'ஸ்ருஷ்டி' நாட்டியக் குழுவின் அமெரிக்க உலா பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கும் க்ரியாவின் 'தனிமை' தங்க முருகன் விழா
|
|
பெப்பரப்பே வழங்கும் புதிய நாடகம் |
|
- |அக்டோபர் 2010| |
|
|
|
|
|
அக்டோபர் 30, 2010 சனிக்கிழமை மாலை 4:30 மணிக்கு சிகாகோவின் 'பெப்பரப்பே' ப்ரொடக்ஷன்ஸ் நாடகக்குழு தனது நான்காவது புதிய படைப்பான 'மாங்கல்யம் வம்பு தானேனோ' என்னும் நாடகத்தை Metea Valley High School அரங்கில் (Aurora, IL) மேடையேற்ற உள்ளது.
வறுமையில் உழலும் ஒரு கிராமக் குடும்பத்தை மையமாகக் கொண்ட நாடகம் இது. ஓர் அமெரிக்க வரன் மூலமாக விடும் அழைப்பைக் கேட்டு, இரண்டு பெண்மணிகள் தத்தம் மகள்களையே மணமுடிக்க முயற்சிக்கிறார்கள். இருவரின் டாலர் கனவுகள் மோதும் ஓசையே 'மாங்கல்யம் வம்பு தானேனோ'. விறுவிறுப்பு, சிரிப்பு, சென்டிமென்ட் எதற்கும் குறைவிருக்காது.
அரவிந்த், தீபா, லக்ஷ்மி, மணி, நிவேதா, ராஜ், ரங்கா, ரஞ்சனி, ரவி, சேகர், சுதர்ஷன், ஸ்ரீராம், வசுமதி, வித்யா உட்படப் பதினான்கு பேர் நடித்துள்ள இந்த நாடகத்தை ரங்கா எழுதி, சேகருடன் இணைந்து இயக்கியுள்ளார். இசை: மாலதி, நிவேதா. அரங்க அமைப்பு: ரவி.
2007ல் தொடங்கப்பட்ட பெப்பரப்பே ப்ரொடக்ஷன்ஸ், சிகாகோ, கன்சாஸ், நியூயார்க் போன்ற பல இடங்களில் 3 நகைச்சுவை நாடகங்களை மேடையேற்றியுள்ளது. |
|
நுழைவுக்கட்டணம் (டின்னர் உட்பட):
பொது - $12/$14 VIP - $25 சிறுவர் (5-12 வயது) - $5/$6 (இரண்டாவதாகக் குறிப்பிட்டுள்ளது நிகழ்ச்சியன்று அரங்கத்தில் விலை)
மேலும் விவரங்களுக்கு இணையதளங்கள்: www.peppae.com, www.caifausa.org மின்னஞ்சல்: hello@caifausa.org
செய்திக் குறிப்பிலிருந்து |
|
|
More
'ஸ்ருஷ்டி' நாட்டியக் குழுவின் அமெரிக்க உலா பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கும் க்ரியாவின் 'தனிமை' தங்க முருகன் விழா
|
|
|
|
|
|
|