தெரியுமா?: இணையம் வழியே இலவசமாகத் தமிழ் படிக்கலாம் தெரியுமா?: தமிழ் ஃப்ளாஷ் கார்டுகள் தெரியுமா?: ஹேமா முள்ளூருக்கு எம்மி விருது தெரியுமா?: கொலராடோவில் தமிழ் கற்க உதவி துணுக்கு: வெளுத்துக் கட்டின குமரி! துணுக்கு: வாயில் புடவை துணுக்கு: உப்புமா தொண்டையில் குத்தியது ஏன்?
|
|
தெரியுமா?: இணையம் வழி 'கர்நாடிக் மியூசிக் ஐடல்' |
|
- |நவம்பர் 2010| |
|
|
|
|
|
இணையத்தின் மூலம் 42 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கர்நாடக சங்கீதம் கற்பிக்கும் Go4Guru நிறுவனம் (www.onlinecarnaticmusic.com), உலகில் முதன்முறையாக இணையத்தின் மூலமாக கர்நாடக சங்கீதப் போட்டியின் (www.carnaticmusicidol.com) இறுதிச் சுற்றை நடத்த உள்ளது. இந்தப் போட்டியின் நடுவர்கள் திரு. நெய்வேலி சந்தான கோபாலன் மற்றும் திரு. மகாராஜன் சீனிவாசன். முதற்கட்டத்தில், மாணவர்கள் தங்கள் வீட்டிலேயே பாடலைப் பாடி, கணினியில் பதிவு செய்து, carnaticmusicidol தளத்தில் வலையேற்றினார்கள். முதற்கட்டப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இணையத்தின் மூலமாகவே இறுதிச் சுற்றுக்காகச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியை, உலக நாடுகளில் கர்நாடக இசைக் கச்சேரிகள் நடத்தி வரும் செல்வி ஸ்ரீரஞ்சனி சந்தான கோபாலன் நடத்திக் கொடுத்தார்.
இறுதிப் போட்டி நவம்பர் 6ஆம் தேதி 8.30 இரவு (EST) மணிக்கு ஆன்லைனில் துவங்குகிறது. இதில் பார்வையாளர்களாகப் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயரினை www.carnaticmusicidol.com தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். அனுமதி இலவசம். 500 பேர் வரை பார்வையாளர்களாக இருக்கலாம். 6 வயது முதல் 18 வயது வரை உள்ள போட்டியாளர்கள் இறுதிப் போட்டியில் பங்கேற்கிறார்கள். |
|
இறுதிப் போட்டிக்குச் சிறப்பு விருந்தினராக தினமலர் பதிப்பாளர் திரு. ஆதிமூலம் பங்கேற்க உள்ளார். கர்நாடக சங்கீத உலகில் பிரபலமான க்ளீவ்லாண்ட் சுந்தரம் இறுதிப் போட்டியைத் துவக்கி வைத்துப் பேச இருக்கிறார். நிகழ்ச்சியை வாஷிங்டனிலிருந்து online carnatic music மாணவி செல்வி நிலானி தொகுத்து வழங்குகிறார்.
பார்வையாளர்களாகப் பங்கேற்க விரும்புபவர்கள் பதிவு செய்ய: www.carnaticmusicidol.com
மேலும் தொடர்புக்கு: காயாம்பு இராமலிங்கம் 410 499 9127 tutoring@Go4Goru.com
செய்திக் குறிப்பிலிருந்து |
|
|
More
தெரியுமா?: இணையம் வழியே இலவசமாகத் தமிழ் படிக்கலாம் தெரியுமா?: தமிழ் ஃப்ளாஷ் கார்டுகள் தெரியுமா?: ஹேமா முள்ளூருக்கு எம்மி விருது தெரியுமா?: கொலராடோவில் தமிழ் கற்க உதவி துணுக்கு: வெளுத்துக் கட்டின குமரி! துணுக்கு: வாயில் புடவை துணுக்கு: உப்புமா தொண்டையில் குத்தியது ஏன்?
|
|
|
|
|
|
|