Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சிறப்புப் பார்வை | சிரிக்க சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம் | பொது
Tamil Unicode / English Search
சிரிக்க, சிந்திக்க
முகத்தில் முகம் பார்க்கலாம்
- வற்றாயிருப்பு சுந்தர்|ஜனவரி 2011|
Share:
Click Here Enlargeரொம்ப வருஷமாவே ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகள் மேல் எனக்குத் தீராத காதல். மதுரை தியாகராஜர் மேலாண்மைக் கல்லூரியில் படிக்கும்போது பேராசிரியர் படிக்கச் சிபாரிசு செய்த புத்தகங்களில் ஒன்று ஜான் ஸ்கல்லியின் (John Sculley) 'Pepsi to Apple' அப்போது நான் பெப்ஸி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்ததாலும் சுஜாதா தன் கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்த மக்கின்டாஷ் என்ற அந்த அபார வஸ்துவின் பால் எழுந்த ஈர்ப்பினாலும் அப்புத்தகத்தை வாங்கத் தவித்துக் கொண்டிருந்தேன். பின்னர் சென்னைக்குச் சென்ற போது எழும்பூர் ரயில் நிலையத்தில் வாங்கி மதுரை சேர்வதற்குள் பாதிப் புத்தகத்தைப் படித்து முடித்திருந்தேன். பெப்ஸி என்ற அசுர நிறுவனத்திலிருந்து ஆப்பிள் என்ற (அப்போதைய) கைக்குழந்தை நிறுவனத்திற்கு ஜான் ஸ்கல்லி எப்படி அவரது ரசிகராக இருந்த ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸால் கவர்ந்திழுக்கப்பட்டார் என்ற விவரணைகளோடு, எண்பதுகளின் மத்தியில் மக்கின்டாஷை எப்படி அமெரிக்காவின் சூப்பர் பௌல் தருணத்தில் சந்தைப்படுத்தினார்கள் என்ற விவரங்களும் அப்புத்தகத்தில் மகா சுவாரஸ்யமாக விவரிக்கப்பட்டிருந்தன.

தொண்ணூறுகளின் இறுதியில் பெங்களூருவுக்குக் குடிபெயர்ந்தபோது அங்கே மேலாளரைத் தாஜா பண்ணி முதன்முறையாக ஒரு iMac ஒன்றை வாங்கிப் பெட்டியைப் பிரித்தபோது அது ஸ்டீவன் ஸ்பீல்பெர்கின் E.T. யில் வரும் தூர லோகப் பிராணியின் மண்டை மாதிரி, பெரிய நீலக் கலர் முட்டை மாதிரி உள் அவயங்களைக் காட்டிக்கொண்டு இருந்தது. எங்களது றிசிக்களின் சிறிஹிக்களெல்லாம் பெரும்பாலும் தகர மேலாடை இழந்து பே-என்று பிரித்துப் போட்டே பாதி நேரம் இருக்கும். மெமரி அப்கிரேட், ஸ்லேவ் ஹார்ட் டிஸ்க் என்று எதையாவது ஆணி பிடுங்கிக் கொண்டே இருப்போம். பிரித்துப் போட்ட எந்திரன் சிட்டி ரோபாட் மாதிரியே இருக்கும். தி்டீரென்று ஐஸ்வர்யா ராய் மாதிரி ஒன்றைப் பார்த்தால் எப்படி இருக்கும்! அதில் டெர்மினேட்டர் படமெல்லாம் போட்டு - அப்படி ஒரு துல்லியமான வீடியோவை எந்தக் கணிஸீவீயிலும் பார்த்ததே இல்லை. "க்ராஷே ஆவாதாம்டா", "வைரஸே கிடையாதாம்", "Ctrl+Alt+Del பண்ணவே வேண்டாமாம்", "தொங்காதாம்" என்று ஆளாளுக்குளீ கமெண்ட் அடித்து மொத்த ஆபிஸூம் கண்கொட்டாமல் ஐமேக்கை வெறித்துக்கொண்டிருந்தது. புது வேலைக்காக வெளிநாடு போகும்போது ஐமேக்கை விட்டுப் பிரியவே சோகமாக இருந்தது.

அமெரிக்காவுக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு வந்ததும் இந்தியக் கலாசாரப்படி சுற்று வட்டார ஷாப்பிங் மால்களில் வாரயிறுதிகளை வாயைப் பிளந்துகொண்டு சுற்றிக் களித்தேன். Best Buy-இல் பால்போலத் தூய்மையாக 20 இன்ச் தட்டை மானிட்டர்களோடு பாரதிராஜா பட தேவதைகள் போல வரிசையாக அமர்ந்திருந்த ஐமேக்கின் புதிய அவதாரங்களைப் பார்த்தபோது புல்லரித்தது. வீட்டுக்கு ஒன்றை வாங்கிப் போகலாம் என்று பார்த்தால் 1500 டாலர் என்றார்கள்! ஒரு மாத அபார்ட்மெண்ட் வாடகை! அப்படியே பின்வாங்கி, "சரி நமக்கு ஆப்பிள் பிராப்தம் அம்புட்டுத்தான்" என்று நினைத்துக்கொண்டு நடையைக் கட்டினேன்.

2007 ஜனவரியில் ஆப்பிள், ஐஃபோன் என்ற புதிய சங்கதியை அறிமுகம் செய்தது. கடும் குளிர். ஆப்பிள் ஸ்டோர்களுக்கு முதல்நாள் இரவே தடிமனான ஜாக்கெட்டுகளில் மக்கள் படையெடுத்து இரவெல்லாம் பனியில் குளிரில் நனைந்து மறுநாள் கடை திறந்ததும் அடித்துப் பிடித்து ஐஃபோனை வாங்கி ஜன்ம சாபல்யம் அடைந்தார்கள். நைந்து நொந்திருந்த ஆப்பிள் நிறுவனத்திற்குப் புனர் ஜென்மம் கொடுத்தது ஸ்டீவ் ஜாப்ஸின் மறு பிரவேசம், ஐஃபோனின் ஜனனம். அந்த ஓட்டம் அசுர ஓட்டமாக மாறி ஆனானப்பட்ட மைக்ரோஸாஃப்ட்டையே பின்னுக்குத் தள்ளி ஆப்பிளை முதன்மை நிறுவனமாக ஆக்கியிருக்கிறது. ஒரு குட்டியூண்டு கைபேசி! நம்பக் கடினமாக இருந்தாலும் அதுதான் உண்மை.

தொடுதிரை கண்டுபிடிக்கப்பட்டு கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் அதன் பயன்பாட்டில் புரட்சியைச் செய்தது ஆப்பிள்தான், ஐஃபோன் மூலமாக. இன்றைக்கு ஆப்பிளின் வருமானத்தில் பாதி ஐஃபோன் மூலமாக வருகிறதாம். முதல் தலைமுறை மாடலுக்குப் பின் ஐஃபோன் 3ஜி அறிமுகப்படுத்தப்பட்டு பின் 3ஜிஎஸ் வந்தது. அதோடு நிற்கவில்லை. iPad-ஐக் களமிளக்கினார்கள். "எது போலவும் இல்லாத, எதோடும் ஒப்பிட முடியாத புதிய வகைச் சாதனமாக" iPad-ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள். ஏப்ரலில் அறிமுகமான ஐபேட் செப்டம்பருக்குள் எண்பது லட்சத்திற்கும் மேல் விற்றிருக்கிறது! ஆயிரம் டாலர் விலையில் எட்டாக்கனியாக ஆப்பிள் கணினிகள் இருக்க அதற்குப் பாதி விலையில் ஆனால் அதிகக் கவர்ச்சியோடு வெளியிடப்பட்டதும் ஐபேட் வெற்றிக்குக் காரணம். ஆனால், கைக்கடக்கமாகத் தொடுதிரையுடன் எங்கு வேண்டுமானாலும் இணையத் தொடர்புடன் எடுத்துச் செல்லும் வசதி மற்ற கணினிகளை ஆட்டைக்கு வரவிடாமல் செய்துவிட்டது. 2011-இல் இதன் விற்பனை கிட்டத்தட்ட நாலரைக் கோடியாக இருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

ஐபேட் கிடக்கட்டும் ஒரு பக்கம். இந்த வருடம் சந்தைக்கு வந்த ஆப்பிள் ஐஃபோன் 4 ஜூலைமுதல் செப்டம்பர் வரையிலான காலாண்டு விற்பனை எண்ணிக்கை ஒரு கோடியே நாற்பத்தோரு லட்சத்திற்கும் மேல்! போன வருடம் இதே காலகட்டத்தில் அதன் விற்பனை எழுபது லட்சம் மட்டுமே. கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீதம் அதிக விற்பனை. பலன், பரம வைரியான மைக்ரோசாஃப்டை ஓட்டத்தில் முந்தியது. 2003-இல் 10 டாலரே இருந்த ஆப்பிளின் பங்கு மதிப்பு இன்றைக்கு 320 டாலருக்கு மேல். இன்றைய தேதிக்கு ஆப்பிளின் சந்தை மதிப்பு முந்நூறு பில்லியன் டாலருக்கு மேல். ஆப்பிளை விட்டால் இவ்வளவு சந்தை மதிப்பு இருக்கும் மற்ற இரு நிறுவனங்கள் எக்ஸான்மொபிலும் பெட்ரோசைனாவும்! ஆக, இன்று ஆப்பிள் தனிக்காட்டு ராஜா. எல்லாம் அந்த 54 வயது இளைஞர் ஸ்டீவ் ஜாப்ஸின் மகிமை!

இந்த வருடம் ஜூனில் நான்காம் தலைமுறை மாடலாக ஐஃபோன்-4 ஐ அறிமுகம் செய்தது. வீறிலீஷீஸீமீ 4 இன்னொரு அபார சாதனம். இரண்டு கேமராக்கள். திணீநீமீ ஜிவீனீமீ என்று வீடியோ அழைப்பு வசதி என்று கலக்கலான ஃபோன். சில குறைகள் இருந்தாலும் இன்று வரை ஸ்மார்ட்ஃபோன் வகையில் முன்னணியில் ஓடிக்கொண்டிருப்பது ஐஃபோன் 4 தான்.

குற்றுயிராக இருந்த என் ஐந்து வயது பிஜிசி கைபேசியை தூக்கிப் போட்டுவிட்டு, ஒரு ஐஃபோன் 4 வாங்கியே விட்டேன். ஆஹா, அதை வெறும் கைபேசி என்று சொல்லிவிட முடியுமா? நூறு நூறு பயன்பாடுகள். கற்பனைதான் எல்லை. எதெதற்கோ வித்தியாசமாகப் பயன்படுத்துகிறார்கள். போன வாரம் CNN-இல் இளைஞர் குழு ஒன்று வெறும் ஐஃபோன்களை மட்டும் வைத்துக்கொண்டு ஓடும் ரயிலில் கச்சேரி செய்ததைக் காட்டினால்கள். ஐஃபோனைப் புல்லாங்குழலாக ஊதலாம். மென்பொருள் இருக்கிறது. ஆளுக்கொரு இசைக்கருவியாக அவரவர் ஐஃபோனை மாற்றிக்கொண்டு வாசிக்க ஒருவர் பாடினார்! இதேபோல் நிறைய ஆர்க்கெஸ்ட்ராக்கள் கிளம்பியிருக்கின்றன. இங்கே ஒரு கச்சேரி!

நியூயார்க்கில் ஒரு தந்தையும் மகனும் எட்டு மாதங்கள் கடினமாக உழைத்து பலூன் ஒன்றில் ஒரு High definition கேமராவையும் ஐஃபோனையும் இணைத்து ஒரு லட்சம் அடி உயரத்திற்கு அதை காற்றில்லா வெற்றிடம் வரை பயணிக்கச் செய்து, ஒட்டு மொத்தப் பயணத்தையும் வீடியோவில் பதிவு செய்திருக்கிறார்கள். காற்றில்லா வெற்றிடத்திலிருந்து பார்த்தால் பூமி எப்படியிருக்கும்? வீடியோ இங்கே

நேற்று அதிகாலை வாஷிங்டன் டிஸிக்கு அலுவலக வேலையாகச் சென்றுவிட்டு மாலை விமானத்தைப் பிடிக்க நிலையத்திற்கு வந்து, கிடைத்த பொழுதில் மனைவியை அழைக்க Face Time முதன் முறையாக உபயோகப்படுத்திப் பார்த்தேன். ஷூட்டிங்கில் காட்சிக்கு இடையே கைக்கண்ணாடியில் முகம் பார்க்கும் நடிகையைப் போல ஐஃபோனை உயர்த்தி வைத்துக்கொண்டு பார்த்தால், அந்தப் பக்கம் வீட்டில் குதூகலிக்கும் குழந்தைகளும் புன்னகையை அடக்கக் கஷ்டப்படும் மனைவியும். அது ஒரு சந்தோஷம்.

ஏற்கனவே கணினி மூலமாக வீடியோ சாட் செய்ய முடிகிறதுதான். ஆனால் அறை இருட்டாக மணிரத்னம் படம் பார்ப்பது மாதிரி இருக்கும். கணினி முன்னால் பிள்ளையார் போல உட்கார்ந்தே ஆக வேண்டும். பவர்கட்டோ இணையக் கட்டோ ஆகிவிடக் கூடாது. ஆனால் ஐஃபோன் மூலமாகக் கட்டுப்பாடின்றி எங்கிருந்து வேண்டுமானாலும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு தொலைபேசலாம். அப்படி எதிர்முனை ஆசாமியைப் பார்த்துப் பேசுவது ரொம்பவே வித்தியாசமான அனுபவம். ஆனால் சேட்டைசெய்துகொண்டே அல்லது முகத்தை கேலியாக வைத்துக்கொண்டே மேலாளரிடம் "உடம்பு சரியில்லை ஸார். லீவு" என்று பொய் பேச முடியாது. பாத்ரூமில் உட்கார்ந்துகொண்டு பேச முடியாது. இது மாதிரி சில்லறைக் குறைகளைத் தவிர்த்துப் பார்த்தால் இந்த வசதி குறுகிய காலத்தில் பிரபலமாகிவிடும்.

ஃபோன் வாங்கியதற்கெல்லாம் வரிந்து வரிந்து கட்டுரை எழுதுவேன் என்று நினைத்தே பார்த்ததில்லை. ஒரு நிமிடம்.... யாரோ அழைக்கிறார்கள்.

நான்: "அலோ"

"அலோ ரவியா? யார்னு தெரியுதா?"

"ஆமாங்க.. ஹிஹி நீங்களா?" நன்கு பரிச்சயமான குரல். ஆனால் யாரென்று தெரியவில்லை.
"நல்லாருக்கியா? அமெரிக்காலதான் இருக்கியா?"

அமெரிக்கத் தொலைபேசி எண்ணை அழைத்துவிட்டு இம்மாதிரி ஐன்ஸ்ட்டீன் கேள்விகள் கேட்கும் நண்பர்கள் எனக்கு நிறைய பேர் இருக்கிறார்கள். சினிமா தியேட்டரில் இடைவேளையில் சந்தித்து "என்ன இந்தப் பக்கம்?" வகையறா நண்பர்கள். ஆனால் இவர் யாரென்று தெரியவில்லை. இந்த லட்சணத்தில் ஐஃபோன் இன்றைய பழமொழியாகக் காட்டியது "உங்கள் நண்பர்கள் யாரென்று சொல்லுங்கள். நீங்கள் யாரென்று நான் சொல்கிறேன்". யாராக இருக்கும்? ஃபோன் திரை வேறு 'Unidentified number' என்று காட்டுகிறது.

"ஆமாங்க. இங்கிட்டுதான் இன்னும் இருக்கேன்"

"பாத்துக் கொள்ள வருஷமாயிடுச்சே. எப்ப இந்தப் பக்கம் வர்றதா உத்தேசம்?"

ஜூலைலதான் போய்ட்டு வந்தேன் என்று சொல்லலாமா என்று யோசித்து ஏன் என்னை பார்க்க வரவில்லை என்று எகிறுவாரோ என்று பயமாக இருந்தது. யாரென்று தெரிந்தால்தானே? "வரணும் ஸார்... அடுத்த வருஷம் வரலாம்னுட்டுருக்கேன்"

"என்ன அங்க போய் ரொம்பத்தான் மாறிட்டே? வாங்க போங்கங்கறே? ஸார்ங்கறே? என்னடா ஆச்சு உனக்கு?"

யாரென்று சொல்லித் தொலையேன் என்று கத்தலாம் போல இருந்தது.

"ஹிஹி.. சும்மாத்தான். இங்க ஆபிஸ்ல வேலை மும்முரம், அதான். தப்பா நெனச்சுக்காதே"

"நீதான் எப்பவும் பிஸி பிஸிம்பியே... இன்னும் எழுதறியா?"

"எப்பவாவது. நேரம் இல்லை முன்ன மாதிரி"

"சரி ஐஎஸ்டி கால். நீ எனக்கு சனிக்கிழமை காலைல கட்டாயம் ஃபோன் பண்ணு. ஒரு முக்கியமான விஷயம் பேசணும். உனக்குத்தான் Vonage இருக்கே. இந்தியா கால் ஃப்ரீதானே? சனிக்கிழமை காலைல மறக்காம ஃபோன் பண்ணனும் என்ன? நீ மட்டும் பண்ணலை அப்புறம் நான் உன்னைக் கூப்பிடவே மாட்டேன்" வைத்தே விட்டார்(ன்). Face Time!

வற்றாயிருப்பு சுந்தர்,
பாஸ்டன்
Share: 




© Copyright 2020 Tamilonline