வெந்தயக்கீரை வகைகள் வெந்தயக்கீரை சாலட் வெந்தயக்கீரை தொக்கு வெந்தயக்கீரை பக்கோடா வெந்தயக்கீரை மெதுவடை மசாலா வெந்தயக்கீரை
|
|
|
தேவையான பொருட்கள்
வெந்தயக்கீரை (பொடியாக நறுக்கியது) - 1/2 கிண்ணம் சமையல் எண்ணெய் - பொரிப்பதற்கு துவரம் பருப்பு - 1/2 கிண்ணம் கடலைப் பருப்பு - 1/2 கிண்ணம் மிளகாய் வற்றல் - 4 பெருங்காயம் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப |
|
செய்முறை:
துவரம் பருப்பு, கடலைப் பருப்பு இரண்டையும் தண்ணீரில் ஒன்றாக 2 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் மிக்ஸியில் மிளகாய் வற்றல்,பெருங்காயம்,தேவையான அளவு உப்பு போட்டு கெட்டியாக ஒன்றிரண்டாக அரைக்கவும். (நன்கு அரைத்து விட்டால் வடை மொறுமொறுப்பாக வராது.)
இந்த அடைமாவில் வெந்தயக்கீரையைச் சேர்த்துக் கலக்கவும். அடி கனமான ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்த்ததும் ஒவ்வொரு வடையாகத் தட்டிப் போடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமான பின்பு எடுத்து வடிய வைக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
வெந்தயக்கீரை வகைகள் வெந்தயக்கீரை சாலட் வெந்தயக்கீரை தொக்கு வெந்தயக்கீரை பக்கோடா வெந்தயக்கீரை மெதுவடை மசாலா வெந்தயக்கீரை
|
|
|
|
|
|
|