரில் சர்க்கரையைக் கரைய விடவும். அதில் மாவைப் போட்டுப் பிசைந்து எண்ணெய் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும். அல்வாவைச் சிறு பூரணமாக உருட்டவும். இலையில் மாவைச் சிறு சப்பாத்தியாக இட்டு பூரணத்தை வைத்துப் பொதியவும். பிறகு திரும்ப பெரிதாக இடவும். தோசைக் கல்லில் போட்டு வேக விடவும். இலை, கல் சூடான சிறிது நேரத்தில் எடுக்க வந்துவிடும். திரும்பக் கல்லில் போட்டு நெய் விட்டு வேகவிடவும். அடுப்பைச் சிறிதாக எரியவிடவும். இதை இன்னொரு விதமாகவும் தயாரிக்கலாம்.
பிசைந்த மாவில் பூரணம் வைத்து கொழுக்கட்டை போலச் செய்து மைதாவில் தோய்த்து (முக்கி) சப்பாத்தியாக இடவும். பிறகு வேக விடவும். இது சிலருக்கு சௌகரியமாக இருக்கும். இலை இல்லாத சமயத்தில் இப்படிச் செய்யலாம். ருசியான, நெய் அதிகம் செலவில்லாத ஸ்வீட் ரெடி. |
|
அலமேலு ராமகிருஷ்ணன், சான் ஹோஸே, கலிபோர்னியா |
|
|
More
பலாப்பழ இனிப்பு பலப்பல! பலாப்பழ அப்பம் பலாப்பழ இலையடை (வத்சன்)
|
|
|
|
|
|
|