Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2010
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | அமெரிக்க அனுபவம் | சாதனையாளர் | நலம்வாழ
Tamil Unicode / English Search
ஜோக்ஸ்
ஏப்ரல் 2010: ஜோக்ஸ்
- |ஏப்ரல் 2010|
Share:
பாட்டி, எப்பப் பாத்தாலும் உருப்பட மாட்டேன்னு என்னைத் திட்டுவியே. இப்ப மந்திரி சம்பளம் வாங்கறேன், தெரியுமா?

எதுக்குடா அடுத்தவன் சம்பளத்தையெல்லாம் வாங்கறே?

வி. காமாட்சி,
சான் ஹோஸே
*****


பண்ணையார் வீட்டு வாசல்ல கிழவிங்க கூட்டமா இருக்கே, என்ன விஷயம்?

அதுவா, அவர் மகனுக்குக் கன்னத்தில குழி விழற பொண்ணு வேணும்னு தரகர் சொன்னாராம்....

வி. காமாட்சி,
சான் ஹோஸே
*****


டாக்டர், ஒரு பல்லுக்குப் பதிலா ரெண்டைப் பிடுங்கிட்டிங்களே!

அதுவா! போர்டைப் பாக்கலியா? 'பை ஒன் கெட் ஒன் ஃப்ரீ'ன்னு எழுதியிருக்கே!

வி. காமாட்சி,
சான் ஹோஸே
*****
அவர்: அது போலீஸ்காரார் வீட்டு நாய்தான்னு எப்படி இவ்ளோ உறுதியா சொல்றே?
இவர்: பின்ன, அதுக்கு இவ்ளோ பெரிய தொப்பை இருக்குதே, அதுனாலதான் சொல்றேன்.

தெனாலி
*****


நோயாளி: டாக்டர் வலி தாங்கல, உயிரே போயிடும்போல இருக்கு.
டாக்டர்: பயப்படாதீங்க. நான் எதுக்கு இருக்கேன். ஆபரேஷன் பண்ணாம அப்படியெல்லாம் நடக்க விட்டுருவேனா என்ன?

தெனாலி
*****


உறவினர்: பையன் என்ன செய்யறதா இருக்கான்?
இவர்: மேல படிக்கப் போறான்
உறவினர்: டாக்டருக்கா, எஞ்சினியருக்கா?
இவர்: அட நீங்க வேறங்க. அவன் மாடி ரூம்ல போய் பேப்பர் படிக்கப் போறான்....

தெனாலி
*****


அவன்: எங்க மாமா மாதிரி நானும் கலெக்டர் ஆகணும்னு ஆசைப்படறேன்.
இவன்: ஓ. உங்க மாமா கலெக்டராடா, எந்த ஊர் கலெக்டர்?
அவன்: இல்லடா, எங்க மாமாவும் சின்ன வயசுல கலெக்டர் ஆகணும்னுதான் ஆசைப்பட்டாராம்.

தெனாலி
*****
Share: 




© Copyright 2020 Tamilonline