வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்: சித்திரைக் கொண்டாட்டம் உதவும் கரங்கள்: 'கலாட்டா 2006' 'ஸ்டேஜ் ·ப்ரண்ட்ஸ்' வழங்கும் ரகசிய சினேகிதியே நியூ யார்க்கில் தமிழர் திருவிழா-2006 இந்திரா பார்த்தசாரதி வழங்கும் நாடகப் பயிற்சிப்பட்டறை
|
|
'க்ரியா க்ரியேஷன்ஸ்' வழங்கும் நாடகம் கடவுளின் கண்கள் |
|
- |ஏப்ரல் 2006| |
|
|
|
மாயா, சுருதி பேதம் உட்படப் பல வெற்றி நாடங்களை வழங்கிய க்ரியா க்ரியேஷன்ஸ் தனது 5 வது நாடகத்தை மேடையேற்றத் தயாராகிக் கொண்டிருக் கிறது. 'கடவுளின் கண்கள்' என்ற இந்த நாடகத்தை TAR எழுதியுள்ளார். இதனை இயக்குவதுடன் பாத்திரம் ஏற்று நடிக்கவும் செய்கிறார் தீபா ராமானுஜம்.
விமர்சகர்கள், பார்வையாளர்கள் மற்றும் திரையுலகப் பிரமுகர்களிடையே சென்னையில் 'சுருதி பேதம்' பெற்ற அமோக வரவேற்பைத் தொடர்ந்து மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார் தீபா ராமானுஜம். "குறிப்பாக இயக்குனர் இமயம் கே. பாலச்சந்தர் அவர்களின் பாராட்டுரை மறக்க முடியாது" என்கிறார். (கேபியின் உரை www.kreacreations.com என்ற தளத்தில் காணக் கிடைக்கும்.) "கடவுளின் கண் களையும் சென்னைக்குக் கொண்டு போகும் எண்ணம் உள்ளது" என்கிறார் தீபா.
"க்ரியா இதுவரை தயாரித்தளித்த நாடகங்களிலிருந்து 'கடவுளின் கண்கள்' கண்டிப்பாக வித்தியாசமானதாக, சிந்திக்க வைக்கக் கூடியதாக இருக்கும். நிறைய மக்களை இது சென்றடைய வேண்டு மென்பதற்காகவே நுழைவுக் கட்டணத்தை வெறும் 10 டாலராக வைத்துள்ளோம்" என்கிறார் தீபா.
அரங்க நிர்வாகத்தில் உதவிசெய்ய விருப்பமுள்ளவர்களை க்ரியா வரவேற்கிறது. படைப்புகளில் பங்கேற்க விரும்புபவர்கள் kreacreations@yahoo.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
இதில் ராஜிவ் ஜெயராமன், சுபாஷிணி கிருஷ்ணமூர்த்தி, தீபா ராமானுஜம், நவின் நாதன், ஷிவகுமார் ஜெயராமன், கார்த்திக் ராமச்சந்திரன், நிர்மல் குமார், மணி கிருஷ்ணன், கீதா முத்துக்குமார், ஜெய் கணேஷ் ஆகியோருடன் மற்றும் சிலரும் நடிக்கிறார்கள். |
|
நாள்: ஞாயிறு, ஏப்ரல் 30. நேரம்: மதியம் 3:00 மணி மற்றும் மாலை 6:00 மணி இடம்: CET, San Jose நுழைவுக்கட்டணம்: $10 நுழைவுச் சீட்டு கிடைக்கும் இடங்கள்: ஹோட்டல் சரவணபவன் ஹோட்டல் கோமள விலாஸ் www.sulekha.com/bayarea
நாடகத்தைப் பற்றிய விவரங்களுக்கு: www.kreacreations.com |
|
|
More
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்: சித்திரைக் கொண்டாட்டம் உதவும் கரங்கள்: 'கலாட்டா 2006' 'ஸ்டேஜ் ·ப்ரண்ட்ஸ்' வழங்கும் ரகசிய சினேகிதியே நியூ யார்க்கில் தமிழர் திருவிழா-2006 இந்திரா பார்த்தசாரதி வழங்கும் நாடகப் பயிற்சிப்பட்டறை
|
|
|
|
|
|
|