வெந்தயக்கீரை வகைகள் வெந்தயக்கீரை சாலட் வெந்தயக்கீரை தொக்கு வெந்தயக்கீரை வடை வெந்தயக்கீரை மெதுவடை மசாலா வெந்தயக்கீரை
|
|
|
தேவையான பொருட்கள்
கடலை மாவு - 1 கிண்ணம் அரிசிமாவு - 1/2 கிண்ணம் நெய் (அ) வெண்ணெய் (அ) ஆலிவ் ஆயில் - 2 தேக்கரண்டி வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1 கிண்ணம் உப்பு - தேவைக்கேற்ப பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 2 தேக்கரண்டி வெந்தயக்கீரை - 1/2 கிண்ணம் சமையல் எண்ணெய் - பொரிப்பதற்கு |
|
செய்முறை:
கடலைமாவு, அரிசிமாவு, நெய், வெங்காயம், பெருஞ்சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, வெந்தயக்கீரை எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துக் கலந்து வைத்துக்கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்தபின், மேலே உள்ள மாவுக் கலவை சிறிதுடன், சிறிது தண்ணீர் சேர்த்து பதமாகக் கலந்து எண்ணெயில் சிறிது சிறிதாக உருட்டி (உருண்டையாக போடக்கூடாது. கட்டை விரல், ஆள்காட்டிவிரல், நடு விரல்களால் மாவைப் பிடித்து) போடவும். பொன்னிறமான பின்பு வடிகட்டியில் எடுத்து வைக்கவும். இதைச் சூடாக சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
வெந்தயக்கீரை வகைகள் வெந்தயக்கீரை சாலட் வெந்தயக்கீரை தொக்கு வெந்தயக்கீரை வடை வெந்தயக்கீரை மெதுவடை மசாலா வெந்தயக்கீரை
|
|
|
|
|
|
|