Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நலம்வாழ | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதை பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
கதிரவனை கேளுங்கள்
தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப் படுகிறது? (பாகம் - 6)
- கதிரவன் எழில்மன்னன்|ஜூன் 2010|
Share:
இதுவரை:
பொருளாதாரச் சூழ்நிலை சற்று முன்னேறியுள்ளது. இப்போது எந்தத் துறைகளைர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆரம்பநிலை மூலதனம் கிடைக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஏதோ ஆரம்பிக்க வேண்டுமே என்று கும்பலைத் துரத்தி ஆரம்பித்துவிடக்கூடாது, உங்கள் திறனுக்குத் தகுந்த துறையில் ஆரம்பிக்க வேண்டும் என்று கண்டோம். ஆரம்பநிலை மூலதனத்தார் எத்துறைகளில் மூலதனமிடுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று விவரித்துக் கொண்டிருக்கிறோம். சென்ற பகுதிகளில், வலைமேகக் கணினி (cloud computing), வலைமேக ஊடகங்கள் (cloud media), கம்பி நீக்கம் (clearing out wires), சுத்த நுட்பம் (clean tech), என்ற CL துறைகளில் மிகுந்த மூலதன ஆர்வமுள்ளதாகக் கண்டோம். மேலும் வலைமேகக் கணினி ஏன் தற்போது முன்வந்துள்ளது என்பதற்கான காரணங்களையும் கண்டோம். சென்ற முறை வலைமேகக் கணினியின் முக்கிய உபதுறையான சேவை மென்பொருள் துறையைப் பற்றி விவரித்தோம். இப்போது, மற்ற வலைமேகக் கணினி உபதுறைகளைப் பற்றிய மேல் விவரங்களைக் காண்போம்.

*****



ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajan



மென்பொருள் சேவையைப் பற்றி அலசியாயிற்று, நல்லது. வலைமேகக் கணினியில் மற்ற உபதுறைகள் உள்ளன என்றீர்களே, அவற்றில் முக்கியமானது என்ன?

மென்பொருள் சேவையைப் பற்றி அலசிவிட்டதாகக் கூற முடியாது. ஓரளவுக்கு விவரித்துள்ளோம் என்றுதான் கூறலாம். அந்த உபதுறையைச் சார்ந்த மற்றொரு உபதுறையான வலைசாதனப் பயன்களும் வலைமேகச் சேவைகளாக்கப் படுவதைப் பற்றியும் விவரித்தோம். அதற்கு உதாரணமாகக் குப்பை மின்னஞ்சல் தவிர்த்தல் (spam filtering), தொலைத்தகவல் தொடர்பைத் துரிதமாக்கல் (wan acceleration) போன்றவற்றைப் பற்றிக் கூறினோம். சொல்லப் போனால், மென்பொருள் சேவை ஒரு மிகப்பெரிய வலைக் கணினி உபதுறையாகும். முடிவின்றி அதன் மூலை முடுக்குகளை விவரித்துக் கொண்டே போகலாம். ஆனால், நீங்கள் கேட்டபடி, வலைமேகக் கணினியின் பரபரப்பான இன்னொரு முக்கிய புதிய உபதுறையைப் பற்றி விவரிக்க வேண்டியிருப்பதால், மென்பொருள் சேவையை இப்போதுக்கு மூட்டைகட்டி வைக்கலாம்.

இன்னொரு வகை, மெய்நிகராக்கத்தைப் பயன்படுத்தி, ஒரு நிஜக் கணினியின் ஒரு பகுதியை, அதன் செயற்பாட்டு அமைப்பு மென்பொருளுடன் மட்டுமே தேவையானபோது பயன்படுத்திக் கொள்வது. இந்த வலைமேகக் கணினி வகையில், பயன்பாட்டு மென்பொருள் அம்சங்கள் எதுவுமே இருக்காது.
முக்கியமான வலைமேகத் துறை, கணினிகளையே வலைமேகத்திலிருந்துப் பயன்படுத்துகிறது. அதாவது, வலைமேகத்தில் அமைக்கப்பட்ட ஒரு மென்பொருளை சேவையாகப் பயன்படுத்துவதற்கு பதிலாக, நிறுவனங்கள் வலைமேகத்திலுள்ள கணினிகளை வேண்டும்போது வாடகைக்கு எடுத்து, அவற்றில் தங்கள் சொந்த மென்பொருட்களை நிறுவி நடத்திப் பயன்படுத்திக் கொள்வது. இது என்ன பழைய விஷயமான வழங்கிக் கணினி வாடகை (server hosting) விவகாரந்தானே, அதில் என்ன பரபரப்பு வேண்டிக் கிடக்கிறது, கொட்டாவிதான் வருகிறது என்கிறீர்களா? இது அப்படி இல்லை. மாதக் கணக்கில் முன்கூட்டியே சேவைக் கணினிகளை வாடகைக்கு எடுக்காமல், எவ்ப்போது எவ்வளவு தேவையோ, அதை நொடிக்கணக்கில் கூடவோ குறையவோ பயன்படுத்திக் கொண்டு, அதற்கு மட்டும் வாடகை தருவது. (வீடுகளில் மின்சாரம் அல்லது தண்ணீர் பயன்படுத்துமளவுக்கு கட்டணமளிப்பது போல்.)

இதிலும் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று உயர்நிலையில், பயன்பாட்டு மென்பொருட்களுக்குத் தேவையான மேடை இடைமுகத்தை (platform interface) சேவையாக அளிப்பது. இதற்கு உதாரணமாக, சேல்ஸ்ஃபோர்ஸ் நடத்தும் ஃபோர்ஸ்.காம் என்னும் சேவையையும், மைக்ரோஸாஃப்ட் புதிதாக ஆரம்பித்திருக்கும் அஷூர் (Azure) என்னும் சேவையையும் குறிப்பிடலாம். இத்தகைய சேவைகள் லினக்ஸ், விண்டோஸ் போன்ற அடிப்படை வசதிகளைவிட ஒரு நிலை உயர்ந்தவை. மேலும், மின்வலையில் பல கணினிகளையும் பல சேவைகளையும் சேர்த்தளிக்கும் மேடைகளாக அமைகின்றன. இத்தகைய வலைக் கணினிச் சேவைகள் மைக்ரோஸாஃப்ட் போன்ற ஒரு சில நிறுவனங்களே அளிக்க முடியும். ஓரிரண்டு ஆரம்ப நிலை நிறுவனங்கள் லேம்ப் (LAMP) எனப்படும் லினக்ஸ், அபாச்சி, மைஸீக்வெல் (MySQL) மற்றும் PHP எனப்படும் நுட்பங்கள் அடங்கிய இணையச் சேவைகளூக்கு மேடை மென்பொருள் சேவையளிக்க முயலுகின்றன. இந்த வகைக்கு, இடைமுகச் சேவை (Platform as a Service-PaaS) என்று பெயர்.
இன்னொரு வகை, இன்னும் அடிப்படையானது. மெய்நிகராக்கத்தைப் பயன்படுத்தி, ஒரு நிஜக் கணினியின் ஒரு பகுதியை, அதன் செயற்பாட்டு அமைப்பு மென்பொருளுடன் (operating system software) மட்டுமே தேவையானபோது பயன்படுத்திக் கொள்வது. இந்த வலைமேகக் கணினி வகையில், பயன்பாட்டு மென்பொருள் அம்சங்கள் எதுவுமே இருக்காது. எதெல்லாம் தேவையோ, அதைப் பயனர்களே பல மேகக் கணினிகளைக் கொண்டு நிறுவிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது கடினம் என்றாலும், எந்த மென்பொருள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் என்பதால், மிகவும் இணக்கமானது (flexible) என்பதால் மேடை இடைமுக வகையைவிட இந்த அடிப்படை மேகக் கணினியையே பலரும் விரும்பிப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், சேமிப்பகங்களையும் (storage) கூட வலைமேகத்திலிருந்தே அளிக்கவும் ஆரம்பித்துள்ளனர். இது எதாவது இக்கட்டிலிருந்து மீள்வதற்காக மற்றொரு பதிப்பெடுத்து (backup copy) வைத்துக் கொள்வது மட்டுமன்றி, எந்த பயன்பாட்டுக்கும் வேண்டிய முதல்நிலை சேமிப்பகமாகவும் (primary online storage) பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

இந்த வகையை இப்போது அடிப்படைக் கட்டுமான கணினிச் சேவை (Infrastructure as a Service - IaaS) என்று அழைக்கிறார்கள். PaaS வருவதற்கு முன்னமே IaaS புழக்கத்திலிருந்தது. இந்த அடிப்படை கட்டுமான சேவைக்கணினி வசதிகளை முதன்முதலாக அறிமுகம் செய்தது அமேஸான் நிறுவனந்தான். அவர்கள் அமேஸான் இணைய சேவைகள் என்ற பெயரில், கணினி சேவை, சேமிப்பக சேவை இரண்டையும் அளிக்க ஆரம்பித்தனர். அதன் பிறகுதான் ரேக் ஸ்பேஸ் (Rack Space) போன்ற வாடகைக் கணினி நிறுவனங்கள் சேவைக் கணினிகளை மாத வாடகைக்குத் தருவதுடன் மேகக் கணினிகளாகவும் தர ஆரம்பித்தன.

இந்தக் கட்டுமான மேகக் கணினி சேவைகள், பயன்பாட்டு மென்பொருட்களை முன்செலவின்றி வெகு எளிதாக ஆரம்பித்து நடத்த முடிவதால், இரண்டாம் இணைய (Web 2.0) நிறுவனங்கள் அவற்றை தங்கள் ஆரம்ப காலத்தில் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன. பல சிறிய மற்றும் நடுநிலை நிறுவனங்களுக்கும் PaaS வரப்பிரசாதமாக உள்ளது. தற்போது சில பெரும் நிறுவனங்களும் கூட சிறிய பயன்பாட்டு மென்பொருட்களுக்கு கட்டுமான மேகக் கணினிகளை சிறிதளவில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. இந்தப் போக்கு வளர்ந்து இன்னும் சில வருடங்களில் சகஜமாகி விடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline