அனுராதா ஸ்ரீதருக்கு பாராட்டு விழா ஹன்ட்ஸ்வில்லில் சேலம் ஸ்ரீராம் கச்சேரி 'நிருத்யகல்யா' வழங்கும் ‘காஸ்மிக்ஸ்’ சங்கீதாலயா வழங்கும் 'சங்கீத ரசானுபவம்'
|
|
உமா தண்டாயுதபாணி நடத்தும் நடனப் பயிற்சிப் பட்டறை |
|
- |செப்டம்பர் 2010| |
|
|
|
|
|
பெண்களின் நளினத்தை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற கலை பரதக்கலை. நாற்பது வருடங்களுக்கு முன்பாகவே இக்கலையை மிகப்பலருக்குக் கற்பித்தவர் பத்மஸ்ரீ தண்டாயுதபாணிப் பிள்ளை அவர்கள். தமிழக முன்னாள் முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதா, ஸ்ரீவித்யா, வஹீதா ரெஹ்மான் ஆகியோருக்கு பரதம் கற்பித்தவர். பல தமிழ்ப் பாடல்களை எழுதி, மெட்டமைத்து நடன வடிவமைத்தவர். திருமதி. உமா தண்டாயுதபாணி அவரது சிஷ்யை மற்றும் மகள் ஆவார்.
இவர் 36 வருடங்களாக பரதக்கலையைக் கற்பித்து வருகிறார். எழுபதுக்கும் அதிகமான அரங்கேற்றங்களை நடத்தியுள்ளார். நூற்றுக்கும் அதிகமான நாட்டிய நாடகங்களைப் படைத்த்ருக்கிறார். அமெரிக்கா, ஆஸ்த்ரேலியா, மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்று நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
பதம், ஜாவளி, நட்டுவாங்கம் போன்றவற்றில் பல ஆராய்ச்சிகளைச் செய்து இந்திய அரசின் பல விருதுகளைப் பெற்று தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார். அவர் கலிஃபோர்னியாவின் வளைகுடாப் பகுதியில் தொடக்க, நடுநிலை மற்றும் முதுநிலை நடன மாணவர்களுக்குச் செயற்பட்டறைகள் நடத்தவிருக்கிறார் (Workshops for beginner, intermediate and advanced students of dance). |
|
நாள்: செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 3 வரை
இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள அணுகவும்: Priya-chandrasekar@yahoo.com
அலைபேசி: 650-533-6266 |
|
|
More
அனுராதா ஸ்ரீதருக்கு பாராட்டு விழா ஹன்ட்ஸ்வில்லில் சேலம் ஸ்ரீராம் கச்சேரி 'நிருத்யகல்யா' வழங்கும் ‘காஸ்மிக்ஸ்’ சங்கீதாலயா வழங்கும் 'சங்கீத ரசானுபவம்'
|
|
|
|
|
|
|