விஜயபதி தர்ஷராஜன் கவிதைகள்
|
|
ஒப்பில்லாத சுப்பு |
|
- அனந்த்|செப்டம்பர் 2010| |
|
|
|
|
|
கொத்தமங் கலத்துச் சுப்பு - தமிழ் கொஞ்சும் அவர்பாட்டுக் கீடுண்டோ செப்பு! (கொத்தமங்கலத்து)
எத்தனை எத்தனை பாட்டு - அவை எல்லாமே பாலோடு தேன்சேர்ந்த கூட்டு குத்தால வெள்ளம்போல் ஓட்டம் - அதில் குளித்துக் களிக்கும்நம் நெஞ்சில்கொண் டாட்டம்
ஏரு பிடிப்பவன் வீட்டில் - உள்ள இன்பமும் துன்பமும் காட்டஓர் பாட்டு போருக்குச் சென்றவர் நாட்டைக் - காக்கப் போனபின் வீடு திரும்பஓர் பாட்டு
காந்தி மகான் வில்லுப் பாட்டு - தேசக் காதலை மாந்தர் மனத்தினில் ஊட்டும் சாந்தி உலகினில் நாட்ட - நல்ல சங்கதி சொல்லி வழியையும் காட்டும்
பாட்டியும் பாட்டனும் கூட - அவர் பாட்டுச் சுவைதூண்டும் எழுந்துநின் றாட நாட்டு நடப்பினைப் பேசும் - பாட்டில் நாட்டுப் புறவாசம் நன்றாக வீசும் |
|
சீவாளிச் சத்தத்தில் நாட்டம் - என்று தில்லானா மோகனாம் பாள்கதை காட்டும் சாவா இலக்கியக் கூடம் - அவர் சாதனை யாவும் சரித்திரப் பாடம்
ஆறடி மேனிக் கவிஞர் - கலை யாவிலும் தேர்ந்து சிறந்த அறிஞர் நீறு துலங்கிடும் நெற்றி - அது நித்தம் தரும்தொழில் யாவிலும் வெற்றி
நெஞ்சத்தில் வேலனின் பக்தி - வாழ்வில் நேர்மை தவறாமை அவரது சக்தி அஞ்சலி செய்திட வாரும் - நூ(று) ஆண்டு நிறைவில் அவர்புகழ் கூறும்.
*****
(கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் நூற்றாண்டு விழாவை ஒட்டி இக்கவிதை வெளியிடப்படுகிறது. அவரது விரிவான வாழ்க்கைக் குறிப்பை 'முன்னோடி' பகுதியில் பார்க்கலாம்)
கவிஞர் அனந்த், கனடா |
|
|
More
விஜயபதி தர்ஷராஜன் கவிதைகள்
|
|
|
|
|
|
|