Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நலம் வாழ | எனக்குப் பிடிச்சது
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
ஹன்ட்ஸ்வில்லில் சேலம் ஸ்ரீராம் கச்சேரி
'நிருத்யகல்யா' வழங்கும் ‘காஸ்மிக்ஸ்’
உமா தண்டாயுதபாணி நடத்தும் நடனப் பயிற்சிப் பட்டறை
சங்கீதாலயா வழங்கும் 'சங்கீத ரசானுபவம்'
அனுராதா ஸ்ரீதருக்கு பாராட்டு விழா
- நிஜன்|செப்டம்பர் 2010|
Share:
செப்டம்பர் 11, 2010 அன்று கர்நாடக சங்கீத ஆசிரியை திருமதி அனுராதா ஸ்ரீதர் அவர்களுக்குப் பாலோ ஆல்டோவில் உள்ள யூத சமுதாய மையத்தில் (Jewish Community Center, 4000, Middlefield Road, Palo Alto, CA 94303) மாலை 4 முதல் 6.30 ஒரு பாராட்டு விழா நடக்க உள்ளது. இதனை அவரது மாணவ மாணவியரும், அவர்களது பெற்றோர்களும் ஏற்பாடு செய்கின்றனர்.

'டிரினிடி ஸ்கூல் ஆஃப் மியூசிக்' என்ற இசைப்பள்ளியை சற்றேறக்குறைய 20 ஆண்டுகளாக நடத்தி வரும் அனுராதா, சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 5-வது குரு-சிஷ்ய இசைப் பரம்பரையைச் சேர்ந்தவர். தனது முப்பாட்டனார் லால்குடி ஸ்ரீராமையர் தியாகராஜ சுவாமிகளின் நேரடி சிஷ்யர் என்கிறார் அனுராதா. இசையில் லால்குடி பாணி என்பதை உருவாக்கி பிரபலப்படுத்திய வயலின் மேதை லால்குடி ஜெயராமன் அவர்கள் இவரது தாய்மாமன். சிறு வயதிலேயே பல ராகங்களை அடையாளம் அனுராதாவால் அடையாளம் காண முடிந்ததென்றால், காரணம் இந்தப் பாரம்பரியம்தான்.

அனுராதாவுக்குள் பொதிந்திருந்த இசையாற்றலை மெருகேற்றி வெளிக்கொண்டு வந்தவர் இவருடைய தாயும் குருவும் ஆன திருமதி ஸ்ரீமதி ப்ரம்மானந்தம் அவர்கள். தம் சகோதரர் லால்குடி ஜெயராமனோடு பல ஆண்டுகள் மேடையில் வயலின் வாசித்த அனுபவம் கொண்டவர் ஸ்ரீமதி. சென்னையில் 2000 வருடத்தில் தாயும் மகளும் வாசித்த கச்சேரிக்காக ஸ்ரீமதி சிறந்த வாத்தியக் கலைஞருக்கான விருதைப் பெற்றார்.
ரிச்சர்ட் கிப்ஸ் என்பவரின் இசையமைப்பில் 'த புக் ஆஃப் ஸ்டார்ஸ்' என்ற ஹாலிவுட் படத்துக்கு முதன்மை வயலின் கலைஞராக அனுராதா பணியாற்றியுள்ளார். 2007ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்டு 'ஆசிய இசைவிழா'வில் கிழக்கு-மேற்கு தாளவாத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றார். கிளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனைக் குழுவினர் 2008ம் ஆண்டு இவருக்குச் 'சிறந்த இசையாசிரியர்' விருதும், 2009ல் இவரது பள்ளிக்கு 'சிறந்த இசைப்பள்ளி' விருதும் கொடுத்துள்ளனர்.

அனுராதாவும் அவரது மாணவர்களும் பல சேவை நிறுவனங்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். நந்தலாலா மிஷன், கல்விக்காக ஆஷா, சங்கரா கண்சிகிச்சை அறக்கட்டளை, ஓசாட், பத்ரிகாஷ்ரம், சுநாமியால் பாதிக்கப்பட்டோர் என்று பல அமைப்புகள் இதில் அடங்கும்.

நிஜன்,
கலிஃபோர்னியா விரிகுடாப் பகுதி
More

ஹன்ட்ஸ்வில்லில் சேலம் ஸ்ரீராம் கச்சேரி
'நிருத்யகல்யா' வழங்கும் ‘காஸ்மிக்ஸ்’
உமா தண்டாயுதபாணி நடத்தும் நடனப் பயிற்சிப் பட்டறை
சங்கீதாலயா வழங்கும் 'சங்கீத ரசானுபவம்'
Share: 




© Copyright 2020 Tamilonline