'ஸ்ருஷ்டி' நாட்டியக் குழுவின் அமெரிக்க உலா பெப்பரப்பே வழங்கும் புதிய நாடகம் தங்க முருகன் விழா
|
|
பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கும் க்ரியாவின் 'தனிமை' |
|
- ச. திருமலைராஜன்|அக்டோபர் 2010| |
|
|
|
|
|
நவம்பர் 6, 2010 அன்று மதியம் 2:00 மணிக்கும் மாலை 6:00 மணிக்கும் சான் ஃபிரான்ஸிஸ்கோவின் பாரதி தமிழ்ச் சங்கம், 'க்ரியா' நாடகக் குழுவின் 'தனிமை' நாடகத்தை அளிக்க இருக்கிறது. ஓலோனி கல்லூரியில் உள்ள ஜாக்ஸன் அரங்கில் இரண்டு காட்சிகளும் நடைபெறும்.
தீபா-ராமனுஜம் தம்பதியினர், நண்பர் நவீன் நாதன் ஆகியோரால் 2001ம் ஆண்டு சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதியில் துவக்கப்பட்ட க்ரியா, இன்று வட அமெரிக்கா மற்றும் இந்தியாவில் பிரபலமான ஒன்று. ஒன்பது முழு நீள நாடகங்களை அரங்கேற்றித் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
பாரதி தமிழ்ச் சங்கம் சான்ஃபிரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதியில் நான்கு ஆண்டுகளாக இயங்கி வரும் தமிழ் கலாசார அமைப்பாகும். இந்தப் பகுதியில் வாழும் தமிழ்க் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கலைத்திறனை ஊக்கப்படுத்தி, பல கலை, இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டுச் சிறப்பு நிகழ்ச்சியாக க்ரியாவின் 'தனிமை'யை வழங்கவுள்ளது.
ஆனந்த் ராகவ் எழுத்தில், தீபா ராமானுஜம் இயக்கத்தில் உருவான இந்த நாடகம் அரங்கேறிய நாள்முதல் இன்றுவரை கலிஃபோர்னியா, ஹ்யூஸ்டன் டெக்சாஸ், சென்னை ஆகிய இடங்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாகப் பெரும் வரவேற்பைப் பெற்று வந்துள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சென்னையின் பல்வேறு புகழ்பெற்ற சபாக்களில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புக்கிடையே தொடர்ந்து காட்சிகளை நடத்தியது. க்ரியா குழு மட்டுமே 2005லிருந்து தொடர்ந்து வருடாவருடம் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குச் சென்று நாடகங்களை மேடையேற்றுகிறது என்று அதன் நிர்வாக இயக்குனர் தீபா ராமானுஜம் கூறினார்.
நாடகத்தின் கதையமைப்பும், நடிகர்களின் இயல்பான நடிப்பும், கலகலப்பான வசனங்களும், தீபா ராமானுஜத்தின் இயக்கமும், ஆனந்த் ராகவின் எழுத்தும் விகடன், கல்கி, தி ஹிந்து உட்பட அனைத்துத் தமிழகப் பத்திரிகைகளாலும் பெரிதும் பாரட்டப் பட்டுள்ளது. சென்னை ரசிக்ர்கள், நாடக, சினிமாக் கலைஞர்கள், இயக்குனர்கள் என்று அனைத்துத் தரப்பினரையும் வெகுவாகக் கவர்ந்து சாதனை படைத்துள்ளது. |
|
|
தமிழ் நாட்டில் வாழும் வயதான பெற்றோர்களின் வாழ்க்கையையும் அமெரிக்காவில் புலம்பெயர்ந்து பிரிந்து வாழ நேரும் அவர்கள் பிள்ளைகளின் நிலையையும், தவிப்பினையும், குடும்பம், உறவு, பிரிவு ஆகிய நுட்பமான வாழ்க்கைக் கூறுகளையும் அழகாகவும், நகைச்சுவையோடும் சித்திரிக்கின்றது 'தனிமை'. விரிகுடாப்பகுதி மக்களும் இந்த நாடகத்தினை ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று க்ரியா குழுவினர் மிகுந்த ஆர்வத்துடன் கூறினர்.
முன்பதிவு செய்து கொள்ளவும் மேலதிக விபரங்களுக்கும்:
இணைய தளங்கள்: க்ரியா - www.kreacreations.com பாரதி தமிழ்ச் சங்கம் - www.batamilsangam.org
தொலைபேசி க்ரியா: 510 371 KREA வாசுதேவன் : 510 868 0510 திருமுடி : 510 684 9019
மின்னஞ்சல்: krea.thanimai@gmail.com
கட்டணம்: $15 (அக்டோபர் 5க்கு முன்பாகப் பதிவு செய்பவர்களுக்கு $12)
இடம்: ஜாக்சன் தியேட்டர்ஸ் ஓலோனி காலேஜ் 43600 மிஷன் பொலிவர்ட் ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா
ச. திருமலைராஜன் |
|
|
More
'ஸ்ருஷ்டி' நாட்டியக் குழுவின் அமெரிக்க உலா பெப்பரப்பே வழங்கும் புதிய நாடகம் தங்க முருகன் விழா
|
|
|
|
|
|
|